40 வயதுக்கு பிறகு ஆண், பெண் இருபாலருக்கும் ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படும். எலும்புகள், தசைகளின் அடர்த்தியில் பாதிப்பு நேரும். உடல் பருமன் பிரச்சினையும் ஏற்படும். அத்தகைய பாதிப்புகளை தடுப்பதற்கு புரதம் அவசியமானது. 40 வயதை கடந்தவர்கள் தினமும் தங்கள் உடல் எடையின் ஒவ்வொரு கிலோவுக்கும் ஒரு கிராம் என்ற அளவிலாவது புரதத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளையும், எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் புரதத்தின் பங்களிப்பு முக்கியமானது.
அசைவ பிரியர்கள் இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை தினமும் இரு வேளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். முட்டை பிரியர்கள் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது. சைவம் சாப்பிடுபவர்கள் சோயா பொருட்கள் மற்றும் பால் பொருட்களை அதிகம் சாப்பிடலாம். அதில் புரதம் அதிகம் கலந்திருக்கிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கலந்த பொருட்களையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிலிருக்கும் நல்ல கொழுப்பு சருமம் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் இருப்பதற்கு உதவி செய்யும். மேலும் நீரிழிவு பிரச்சினையில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உதவும். விரைவிலேயே வயதான தோற்றம் உருவாகுவதையும் தடுக்கும்.
அதுபோல் வைட்டமின் ஏ, சி. இ, கால்சியம், பொட்டாசியம் போன்ற வைட்டமின்களும் 40 வயதை கடந்தவர்களுக்கு அவசியம். அவை சூரிய கதிர்வீச்சுகளின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்கும். வயதான தோற்ற பொலிவையும் தவிர்க்க உதவும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 40 வயதை கடந்த பெண் களுக்கு ஹார்மோன் சமச்சீரின்மை தோன்றுவதால் இன்சுலின் அளவு அதிகரித்துவிடும். தைராய்டு சுரப்பியின் செயல்பாடும் குறைந்துபோய்விடும். அதனால் ஹார்மோன் மற்றும் தைராய்டு பரிசோதனை மேற்கொண்டு அதற்கேற்ப உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். 40 வயதை கடந்த ஆண்களை விட பெண்களுக்குத்தான் தசை இயக்கங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும். அவர்கள் முறையாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருவதும் அவசியமானது.
Showing posts with label NEW. Show all posts
Showing posts with label NEW. Show all posts
Sunday, 31 March 2019
Sunday, 4 March 2018
புரதம் நிறைந்த வெள்ளைக்கரு
புரதம் நிறைந்த வெள்ளைக்கரு | காலை உணவுடன் முட்டையையும் சேர்த்துக் கொள்வது நல்லது. ஊட்டச்சத்து மிகுந்த முட்டை, உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. உடலுக்கு தேவையான ஆற்றலை அது தருகிறது. முட்டையை ஆம்லெட்டாகவோ, வேகவைத்தோ, பொரித்தோ சாப்பிடலாம். இளம் வயதைக் கடந்தவர்கள் வேகவைத்த முட்டையில் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு, வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வரலாம். முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! மஞ்சள் கருவை நீக்கி விட்டால் முட்டையில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்துபோய்விடும். கொழுப்பை விரும்பாதவர்கள், அதிக கொழுப்பு அளவை கொண்டிருப்பவர்கள் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது. முட்டையில் அதிக புரதம் உள்ளது. குறிப்பாக வெள்ளைக்கருவில் உடலுக்கு நன்மை தரும் குறைந்த கொழுப்பு கொண்ட புரதம் நிரம்பியிருக்கிறது. அதனால் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான புரதச் சத்து கிடைத்துவிடும். கெட்ட கொழுப்பும் குறையும். முட்டையின் மஞ்சள் கருவில் அதிக கலோரி இருக்கிறது. அதனை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வந்தால் குறைந்த கலோரிகளே உடலுக்கு கிடைக்கும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வெள்ளைக்கருவில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். இதயத்துக்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் வலு சேர்க்கும். ரத்த நாளங்களை விரிவுபடுத்தவும், ரத்த ஓட்டம் சீராக நடைபெறவும் உதவும். வெள்ளைக்கருவில் வைட்டமின் ஏ, பி 12 மற்றும் வைட்டமின் டி நிறைந்திருக்கிறது. வைட்டமின் பி12 தசை சிதைவு, கண் புரை, ஒற்றைத்தலைவலி போன்ற பிரச்சினைகளில் இருந்து காக்க துணைபுரியும். வெள்ளைக்கருவை சாப்பிடும் வேளையில் மஞ்சள் கருவை அறவே ஒதுக்கிவிடவும் கூடாது. அதிலும் ஊட்டச்சத்துகள் உள்ளன. முக்கியமாக கால்சியம், இரும்புச்சத்து போன்றவை வெள்ளைக்கருவைவிட மஞ்சள் கருவில் அதிகம் இருக்கின்றன. எனினும் அதிக கொழுப்பு, உடல் எடை பிரச்சினை, சர்க்கரை நோய், ஜீரணம் தொடர்புடைய பிரச்சினைகள் கொண்டவர்களுக்கு வெள்ளைக்கரு சாப்பிடுவதே சிறந்த தீர்வாக அமையும்.
Saturday, 3 March 2018
சுண்டைக்காயின் சிறப்பு
சுண்டைக்காயின் சிறப்பு சுண்டைக்காய் உருவத்தில் சிறியதுதான். ஆனால் அதில் அடங்கியிருக்கும் ஆரோக்கிய நன்மைகளின் பட்டியல் பெரியது. இதன் இலேசான கசப்புச் சுவை சிலருக்குப் பிடிக்காது என்றபோதும், மருத்துவக் குணங்கள் சுண்டைக்காயின் சிறப்பாகின்றன. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. எனவே உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. சுண்டைக்காயை வாரம் இருமுறை சமைத்துச் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடையும். உடல்சோர்வு நீங்கும். சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக்கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும். சுண்டைக்காய் மட்டுமல்ல, அதன் இலைகள், வேர், கனி என முழுத் தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவை தடுக்கக்கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் செரிமானத் தன்மையை சிறப்பாக்கும். சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச் சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகின்றன. வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். அது மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். முற்றிய சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்துச் சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கிச் சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள கசடுகளை நீக்கும். சுண்டை வற்றலை நெய்யில் வறுத்துப் பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டுவந்தால் நீரிழிவு நோயால் உண்டாகும் கை, கால் நடுக்கம், மயக்கம், உடல்சோர்வு, வயிற்றுப் பொருமல் போன்றவை நீங்கும். சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் தயாரித்து அருந்தி வந்தால் ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும்.
Sunday, 18 February 2018
வைட்டமின் சத்து உடலுக்கு ஏன் தேவை?
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வைட்டமின்களும், தாதுக்களும் அவசியமான ஊட்டச்சத்துகளாக விளங்குகின்றன. எந்தெந்த உணவுகளில் அத்தகைய வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளடங்கி இருக்கின்றன? அவற்றை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.
1. வைட்டமின் ஏ:
நன்மைகள்: பொதுவான உடல் வளர்ச்சி மற்றும் கண்கள் ஆரோக்கியத்திற்கு இது முக்கிய பங்கு வகிக்கிறது. பற்கள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கிறது.
சாப்பிடவேண்டியவை: கேரட், ஆரஞ்சு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, முலாம்பழம். இவை அனைத்திலும் கரோட்டின் நிறமி அதிகளவில் இருக்கிறது.
2. வைட்டமின் பி:
நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உடலுக்கு தேவையான சக்தியையும் வழங்குகிறது.
கிடைக்கும் பொருட்கள்: பதப் படுத்தப்படாத உணவுகள், குறிப்பாக முழு தானியங்கள், உருளைக்கிழங்கு, வாழைப்பழங்கள், பீன்ஸ், மிளகுத்தூள், பயறு வகைகள், வெல்லப்பாகு.
3. வைட்டமின் சி:
நன்மைகள்: ரத்தக்குழாய்களை வலுப்படுத்தும். சருமத்திற்கு நெகிழ்வுத்தன்மையும் கொடுக்கும்.
சாப்பிட வேண்டியவை: ஆரஞ்சு, கொய்யா, சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கிவி பழம், திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, பரங்கிக்காய்.
4. வைட்டமின் டி:
நன்மைகள்: எலும்புகளை வலுப்படுத்தும் தன்மை கொண்டது. ஆரோக்கியமான எலும்புகளின் வளர்ச்சிக்கும் துணைபுரியும்.
சாப்பிட வேண்டியவை: காலையில் சில நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றாலே உடலுக்கு தேவையான வைட்டமின் டி உற்பத்தியாக தொடங்கிவிடும். முட்டை, மீன், காளான்களை சாப்பிடுவதன் மூலமும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெறலாம்.
5. வைட்டமின் ஈ:
நன்மைகள்: ரத்த சுழற்சியை சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாதுகாக்கும்.
சாப்பிடவேண்டிய பொருட்கள்: பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது. பிறவகை கொட்டகைகள், சூரியகாந்தி விதைகள், தக்காளி போன்றவற்றிலும் அதிகம் உள்ளது.
6. வைட்டமின் கே:
நன்மைகள்: ரத்தக்குழாய்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது.
சாப்பிடவேண்டிய பொருட்கள்: பச்சைக்காய்கறிகள், கீரை வகைகள், ப்ராக்கோலி.
7. போலிக் அமிலம்:
நன்மைகள்: புதிய செல்கள் உருவாக்கத்திற்கு உதவுகிறது. பெண்களுக்கு பிரசவகால சிக்கலையும் தடுக்கும்.
சாப்பிடவேண்டிய பொருட்கள்: பச்சைக்காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், பீன்ஸ், பட்டாணி, பயறு வகைகள், ப்ராக்கோலி, காலிபிளவர், பீட்ரூட், சோளம்.
8. கால்சியம்:
நன்மைகள்: பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு துணைபுரியும்.
சாப்பிடவேண்டிய பொருட்கள்: பால் பொருட்களான தயிர், பாலாடைக்கட்டி, பால், சோயா தயிர், கருப்பட்டி.
9. இரும்புச்சத்து:
நன்மைகள்: உடல் தசைகளை வலுப்படுத்தும். ரத்த அளவை சீராக்கும்.
சாப்பிடவேண்டிய பொருட்கள்: சோயாபீன்ஸ், தானியங்கள், பூசணி விதை, பீன்ஸ், பருப்புவகைகள், கீரை வகைகள்.
10. துத்தநாகம்:
நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். கருவுறுதல் மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும்.
சாப்பிடவேண்டிய பொருட்கள்: கடல் உணவுகள் துத்தநாகம் நிறைந்தவை. கீரை வகைகள், முந்திரி பருப்பு, பீன்ஸ், கருப்பு சாக்லேட்டுகள் போன்றவற்றிலும் நிறைந்திருக்கிறது.
11. குரோமியம்:
நன்மைகள்: உடலுக்கு தேவையான குளுக்கோஸை வழங்கும். மேலும் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான சக்தியை அளிக்கும்.
சாப்பிடவேண்டிய பொருட்கள்: முழு தானியங்கள், பச்சைக்காய்கறிகள், கீரைகள்.
Saturday, 17 February 2018
தேடினால் தொலையும் தூக்கம்!
தேடினால் தொலையும் தூக்கம்! டாக்டர் ஜி. ராமானுஜம் மனித இனம் சூரிய வெளிச்சத்தைப் பொறுத்தே தன்னுடைய தூக்கம், விழிப்பை அமைத்துக்கொண்டிருக்கிறது உடல் பருமனுக்குத் தூக்கமின்மையும் ஒரு முக்கியக் காரணம் தூக்கமின்மைக்கு முக்கியக் காரணம், மனப் பதற்றம் தூக்கம் என்பது ஆரோக்கியத்தையும் உடலையும் இணைக்கும் ஒரு தங்கச் சங்கிலி - தாமஸ் டெக்கர் அரிதிலும் அரிதான இந்த மானிடப் பிறவியில், மூன்றில் ஒரு பங்கு தூக்கத்திலேயே கழிகிறது. இதிலிருந்தே தூக்கம் மனிதர்களுக்கு எவ்வளவு இன்றியமையாதது எனப் புரியும். சில நாட்கள் தூங்காமல் இருந்தாலே மனித உடலில் பல பாதகமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனம் சூரிய வெளிச்சத்தைப் பொறுத்தே தன்னுடைய தூக்கம், விழிப்பை அமைத்துக்கொண்டுவந்திருக்கிறது. அதற்கு ஏற்றவாறே நமது உடலும் சூரியகாந்தி மலர்களைப் போல் சூரிய வெளிச்சத்துக்கு ஏற்றவாறு பகலில் வேலை செய்யவும் இரவில் ஓய்வெடுக்கவும் பழகியுள்ளது. கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட இரவானதும் சுமார் ஏழு –ஏழரை மணிக்கே மக்கள் தூங்கச் சென்றுள்ளனர். இரவைப் பகலாக்கும் மின்சாரத்தின் பரவலாக்கத்துக்குப் பின்னரே தூங்கச் செல்லும் நேரம் தாமதமாகத் தொடங்கியது. பின்னர் வானொலி, தொலைக்காட்சி, கணினி என ஒவ்வொன்றாகப் படுக்கையறையை ஆக்கிரமிக்க, இறுதியில் செல்பேசியின் வருகையால் பலரும் மறுநாள்தான் தூங்கச் செல்வது என்றாகிவிட்டது. என்னதான் அதிநவீன ஐபோனைப் பார்த்துக்கொண்டே படுத்துக் கொண்டிருந்தாலும், அந்தி கருத்தவுடனேயே தூங்கச் சென்ற ஆதிமனிதன் காலத்திலிருந்து நம்முடைய உடல் பெரிதாக மாறிவிடவில்லை. குறையும் எதிர்ப்பு ஆற்றல் தூக்கத்தின்போது உடலுக்குள் நிகழும் செயல்கள் பற்றி இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ளப்படவில்லை. எனினும், உயிரினங்கள் எல்லாவற்றுக்குமே தூக்கம் மிக முக்கியம். அதுவும் உயிரினங்களில் மூளையின் செயல்பாடுகள் சிக்கலாகச் சிக்கலாகத் தூக்கத்தின் தேவையும் அதிகரிக்கிறது. தூங்காமல் இருக்கும்போது உடலில் ஸ்டீராய்டு ஹார்மோன்கள் அதிகமாகச் சுரப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. உடல் பருமனுக்குத் தூக்கமின்மையும் ஒரு முக்கியக் காரணம். நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைதல் போன்ற பல எதிர்விளைவுகளும் ஏற்படுகின்றன. தூக்கமின்மையால் வரும் கவனக் குறைபாட்டால் பல விபத்துகள் ஏற்படுகின்றன என்பதும் அதிர்ச்சியூட்டும் உண்மை. கவலையால் வராத தூக்கம் தூக்கமின்மைக்கு ஒரு முக்கியக் காரணம், மனப் பதற்றம். தூங்கப் போகும்போதுதான் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஒன்றில் செருப்பைத் தொலைத்தது பற்றி வருத்தப்படவும், 20 ஆண்டுகளுக்குப் பின் வரப்போகும் மகளின் திருமணத்தைப் பற்றிக் கவலைப்படவும் தொடங்குகிறோம். ஏனென்றால், பகல் முழுதும் வேறு வேறு வேலைகள் நமது கவனத்தை ஆக்கிரமித்து இருந்திருக்கும். இரவு வந்தவுடன் சிந்தனை வௌவால்கள் சிறகடித்துப் பறக்க ஆரம்பிக்கும். இன்னும் சிலருக்கு வேறொரு கவலையால் தூக்கம் வராமல் போய்விடும். தூக்கம் வரவில்லையே என்ற கவலைதான் அது! குடிப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லையே என்ற கவலையால் குடிப்பதைப் போன்றதுதான் இதுவும். மகிழ்ச்சியைப் பற்றி ஓஷோ கூறும்போது 'தேடுவதை நிறுத்துங்கள். தேடியது கிடைக்கும்' என்பார். அதாவது மகிழ்ச்சியைத் தேடி ஓடாமல் அமைதியாக இருந்தோமென்றாலே மகிழ்ச்சி தானாக நம்மைத் தேடி வரும். அதுபோல்தான் தூக்கமும். தூங்கவிடாத சிந்தனை தூக்கம் வரவில்லையே எனக் கவலைப்பட்டாலே தூக்கம் தொலைந்து போய்விடும். தூங்குவது இயல்பாக நடைபெறாமல், அதற்காகப் பெரிதும் முயற்சி மேற்கொண்டால் 'மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை' என 'முதல் மரியாதை' திரைப்படப் பாடல் வரிபோல் எதிர்மறையாகவே முடிந்துவிடும். பதவி, புகழ், நல்ல பெயர், விளம்பரம் போன்றவற்றைப் போல் தூக்கமும் தானாக வருவதே சிறப்பாகும். இன்னும் சிலர் மது, காபி, தேநீர், குளிர்பானங்கள் போன்றவை தூக்கத்துக்கு உதவும் என நினைத்துப் பயன்படுத்துவார்கள். அவை தற்காலிகமாகத் தூக்கத்தைத் தந்தாலும், சொந்தச் செலவில் சூனியம் வைப்பதுபோல் நாளடைவில் தூக்கமின்மையை இவை அதிகரித்துவிடும். தூங்கும் அறைக்குள் சிந்தனைகளுக்கும் செல்போன்களுக்கும் தடா போட வேண்டும். நல்ல தூக்கத்துக்கு உடற்பயிற்சி உறுதுணை. இவ்வளவு சிறப்புமிக்க தூக்கம் முக்கியமே என்றாலும், அளவுக்கு அதிகமாகத் தூங்குவதும் சமநிலைச் சீர்குலைவை ஏற்படுத்தும். எப்படி? கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர் தொடர்புக்கு: ramsych2@gmail.com
தங்கம்போல ஜொலிக்க… மஞ்சள்!
தங்கம்போல ஜொலிக்க… மஞ்சள்! டாக்டர் வி. விக்ரம்குமார் பெண்களுக்கு நோய்கள் ஏற்படாமல் தடுத்ததில் மஞ்சளுக்கு நெடுங்காலமாக மிகப் பெரிய பங்கு உண்டு. மாதவிடாய் நாட்களில் உண்டாகும் கிருமிகளை அழிக்கவும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் முறை பயன்பட்டிருக்கிறது. உடலில் தேவையில்லாமல் முளைக்கும் ரோமங்களை இயற்கையான முறையில் நீக்க மஞ்சளைத் தவிர சிறந்த பொருள் வேறெதுவுமில்லை. கிருமிநாசினி செய்கை கொண்டது என்பதால், தோல் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் வல்லமையும் மஞ்சளுக்கு இருக்கிறது. பாடல் உணர்த்தும் உண்மை 'மஞ்சள் குளிதனக்கு மாறாத்துர்க் கந்தமோடு' எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல், மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால் உடலில் ஏற்படும் நாற்றம், தோல் நோய்கள், சில வகையான கப நோய்கள் போன்றவை நீங்கும் என்பதை உணர்த்துகிறது. மஞ்சள் குளியலால் தலைபாரம், தலைவலி குறைவதாக சமீபத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. 'மஞ்சள் தேய்த்துக் குளிப்பது அநாகரிகமான செயல்' என்று இன்றைய தலைமுறையினர் கருதும் நிலையில், அதன் பயன்களை முந்தைய தலைமுறையிடம் கேட்டால் மஞ்சளின் மகிமை குறித்து நமக்குப் புரியும். மஞ்சளை அரைத்து, அதைக் குளிப்பதற்குப் பயன்படுத்தும் வயதான பாட்டிகளின் தோல் ஆரோக்கியத்தை இன்றும் நம்மால் கண்கூடாகப் பார்க்க முடியும். மேனிக்கு மருந்து இன்றைய நகரவாசிகள் சமையல் தவிர்த்து மஞ்சளை வேறு எதற்கும் பயன்படுத்தாத நிலையில், மஞ்சள் குளியல் முறை மீண்டும் உயிர் பெற்றால், தங்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்து பெண்கள் தப்பித்துக்கொள்வதற்கு, நல்லதொரு பாதுகாப்புக் கவசம் கிடைக்கும். தோலில் பாதிப்பு உண்டாகாமல் 'பள பள'வென ஜொலிக்கும் தேகத்தைப் பெற, மஞ்சள் தேய்த்துக் குளிப்பது பயன் தரும் என்பதை 'பொன்னிறமாம் மேனி புலால் நாற்றமும் போம்' என்ற பாடல் வரியின் மூலம் விளக்குகிறார் சித்தர் அகத்தியர். மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால் தோல் புத்துயிர் பெறுவதோடு, தேகத்தில் உருவாகும் வியர்வை நாற்றமும் மறையும் என்பதுதான் இதன் பொருள். மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால், தோல் சுருக்கம் ஏற்படுவது தள்ளிப்போவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மஞ்சள் தேய்த்துக் குளித்து வருவதால் பாதங்களில் தோன்றும் பித்த வெடிப்புகள் தீவிரமடையாது. ஈரமான இடங்களில் தொடர்ந்து இருப்பதால் உண்டாகும் சேற்றுப் புண் வராமலும் தடுக்கப்படும். மஞ்சள் நீரூற்றின் மகிமை பெரும்பாலான வடநாட்டுத் திருமணங்களில், மணமக்களுக்கு 'மஞ்சள் பூச்சு' நிகழ்வு தவறாமல் இடம்பெறுகிறது. கிருமிகளை அழிப்பதும், முகப்பொலிவை உண்டாக்குவதும், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதும்தான் 'மஞ்சள் பூச்சு' செய்வதன் விஞ்ஞானப் பின்னணி. தமிழ்க் கலாச்சாரத்தில் ஊறிக் கிடக்கும் மஞ்சள் நீரூற்று விழாக்களின் பாரம்பரியத்திலும் நோய்களை அழிக்கும் அறிவியல் உள்ளது. தேங்காய்ப் பாலோடு மஞ்சள் கலந்து குளிக்கும் வழக்கம் மலையாள மக்களிடம் இன்றளவும் தொடர்கிறது. கலப்பட மஞ்சள்! மஞ்சள் போலவே மணமிக்க கஸ்தூரி மஞ்சளையும் குளிப்பதற்குப் பயன்படுத்தலாம். இதை அரைத்து உடலில் தேய்த்துக் குளிப்பதால், உடலில் உண்டாகும் சிறுசிறு கொப்பளங்கள், அரிப்பு, கரப்பான் எனப்படும் ஒரு வகையான தோல் நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு. முகப் பருக்களில் கிருமி சஞ்சாரம் ஏற்படுவதும் தடுக்கப்படும். குளித்து முடித்த பிறகு நல்ல வாசனையையும் கொடுக்கும். சில கடைகளில் கிடைக்கும் மஞ்சள் தூளில் மரத் தூள், மாவுப் பொருள் போன்றவற்றைக் கலப்படம் செய்துவிடுகின்றனர். 'வெளியில் பூசிக் குளிப்பதற்குத் தானே, கலப்படம் இருந்தால் என்ன?' என்று சாதாரணமாக இருந்துவிடக் கூடாது. கலப்பட மஞ்சளை உட்கொள்வதால் மட்டுமல்ல, வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்தினாலும் உடலுக்குப் பாதகம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. தரமற்ற மஞ்சள் நிச்சயமாகத் தோலுக்குப் பாதிப்புகளை உண்டாக்கும். 'மஞ்சள் தேய்த்துக் குளிப்பது தோலுக்குப் பாதகமானது' என்று தவறாகப் பிரசாரம் செய்துவிட்டு, கிருமிநாசினி கிரீம்களிலும், பாடி லோஷன்களிலும் மஞ்சளின் சாரத்தை வணிக நிறுவனங்கள் சேர்ப்பதாகச் சொல்கிறார்கள். நம்மில் பலரும் வெறும் விளம்பரங்களுக்கு மயங்குகிறோம்! இனிமேலாவது உண்மைப் பலன்களுக்கு மயங்குவோம். கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com
சர்க்கரைக்கு கடிவாளம் போடும் ‘பீன்ஸ்’
சர்க்கரைக்கு கடிவாளம் போடும் 'பீன்ஸ்' | சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். பீன்சில் உள்ள கார்போஹைட்ரேட் மெதுவாகக் கரைவதால் அது ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுப்பதாகக் கூறப்படுகிறது. அது மட்டுமல்ல, பீன்சில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. தொடர்ந்து பீன்ஸ் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள பிளேவனாய்டுகள், புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து அந்நோய் வராமல் தடுக்கும். வேகவைத்த காய்களை மனிதக் குடல் எளிதில் ஜீரணிப்பதுடன், அதன் சத்துகளை எளிதாக உட்கிரகிக்கும். வேகவைத்த பீன்சை சாப்பிட்டால், அது குடலியக்கத்தைச் சீராக்கி, செரிமானப் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். 100 கிராம் பீன்சில் நார்ச்சத்தின் அளவு 9 சதவீதம். இந்த நார்ச்சத்து, குடலின் உட்புறச் சுவர் களைப் பாதுகாத்து, நச்சுத் தன்மைகளை வெளியேற்றும். பீன்சில் ஆன்டி ஆக்சிடன்ட்டுகள், புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம், போலேட், தாமிரம், இரும்புச்சத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகிய கனிமச் சத்துகள் இருப்பதால், இது உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கும், உடலின் ஆரோக்கியம் காக்கும், இதயத்துக்கும் இதம் சேர்க்கும். பீன்சில் உள்ள சிலிக்கான், எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. மற்ற காய்கறிகளைவிட பீன்சில் உள்ள சிலிக்கான் எளிதில் உறிஞ்சப்படுவதோடு, செரிமானமும் அடையும். பச்சை பீன்சில் உள்ள கரோட்டினாய்டுகள் சருமத்தின் ஆரோக்கியம் காக்கும், முதுமை அறிகுறி களை தள்ளிப்போட உதவும்.
ஆரோக்கியத்தை நொறுக்கும் நொறுக்குத் தீனி
ஆரோக்கியத்தை நொறுக்கும் நொறுக்குத் தீனி | பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனேகமானவர்கள் நொறுக்குத் தீனி பிரியர்களாக உள்ளனர். நொறுக்குத் தீனி தனது சுவையால் அவர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ஆனால் நொறுக்குத் தீனி சாப்பிடும் பழக்கம், நாளடைவில் ஆரோக்கியத்தையே உருக்குலைக்கும். எனவே, பெரியவர்கள் நொறுக்குத் தீனி சாப்பிடாமல் தவிர்ப்பதுடன், குழந்தைகளுக்கும் அப்பழக்கத்தை ஊக்குவிக்காமல் இருப்பது நலம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பற்றி எடுத்துக்கூறி, அதை பழக்கப்படுத்துவது பெற்றோரின் பொறுப்பு. நொறுக்குத்தீனிகள் சத்துகள் இல்லாமல் வெறும் சர்க்கரையையும் உப்பையும் கொண்ட வெற்று கலோரிகளை உடலுக்கு அளிக்கின்றன. மாறாக, சரிவிகித உணவுகள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை சரியான அளவில் அளிக்கும். நொறுக்குத்தீனிகளில் அதிக சர்க்கரை இருப்பதால், தொடர்ந்து அவற்றை உட்கொண்டுவரும் குழந்தைகள் சோர்வாகவும், தெம்பின்றியும் காணப்படலாம். இதனால், அவர்கள் படிப்பிலும், பிற தினசரி செயல்பாடுகளிலும் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். நொறுக்குத்தீனியில் உள்ள அதிக கொழுப்பால், உடலில் கொலஸ்டிராலும் டிரைகிளிசரைடும் அதிகரித்து, குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படலாம். நொறுக்குத்தீனிகள் குழந்தைகளைக் கவர ஒரு முக்கியக் காரணம், அவை கவர்ச்சிகரமான தோற்றத்தில், பளபளக் கும் 'பேக்கிங்'கில் வருவது. பெற்றோர், ஆரோக்கியமான உணவுகளையும் குழந்தைகளை ஈர்க்கும்படி சமைத்துக் கொடுக்கலாம். அவை வண்ணமயமாகவும், புதுமைத் தோற்றத்துடனும் இருக்க வேண்டும். உதாரணமாக, காய்கறிகளையும் பழங்களையும் கொண்டு அலங்காரமான 'சாலட்' தயாரிக்கலாம். குழந்தைகளுக் கான உணவில், மாவுச்சத்து, கொழுப்பு, புரதம், கால்சியம் போன்ற எல்லா சத்துகளும் சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். 'ஜங்க் புட்' எனப்படும் துரித உணவுகள், நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் பழக்கம் குழந்தைகளுக்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு, அவற்றின் தீமைகளை குழந்தைகளுக்கு தெளிவாக விளக் கிக்கூற வேண்டும். பெற்றோர்களே குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக மாறி, நொறுக்குத்தீனிகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஆசைக்காக எப்போதாவது கொஞ்சம் நொறுக்குத் தீனியைக் கொறிப்பதில் தவறில்லை. ஆனால் அதை அன்றாட வழக்கமாக்கிக்கொண்டால், குறிப்பாக டி.வி., சினிமா பார்க்கும்போது நம்மையும் அறியாமல் அதிக நொறுக்குத்தீனி சாப்பிட்டால், துன்பத்தை நாமே அழைப்பிதழ் கொடுத்து அழைக்கிறோம் என்றுதான் பொருள். தொடர்ச்சியான நொறுக்குத்தீனி பழக்கம், நாளடைவில் ஆரோக்கியத்தை நொறுக்கிவிடும் என்பதை நாம் உணர்ந்து, குழந்தைகளுக்கும் உணர்த்தி வழிநடத்த வேண்டும்.
Sunday, 11 February 2018
கண்களை காத்திடுவோம்
கண்களை காத்திடுவோம் | தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், செல்போன்களை நீண்ட நேரம் கூர்ந்து கவனிக்கும்போது கண்களுக்கு அழுத்தம் உண்டாகிறது. அதோடு காற்று மாசுபாடு, மனஅழுத்தம் போன்றவைகளும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒருசில எளிய பயிற்சிகளை செய்வதன் மூலம் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். இரு கண்களின் பார்வையையும் மூக்கின் மீது பதிய வைக்க வேண்டும். கவனத்தை எங்கும் திசை திருப்பாமல் சில நிமிடங்கள் மூக்கையும், சில நிமிடங்கள் தொலைவில் உள்ள ஏதாவது ஒரு பொருளையும் மாறி மாறி உற்றுநோக்க வேண்டும். கண்களின் பார்வை மூக்கின் மீதும், பொருளின் மீதும் மாறி, மாறி பதியுமாறு இந்த பயிற்சியை செய்ய வேண்டும். சில நிமிட நேர பயிற்சிக்கு பிறகு கண்களை கைகளால் மூடி, ஓய்வு கொடுக்க வேண்டும். தொடர்ந்து இந்த பயிற்சிகளை செய்து வருவது பார்வை நரம்புகளை வலுப்படுத்தும். கைவிரல்களை கொண்டும் மசாஜ் செய்ய வேண்டும். கண்களை மூடி மென்மையாக விரல்களால் மசாஜ் செய்துவர வேண்டும். கண் இமைகள் மீதும் விரல்களை பதித்து லேசாக அழுத்தம் கொடுக்க வேண்டும். தலையை அசைக்காமல் மேலும் கீழும் கண்களை சுழலச் செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து கண்களை இடதுபுறமாகவும் பின்பு வலதுபுறமாகவும் சுழற்ற விட்டும் பயிற்சி செய்ய வேண்டும். இடையிடையே கண்களை மூடித் திறக்க வேண்டும். கண்கள் சோர்வாக இருந்தால், இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு சுடுநீரில் காட்டன் துணியை முக்கி கண்களை மூடி அதன் மேல் ஒத்தடம் கொடுக்கலாம். கண்களை சில வினாடிகள் மூடிக்கொண்டும், சில வினாடிகள் திறந்தும் தொடர்ந்து பயிற்சி செய்து வரலாம். தினமும் சிறிது நேரம் பயிற்சி செய்து வந்தாலே போதும். இந்த மாதிரியான பயிற்சிகளை கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்பவர்கள் அவசியம் பின்பற்ற வேண்டும்.
காளான் கொழுப்பைக் கரைக்கும்
காளான் கொழுப்பைக் கரைக்கும் | கடல் உணவுகள் மற்றும் இறைச்சி வகைகளில் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. சைவ உணவு பிரியர்கள் இறைச்சி வகைகளை சாப்பிடாமலேயே உடலுக்கு தேவையான புரதச் சத்துக்களை பெற்று விடலாம். அத்தகைய உணவு வகைகள் குறித்து பார்ப்போம். இறைச்சி வகைகளைவிட பீன்ஸ்சில் அதிக அளவு புரதம் உள்ளது. அதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் போதுமான அளவு புரச்சத்தை பெறமுடியும். பருப்பு வகைகளையும் தினமும் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவையும் சீரான புரத சத்துக்களை வழங்கும். சோயா பீன்ஸ்சிலும் அதிக புரதச் சத்து இருக்கிறது. புரதச்சத்து குறைபாடு கொண்டவர்கள் உணவில் சோயாபீன்சை சேர்த்துக்கொள்வது அவசியம். சோயா பால், சோயா சீஸ் போன்றவற்றையும் சாப்பிடவேண்டும். முளைகட்டிய தானியங்களும் புரதச்சத்து நிரம்பப்பெற்றவை. அசைவ உணவுகளை தவிர்ப்பவர்கள் பச்சைப்பயறு, கடலை போன்றவற்றை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் முளைக்குருத்து வரும் தருவாயில் சாப்பிடவேண்டும். உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புபவர்கள் தொடர்ந்து இவைகளை சாப்பிட்டு வருவது நல்ல பலனை கொடுக்கும். பட்டாணியில் புரதச்சத்து மட்டுமின்றி வைட்டமின் சத்துக்களும் நிறைந்திருக்கிறது. இதனை காய்கறிகளுடன் சமைத்தோ, சூப்பாக தயார் செய்தோ ருசிக்கலாம். தயிர், பாலாடைக்கட்டி போன்றவை களிலும் புரதச்சத்து இருக்கிறது. அவை கொழுப்புச் சத்துக்களும் அதிகம் கொண்டவை என்பதால் அளவோடு சாப்பிட வேண்டும். சோளத்தை வேகவைத்து சாப்பிடலாம். அதில் புரதச்சத்து மட்டுமின்றி நார்ச்சத்தும் கலந்திருக்கிறது. தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். அவற்றில் புரதச்சத்து மட்டுமின்றி உடலுக்கு தேவையான அனைத்து வகை சத்துக்களும் நிறைந்திருக்கிறது. பெண்கள் அடிக்கடி உணவில் உளுந்தை சேர்த்துக்கொள்வது அவசியம். புரதச்சத்து மிகுந்துள்ள உளுந்து கர்ப்பப்பையை வலுப்படுத்தும் தன்மை கொண்டது. நிலக்கடலை எலும்புகளுக்கு பலம் தரக்கூடியது. அதில் உடலுக்கு தேவையான வேறுசில சத்துக்களும் உள்ளன. தினமும் முட்டை சாப்பிட்டு வருவது நல்லது. அதிலும் கடினமான உடலுழைப்பு மேற்கொள்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் அவசியம் முட்டை சாப்பிட வேண்டும். காளானை வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அது உடலில் கொழுப்பு சேர்வதை தவிர்க்க உதவும். புரதம் உள்பட அதில் வேறு பல சத்துக்களும் உள்ளன.
Friday, 9 February 2018
ஜோதிடத்தில் மருத்துவம் திரிகடுகம்
ஜோதிடத்தில் மருத்துவம் திரிகடுகம் என்னும் மூவா மருந்து சுக்கு மிளகு திப்பிலி திரிகடுகம் என்னும் வைத்திய நூலானது மூவா மருந்து என்னும் சுக்கு, மிளகு, திப்பிலி பற்றி குறிப்பிடும் மருத்துவ நூலாகும். இதில் சுக்கு, மிளகு, திப்பிலி என்பதற்கு கூட கிரக ஆதிக்கம் உள்ளது. அதன்படி, சுக்கு - அதிபதி குரு மிளகு - அதிபதி செவ்வாய் திப்பிலி - அதிபதி புதன் இதில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம். சுக்கு உலர்ந்த இஞ்சி தான் சுக்காக மாறுகிறது. இஞ்சியின் சாறு அனைத்தும் உலர்ந்து போனதால் இவற்றில் சக்தி அதிகமாக இருக்கும். இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், நமது உடலின் ஜீரண உறுப்புகளுக்கு ஏற்ற அருமருந்தாகும். செரிமானம் செய்யக்கூடிய உணவுகளில் கார்போ ஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள் மற்றும் குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், கிளிசரால் போன்ற மூலக்கூறுகளாக மாற்றும் வேதி நிகழ்வு தான் இந்த செரிமானம் என்பதாகும். திடமான உணவுகளை கூட எளிதாக மாற்றக்கூடிய சக்தி நார்ச்சத்து உள்ள காய், கிழங்கு, கீரை வகைகளுக்கு உண்டு. இதில் அதிக சக்தி பெற்றது சுக்கு. இதற்கு உரியவர் குரு பகவான். மிளகு இந்தியாவின் கருப்பு வைரம் என்று வர்ணிக்கப்படும் பொருள் மிளகு. இவை மலைகளில் கொடி போல் படர்ந்து வளரக்கூடிய அதிக மருத்துவ குணம் கொண்டது. சற்று காரமாக இருந்தாலும், இதன் மருத்துவ பயன்கள் அதிகம். நுரையீரலில் உள்ள அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடியவை. சளிக்கும், ரத்த போக்கை நீக்குவதற்கும், கெட்ட கொழுப்பை கரைப்பதற்கும், குடல் புழுக்கள் நீங்குவதற்கும், விஷக்கடிகள் முறிவு செய்யவும், ரத்தத்தை சுத்தம் செய்யவும் இவை உதவும். இதற்கு உரியவர் செவ்வாய் கிரகமாகும். திப்பிலி சுக்கு-மிளகு என்றால் எல்லோருக்கும் தெரியும். ஆனால் திப்பிலி என்றால் பலருக்கு தெரியாது. திப்பிலி என்பது கோது என்பவையாகும். கோது என்றால் சூரணம் போன்ற பொடி வகையைச் சேர்ந்ததாகும். திப்பிலி என்பது ஒரு பொருளை குறிப்பிடும் சொல் அல்ல. மர சக்கை, பழத்தின் மேல் தோல், இலைச் சருகு, மரப்பட்டை, செடி கொடியின் வேர்கள் போன்ற மூலிகை அம்சங்களை கொண்டவை தான் திப்பிலி. இவை நோய் தன்மைக்கு ஏற்றவாறு பல மூலப்பொருட்கள் சேர்த்து செய்யப்படும் மருந்தாகும். இவை உடலில் மேல் பூசப் படுவதற்கும், உடல் உள்ளே சாப்பிடுவதற்கும் ஏற்ற மருந்தாக தயாரிக்கப்படுகிறது. இந்த திப்பிலிக்கு உரியவர் புதன். சுக்கு, மிளகு, திப்பிலி இம்மூன்றும் கொண்டு மருத்துவம் செய்யப்படுகிறது. பழங்கால மருத்துவ வகையில் இவையும் ஒன்று. தற்போது மலைவாழ் மக்கள் பயன்பாட்டில் உள்ளது என்றாலும், சித்தா, ஆயுர்வேதா மருந்துகள் தயாரிக்க இவற்றைப் பயன்படுத்திக் கொள் கிறார்கள். மனோவசிய மருத்துவம்: நமது மனதை திடப்படுத்தி ஒரு நிலைப்படுத்தி செய்யக்கூடிய மருத்துவம், 'மனோவசிய மருத்துவம்'. இதற்கு சந்திரனே காரணமாக இருக்கிறார். மனதில் பயம் கொண்டவர் களுக்கு தைரியத்தை அளிப்பதற்காக யந்திரம் மந்திரித்துத் தருவதைப் பார்த்திருக்கலாம். இதுவும் ஒருவகை மருத்துவமே. பித்து பிடித்த மன நிலையில் இருப்பவர்களுக்கு இவ் வகையான மருத்துவம் செய்யப்படுகிறது. இவற்றுக்கு காரணமானவர் சுக்ரன். தமிழ் வேதங்களான தேவாரம், திருவாசகம் போன்ற வேத வார்த்தைகளை பயன்படுத்தி, திருநீறு மந்திரித்து தருவது ஒருவகை வைத்தியம் ஆகும். இதன் மூலம் உடல் வலிகள் மன தைரியம், நம்பிக்கை மூலம் பல நோய்கள் குணம் அடைய செய்வார்கள். இவற்றுக்கு எல்லாம் குருவே காரணமாக இருக்கிறார். நமது உடல் பயிற்சிகள் மூலம் எவ்விதமான நோய்கள் வராமல் பாதுகாக்க யோகாசனம் பெரும் உதவி செய் கிறது. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும் ஒருவகை வைத்திய கலை இதுவாகும். இதற்கு சூரியன் காரணமாக இருக்கிறார். தியானம் மூலமும் பல நோய்கள் வராமல் தடுக்க முடியும். நோய் இன்றி நூறு வருடம் வாழும் கலையை கற்றுத் தரு கிறது. இவற்றுக்கு புதன் காரணமாக இருக்கிறார். பிராணாயாமம் என்ற ஒரு வகை மருத்துவ முறை இருக்கிறது. இது நமது மூச்சு விடும் காற்று அளவுகளில் சுவாசத்தை அடக்கியாளும் யோக முறையாகும். இந்த மூச்சு பயிற்சியின் மூலமும் நோய் தடுப்பு செய்ய முடியும். இவற்றுக்கும் காரணம் புதனே ஆகும். வேப்பிலை அடித்து பாடம் போடுதல்: வேப்பிலை அடித்து பாடம் போடுவது என்ற ஒன்று இந்தியாவில் இருக்கிறது. அது மருத்துவம் என்று சொல்வதை விட, மனிதர்களின் நம்பிக்கை என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். இதற்கு உரியவர் சனி பகவான். இந்தியாவில் மட்டும் தான் மனிதனின் நம்பிக்கை என்ற அடிப்படையில் பல வகையான மருத்துவ முறைகள் உள்ளன. எல்லா வைத்திய முறைகளுக்கும் விஞ்ஞான ஆதாரம் காட்டுவது என்பது குறைவு என்றாலும், நோய் போக்குவதற்கு எளிய வைத்திய முறைகள் நிறைய உள்ளன. நாம் பல விரத நாட்களில் அமாவாசை தினங்களில் கடலில் போய் குளிக்கிறோம். அவ்வாறு கடலில் குளிக்கும் போது கடல் நீர் உப்பு தன்மையாக இருந்தாலும் நமது உடலில் உள்ள சொரி, சிரங்கு, தேம்பல், மேக நோய், மர்ம உறுப்பில் உள்ள தோல் நோய்கள், அக்குகள் உள் தோல் நோய்கள், தலையில் பொடுகு, புண்கள் உடனே சரியாகும். கடல் நீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது என்பதை விஞ்ஞானம் கூட ஒப்புக் கொள்கிறது. மனித உடலில் உள்ள நோய்களை போக்க விஞ்ஞானம் கூடிய இயற்கை முறைகளில் நல்ல மருந்தாக உள்ளது. என்ன தான் இயற்கை முறையில் மருத்துவம் ஆயிரம் இருந்தாலும் விஞ்ஞான அடிப்படையில் செய்யக்கூடிய அறுவை சிகிச்சை முறைகளில் ஈடு இணை எதுவும் இல்லை என்று தான் கூற வேண்டும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சியே காட்டுகிறது. இவற்றுக்கெல்லாம் ஒரு அடிப்படை ஜோதிடம் காரணமாக உள்ளது. மேலும் நம்மை அறியாமல் எங்கும் எதிலும் ஜோதிடம் நுழைந்து அதன் பணியை சரிவர செய்கிறது. பொதுவாக மகர கும்ப ராசிகளில் செவ்வாய் நின்று இருந்தாலே நமது உடலில் ஒரு சின்ன தையல் போட வேண்டி வரும். அதேபோல் சனி செவ்வாய் சேர்க்கை அல்லது பார்வை இருந்தாலே உடலை கிழித்து தையல் போட்டு ஒட்டு போட வேண்டி இருக்கும். இவையாவும் ஜோதிட ரீதியாக அனுபவத்தில் கண்ட உண்மையாகும். -ஆர்.சூரியநாராயணமூர்த்தி.
Sunday, 28 January 2018
பித்த வெடிப்பு போகாதா?
பித்த வெடிப்பு போகாதா? | டாக்டர் கு. கணேசன் | பாதங்களில் காணப்படும் வியர்வைச் சுரப்பிகளில் வியர்வை சுரப்பது குறைவதால், அங்கு சருமம் உலர்ந்து வெடிக்கிறது. அந்த வெடிப்புகளைப் 'பித்த வெடிப்புகள்' என அழைக்கிறோம். பாதங்களின் அடியிலும் பக்கவாட்டிலும் வெடிப்புகள் காணப்படுவது இயல்பு. பக்கவாட்டில் உள்ள வெடிப்புகள் அதிகமாகவும், கடுமையாகவும், அடியில் உள்ள வெடிப்புகள் சற்றே குறைவாகவும் காணப்படும். பொதுவாக, பித்த வெடிப்பு கடுமையான பனிக் காலத்திலும், கோடையிலும் தொல்லை கொடுக்கும்; உடற்பருமன் இருந்தால் இது அடிக்கடி ஏற்படும். வெறும் காலில் நடப்பவர்களுக்கு இது ஏற்படும் வாய்ப்பு அதிகம். அல்லது பொருத்தமில்லாத காலணிகளை அணிந்தாலும் இது ஏற்படலாம். நீண்ட நேரம் நின்று வேலை பார்ப்பது பித்தவெடிப்பை வரவேற்கும். காலணிகள் ஏற்படுத்தும் ஒவ்வாமையும் பித்த வெடிப்புக்கு ஒரு காரணமாகலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நரம்புகள் பாதிக்கப்படுவதால், இந்த வெடிப்புகள் நிரந்தரமாகவே தொல்லை கொடுக்கும். உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருந்தாலும், தைராய்டு சுரப்புக் குறைபாடு, சொரியாசிஸ் நோய் போன்றவை இருந்தாலும் இதே நிலைமைதான். இந்தக் காரணங்களில் உங்களுக்கு எது ஒத்துப்போகிறது என்று பாருங்கள். அந்தக் காரணத்தைக் களைந்துவிட்டால், பித்த வெடிப்புகளும் விடைபெற்றுவிடும். பித்த வெடிப்புகளை ஆரம்பத்திலேயே கவனித்து தகுந்த சிகிச்சை பெற்றுக்கொண்டால், விரைவில் குணமாகும். காலம் தாழ்த்தினால், வெடிப்புகள் சருமத்தையும் தாண்டி ஆழமாகச் சென்றுவிடும். அல்லது அவற்றில் பாக்டீரியா, பூஞ்சை போன்ற தொற்றுக் கிருமிகள் தொற்றிக்கொள்ளும். அப்போது வலி ஏற்படும். காய்ச்சல், நெறிகட்டுதல், ரத்தம் வருதல் போன்ற துணை அறிகுறிகளும் சேர்ந்து தொல்லைகள் அதிகமாகும். அதிலும் நீரிழிவு நோய் இருந்தால், பித்தவெடிப்புகள் ஆறுவதற்கு நாளாகும். உங்களுக்கு மீண்டும் மீண்டும் பித்த வெடிப்புகள் வருவதால், ஒருமுறை சருமநோய் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களுக்கு வலி ஏற்படுவதாகவும் சொல்லியிருக்கிறீர்கள். பித்தவெடிப்புகளில் தொற்று இருக்க வாய்ப்பிருக்கிறது. நீரிழிவு நோய் இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். ஆரம்ப நிலையில் உள்ள பித்த வெடிப்பைக் குணப்படுத்த, ஈரத்தன்மையைத் தரும் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், லிக்விட் பாரபின் எண்ணெய் போன்றவற்றில் ஒன்றை காலிலும் பாதங்களிலும் தடவலாம். இதேபோல் ஈரத்தன்மையை ஏற்படுத்தும் வேறு களிம்புகளையும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தலாம். பாதங்களில் தொற்றுள்ளவர்களுக்குத் தகுந்த ஆன்டிபயாடிக் மருந்துகள் அல்லது பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் தேவைப்படும். சிலருக்கு வலிநிவாரணிகளும் தேவைப்படலாம். இந்தத் தொல்லை மீண்டும் ஏற்படாமலிருக்க, பாதங்கள் எப்போதும் ஈரத்தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியம். அதற்குப் பாதங்களை அடிக்கடி தண்ணீரில் ஈரப்படுத்திக்கொள்ள வேண்டும். பனிக் காலத்து இரவுகளில், ஈரப்படுத்தும் களிம்புகளைப் பாதங்களில் பூசிக்கொண்டு, காலுறைகளையும் அணிந்துகொள்ள வேண்டும். மருத்துவரின் யோசனைப்படி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது, உடல் பருமனைக் குறைப்பது, பொருத்தமான காலணிகளை அணிவது போன்ற தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டியதும் முக்கியம். பாத சருமத்தைக் காக்கப் பொதுவான வழிகள்: சத்துள்ள, சரிவிகித உணவைச் சாப்பிடுங்கள். தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள். தினமும் இருமுறை சோப்புப் போட்டுக் குளித்துப் பாதங்களைப் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். வறண்ட தோலில் 'லிக்விட் பாரபின்' அல்லது ஆலிவ் எண்ணெயைத் தடவலாம்; ஈரப்பசையை உண்டாக்கும் களிம்புகளைத் தடவலாம். பொருத்தமான காலணிகளையும் ஷூக்களையும் அணியுங்கள். பருத்தியாலான காலுறைகள் மிக நல்லவை. தேவையில்லாமல் கடுங்குளிரில் / பனியில் செல்வதும் வெயிலில் அலைவதும் ஆகாது. சோப்பை அடிக்கடி மாற்றுவதும், அழகு சாதனப் பொருட்களை அளவுக்கு மீறிப் பயன்படுத்துவதும் சருமத்தின் ஆரோக்கியத்துக்கு ஆபத்து.
வாய்ப்புண் தொல்லை இனி இல்லை
வாய்ப்புண் தொந்தரவால் அவதிப்படாதவர் இருக்க முடியாது. வாய்ப்புண் ஏன் வருகிறது எப்படி வருகிறது என தெரியாமல், பலர் கஷ்டப்படுகின்றனர். வாய்புண் வருவதற்கான காரணத்தையும், அதற்கான தீர்வை தெரிந்து கொண்டால், வாய்ப்புண் வருவதை தடுக்கலாம். வாய் பகுதியிலுள்ள, மென்மையான தோல் பகுதியில் வாய்ப்புண் ஏற்படுகிறது. வாய்புண் வந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
எந்த உணவையும், இயல்பாக சாப்பிட முடியாது. புண் உள்ள பகுதியில் உணவுப்பொருட்கள் படும் போது வலியும், எரிச்சலும் ஏற்படும்.
வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியா தாக்குதலால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாக உள்ளவர்களை, இது அதிகம் தாக்குகிறது. குறிப்பாக, வைட்டமின் பி12, இரும்புச் சத்து மற்றும் போலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகிறது.
வாய்ப்புண் வருவது ஏன்?
மருந்து மாத்திரைகள் அதிகம் உண்பவர்களுக்கு வாய்ப்புண் வரும். ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக, மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கிறது. பிரசவ காலங்களிலும், இறுதி மாதவிடாயின் போதும், ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், பெண்களுக்கு வாய்ப்புண்கள் ஏற்படுகிறது. முரட்டுத்தனமாக பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷை கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும், மெல்லியக் காயங்கள் மூலமும், வாய்ப்புண் ஏற்படும்.
வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள், வாய்ப்புண்ணை உருவாக்கும். அதிகம் உணர்ச்சி வசப்படுதல், மன அழுத்தம் அதிகரித்தல் மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையும் வாய்ப்புண் வரக்காரணமாகிறது. மேலும், முட்டை, காபி, சீஸ், ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை, அதிகம் சாப்பிடுதல், புகைப்பிடித்தல் ஆகியவையும் காரணமாகிறது. சில தரம் குறைந்த பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் வரும்.
தடுக்கும் வழிகள்: சில வழி முறைகளை கடைப்பிடிப்பது மூலம், வாய்புண் வராமல் தடுக்கலாம். நல்ல உணவுப் பழக்கம், மிதமான உடற்பயிற்சி, மன அழுத்தத்தை குறைப்பது, நல்ல தூக்கம் ஓய்வு மூலம் தடுக்கலாம். மேலும், உப்பு நீர் அல்லது நுண் கிருமிகளை அழிக்க கூடிய, ஆன்ட்டி பாக்டீரியா மவுத்வாஷ் கொண்டு, வாயைக் கொப்பளிப்பதன் மூலம் தடுக்கலாம். தினமும் காலையிலும், இரவு உறங்குவதற்கு முன் பல் துலக்குவதன் மூலம் வாய்ப்புண்ணை தடுக்கலாம்.
என்ன மருந்து?
தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் ஆகியவற்றை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவினால் புண் ஆறும். மிதமான சூடுள்ள நீரில் உப்பு, எலுமிச்சை சாற்றைக் கலந்து கொப்பளித்தால் வலி நீங்கும். மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, ஆறிய பின், மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.
வாய்ப்புண் என்பது தற்காலிகமான நோயாகும். குறைந்த பட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் பத்து நாட்களில், குணமாகி விட வேண்டும். மேலும், வாய்ப்புண் தொடர்ந்தால், உடனடியாகப் பல் மருத்துவரை அணுகி முழுமையான பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
இரவில் பல் துலக்குவதன் பலன்கள்
இரவில் பல் துலக்குவதன் பலன்கள் | காலையில் தவிர இரவில் பல் துலக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இல்லை. ஆனால் இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கம் தடுக்கப்படுவதோடு, பற்கள் சொத்தையாகும் அபாயமும் குறையும். ஆகவே உங்கள் பற்கள் பாதுகாக்கப்பட, இரவிலும் பற்களைத் துலக்குங்கள். தினமும் காலையிலும், இரவிலும் பற்களைத் துலக்குவதால், வாய் ஆரோக்கியம் மேம்படுவதோடு, ஈறு சம்பந்தமான நோய்கள் வரும் அபாயமும் குறையும். ஏனெனில் இரவில் பற்களைத் துலக்கும்போது, பற்காறைகள் அகன்று, ஈறுகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு, ஈறு நோய்களில் இருந்து விடுபடலாம். இரவில் பற்களைத் துலக்காமல் இருந்தால், காலையில் வாய் மிகுந்த துர்நாற்றத்துடன் இருக்கும். இதற்குக் காரணம், உண்ட உணவுகள் பற்களின் இடுக்குகளில் தங்கி, பாக்டீரியாக்களின் பெருக்கம் அதிகரித்திருப்பதுதான். எனவே தவறாமல் பற்களைத் துலக்குங்கள். படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாய் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். வாய் ஆரோக்கியம் இதய ஆரோக்கியத்துடன் தொடர்புகொண்டது. ஒருவரது வாய் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், பாக்டீரியாக்கள் ரத்த நாளங்களில் நுழைந்து, தமனிகளைப் பாதிக்கும். அதன் விளைவாக இதய நோயின் அபாயமும் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இரவில் பல் துலக்குவதற்கு ஆகும் நேரம் பத்து நிமிடம்தான். ஆனால் அதனால் உண்டாகும் நற்பலன்களைப் பார்த்து அப்பழக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ளலாம்.
கருவளையங்களை களைவோம்
கருவளையங்களை களைவோம் | கருவளையங்கள் உருவாகுவதற்கு சரியான தூக்கமின்மை, மன அழுத்தம், கவலை, சோர்வு போன்றவை முக்கிய காரணமாக இருக்கின்றன. ஒருசில வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தி கருவளையங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
* கருவளையங்களில் இருந்து மீட்டெடுத்து சருமத்திற்கு பொலிவு சேர்ப்பதில் பாதாம் எண்ணெய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது. இரவில் படுக்க செல்லும் முன்பு சில துளிகள் பாதாம் எண்ணெய்யை கருவளையம் இருக்கும் பகுதியில் தடவி மென்மையாக விரல்களால் மசாஜ் செய்ய வேண்டும். காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி வர வேண்டும். சில நாட்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கருவளையங்களை போக்கி விடலாம்.
* சருமத்தை பளிச்சென்று மிளிர வைப்பதிலும், கருவளையங்களை விரட்டுவதிலும் தக்காளி பழத்திற்கு பங்கு உண்டு. ஒரு டீஸ்பூன் தக்காளி சாறுடன், அரை டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறை கலந்து கொள்ள வேண்டும். அதனை கருவளையம் இருக்கும் இடங்களில் மென்மையாக தடவி விட்டு, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் இரண்டு தடவை செய்து வந்தால் இரண்டு, மூன்று வாரங்களில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
* உருளைக்கிழங்கு, கருவளையங்களை போக்குவதோடு கண்களை சுற்றி ஏற்படும் வீக்கங்களை குறைக்கும் திறன் கொண்டது. உருளைக்கிழங்கை சாறு எடுத்து பஞ்சில் முக்கி கருவளையம் இருக்கும் பகுதிகளில் ஒற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் சில வாரங்களில் கருவளையங்களை நீக்கிவிடலாம்.
* பன்னீர் சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கும். கருவளையங் களையும் போக்கும். கண்களில் ஏற்படும் சோர்வையும் விரட்டியடிக்கும். பன்னீரை பஞ்சில் முக்கி மென்மையாக கண்களை சுற்றி வருடி வர வேண்டும். பின்னர் கண்களை மூடி கண் இமைகள் மீது நனைத்த பஞ்சினை 15 நிமிடங்கள் வைக்க வேண்டும். அப்படி செய்தால் கண் சோர்வில் இருந்து மீண்டு விடலாம். தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கருவளையங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
Tuesday, 23 January 2018
மருத்துவ அற்புதம் ‘இன்சுலின்’
மருத்துவ அற்புதம் 'இன்சுலின்' | டாக்டர் நா.மோகன்தாஸ் | இன்று (ஜனவரி 11) சர்க்கரை நோயாளிக்கு முதன் முதலில் இன்சுலின் பயன்படுத்தப்பட்ட தினம். சத்தம் இல்லாமல் உடலுக்குள் யுத்தம் நடத்துகின்ற சர்க்கரை நோய் வயதானவர்களுக்கு தான் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளும், இளைஞர்களும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த அவல நிலைக்கு, உணவு முறை மாற்றங்கள், உடல் உழைப்பு குறைந்துவிட்ட வாழ்க்கை முறை, அதிக எடை, ஊட்டச்சத்து குறைபாடுகள், மன உளைச்சல் போன்றவை முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன. இன்று சர்க்கரை நோய்க்கு பல்வேறு இன்சுலின்களும், மருந்து மாத்திரைகளும் வந்துவிட்டன. இன்சுலின் மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் உலகில் இந்நேரம் சர்க்கரை நோயினால் மனித குலமே அழிந்து போயிருக்கும். இந்தியாவில் ஏறக்குறைய 3 கோடி பேருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இதில் மூன்றில் ஒருவருக்கு இன்சுலின் ஊசி அவசியம். கணையத்திலிருந்து இன்சுலின் சுரக்காதவர்களுக்கு இன்சுலின் சிறந்த மருந்து. மாரடைப்பு, அறுவை சிகிச்சைக்கு, ஆறாத புண்ணுக்கு, காச நோய், பிரசவ கால சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை நோயினால் நினைவு இழந்தவர்களுக்கு இன்சுலின் சாலச்சிறந்தது. மருத்துவ உலகில் அற்புத மருந்தான இன்சுலின் 20-ம் நூற்றாண்டின் அதிசய கண்டுபிடிப்பாகும். சர்க்கரை நோய்க்கான மருந்தை தயாரிக்கும் பணியில் நீண்ட காலமாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன. 1869-ம் ஆண்டு டாக்டர் லாங்கர்ஹான்ஸ் நாயின் கணையத்தை சோதித்துப் பார்த்து அதில் உள்ள திசுக்கள்தான் இன்சுலினை உற்பத்தி செய்கிறது என்பதை கண்டுபிடித்து, அதை 1901-ம் ஆண்டு வெளி உலகிற்கு அறிவித்தார். 1921-ம் ஆண்டு சர்க்கரை நோய் குறித்த ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாக, கனடாவைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஸ்ரீ பாண்டிங், சார்லஸ் பெஸ்ட் ஆகியோர் ஒரு புதிய மருந்தை கண்டுபிடித்தனர். 1922-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி சர்க்கரை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு டொரண்டோ பொது மருத்துவமனையில் இருந்த லியோனார்ட் தாம்சன் என்ற 14 வயது சிறுவனுக்கு தாங்கள் கண்டுபிடித்திருந்த புதிய மருந்தை முதன் முதலில் கொடுத்தனர். அப்போது தாம்சனுக்கு அலர்ஜி போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டன. உடனே அவர்கள் மருந்து கொடுப்பதை நிறுத்திவிட்டு மேலும் 12 நாட்கள் ஆராய்ச்சி செய்து ஜனவரி 23-ந்தேதி 2-வது தடவையாக அந்த சிறுவனுக்கு மருந்தை ஊசி மூலம் செலுத்தினர். ஆச்சரியமாக சிறுவன் தாம்சனுக்கு ரத்தச் சர்க்கரை 'மளமள'வென்று குறைந்தது. உலகமே வியக்கும் வண்ணம் அந்தச் சிறுவன் மீண்டான். அந்த அதிசய மருந்துதான், இன்சுலின். இந்தச் செய்தி காட்டுத்தீ போல உலகம் முழுவதும் பரவியது. 20-ம் நூற்றாண்டின் அற்புத கண்டுபிடிப்பிற்காக பாண்டிங், அவரது பேராசிரியர் மாக்லியோட் ஆகியோருக்கு 1923-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்தப் பரிசு பணத்தை பாண்டிங், சார்லஸ் பெஸ்டுடன் பகிர்ந்து கொண்டார். நாயின் கணையத்திலிருந்து தயாரித்த இன்சுலினை மனிதர்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தியபோது அதில் பல பக்க விளைவுகள் இருந்தன. பின்பு மாடு மற்றும் பன்றியின் கணையத்திலிருந்து இன்சுலினைத் தயாரித்தார்கள். பக்க விளைவின் விகிதாச்சாரம் குறைந்தது. மரபுசார் தொழில் நுட்பம் மற்றும் டி.என்.ஏ. மறு சேர்க்கை தொழில் நுட்பம் மூலம் மனிதரிடம் சுரக்கின்ற இன்சுலினை போலவே செயற்கை முறையில் இன்சுலினை தயாரித்தார்கள். ஈ கோலை என்னும் பாக்டீரியாவின் டி.என்.ஏ.வில் மனிதனுடைய மரபணுவை இணைத்து வளர்த்தார்கள். இதில் மனித இன்சுலினைப் போலவே பாக்டீரியாக்கள் சுரந்தன. இவற்றை எடுத்து அதன் கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களைச் செய்து பல்வேறு இன்சுலினை தயாரித்து வருகிறார்கள். உணவு சாப்பிட்ட உடன் ரத்தத்தில் ஏறும் சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் இன்சுலின் குறைந்த காலம் செயல்படும் இன்சுலின் ஆகும். அதிக சர்க்கரையினால் நினைவு இழந்த நிலையில் உள்ளவர்களுக்கும், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அறுவை சிகிச்சை செய்யப்படும் நோயாளிகளுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. இது 6 மணி நேரம் செயல்படும். மிக விரைவாக செயலாற்றும் இன்சுலின் உடனே சர்க்கரையை குறைக்கும். இதில் தாழ்நிலை சர்க்கரை மயக்கம் பெரும்பாலும் இருப்பதில்லை. நடுத்தர காலம் செயல்படும் இன்சுலின் சர்க்கரை மாத்திரையுடன் சர்க்கரையை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. நீண்ட நேரம் செயல்படும் இன்சுலின் வேலை செய்ய ஆரம்பித்து 24 மணி நேரம் இன்சுலினை தருகிறது. குறைந்த கால இன்சுலினும், நீண்ட நேரம் செயல்படும் இன்சுலினும் இரண்டையும் கலந்து முக்கலப்பு இன்சுலின் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்சுலினை தினம் ஒருமுறை அல்லது இரண்டு முறை போட்டால் போதும். தற்போது தானாகவே போட்டுக்கொள்ளக்கூடிய பேனா வடிவில் இன்சுலின் சிரிஞ்சுகள் வந்துவிட்டன. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் சிரிஞ்சுகளை பாதுகாப்பாக அழித்துவிடவேண்டும். வெப்பத்தால் இன்சுலின் திறன் குறைந்துவிடும். ஆதலால், இன்சுலினை குளிர்சாதனப் பெட்டியின் கதவில் வைக்கவும். தவறிகூட பிரீசரில் வைக்கக்கூடாது. தினமும் ஊசி போடும் இடத்தை மாற்ற வேண்டும். இன்சுலின் ஊசியைப் பிட்டத்தில் போடுவது அவ்வளவு நல்லதல்ல. அப்படி போட்டால் அங்கு இன்சுலின் கிரகிக்கப்படும் வேகம் குறைந்து அதன் செயல்திறன் சரியாக இருக்காது. உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் என்பதை உணர்ந்து, உணவு முறையைச் சரிவர கடைப்பிடித்து தேவையான உடற்பயிற்சி செய்து நோய்களுக்கு முறையான சிகிச்சை பெறுவதன் மூலம் வாழ்வில் அதிகப் பயனைப் பெறலாம்.
Tuesday, 16 January 2018
சாப்பாட்டிற்கு முன், பின் என்று மாத்திரைகளை பிரிப்பது ஏன்?
சாப்பாட்டிற்கு முன், பின் என்று மாத்திரைகளை பிரிப்பது ஏன்? | நாம் எடுத்து கொள்ளும் மருந்துகளை நமது உடல் ஏற்று கொள்வதிலும், அம்மருந்துகளை ரத்தத்தில் கலக்க செய்வதிலும் நமது உணவு பெரும்பங்கு வகிக்கின்றன. மருந்தின் தன்மையை பொறுத்தே டாக்டர்கள் சில மருந்துகளை சாப்பாட்டிற்கு முன்பும், சில மாத்திரைகளை சாப்பிட்டிற்கு பின்பு சாப்பிடவும் அறிவுறுத்துகின்றனர்.சில மருந்துகளை நாம் உண்டதும் அவை நமது வயிற்றில் அமிலத்தை அதிகம் சுரக்கச்செய்து வயிற்றில் பிரச்னை, நெஞ்செரிச்சல் போன்றவற்றை உண்டாக்குகின்றன. சில மருந்துகள் வாந்தி உணர்வையும் ஏற்படுத்துகின்றன. இம்மாதிரி மருந்துகள் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிடவே டாக்டர்களால் அறிவுறுத்தப்படுகிறது. இதுபோல மாத்திரைகளை பெரும்பாலும் வெதுவெதுப்பான நீரை அருந்தி மட்டுமே உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. காரணம் பால், தேநீர், காப்பி போன்றவை சில மாத்திரைகளோடு ரசாயன மாற்றம் அடைத்து உடலுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். சில மருந்துகள் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் நெஞ்செரிச்சல், வாந்தி உணர்வு போன்ற பக்கவிளைவுகளை தராது என்னும் நிலையில் அவை சாப்பாட்டிற்கு முன்பு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
Saturday, 6 January 2018
பேரீச்சையின் ஆரோக்கிய பலன்கள்

பேரீச்சையின் ஆரோக்கிய பலன்கள் | பேரீச்சம்பழத்தை அதன் தித்திப்புக்காக குழந்தைகளும் விரும்புவர். ஆனால் பேரீச்சை அள்ளி வழங்கும் ஆரோக்கிய நன்மைகளுக்கும் குறைவில்லை. கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் சத்துணவுப் பழமாக பேரீச்சை உண்ணப்பட்டு வருகிறது. ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. இதில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து ஆகியவையும் நிறைந்துள்ளன. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனை வரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழமாகும். தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு தம்ளர் பால் பருகி வந்தால் ரத்தம் விருத்தியடையும். இனிப்பு உணவுகளைத் தவிர்க்க வேண்டியுள்ள சர்க்கரை நோயாளிகள் கூட பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இப்பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ஏதேனும் காயத்தால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம். பேரீச்சம்பழ சாறு ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். தினசரி இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கலைத் தரும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும். பேரீச்சம் பழத்தை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட, வாதம், பித்தம், முட்டி வீக்கம் குணமாகும். பேரீச்சம் கொட்டையை வறுத்துப் பொடி செய்து, காபி போல் பால், சர்க்கரை கலந்து பருகலாம். உடலுக்கு உரமளிக்கும் இதை வாரம் ஓரிரு நாள் பருகுவது நல்லது. பல் முளைக்கும் குழந்தைகள் வயிற்றுக் கடுப்பால் அவதி யுறும்போது பேரீச்சம்பழத்தைச் சுடுநீரில் கலந்து குழைய வேக வைத்து வேளை ஒன்றுக்கு 1 கரண்டி வீதம் 3 வேளை கொடுத்தால் பேதி நிற்கும். தினசரி 4 பேரீச்சம்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றுக் கடுப்பு, அஜீரணபேதி, மலச்சிக்கல், அமிபியாசிஸ் போன்ற வயிற்றுக் கோளாறுகள் வருவதில்லை. குறிப்பாக குடலுக்குப் பாதுகாப்புக் கவசமாக பேரீச்சம்பழம் விளங்குகிறது.
Sunday, 31 December 2017
தொப்பையைக் கரைக்கும், இதயநோயைத் தடுக்கும் பழங்கள்

தொப்பையைக் கரைக்கும், இதயநோயைத் தடுக்கும் பழங்கள் | இனிய சுவையுடன் ஏராளமான நன்மைகளையும் அளிப்பவை பழங்கள். எண்ணற்ற சத்துகளைக் கொண்ட பெட்டகங்களாக அவை திகழ்கின்றன.வாழைப்பழம்: இயற்கையாகவே வாழைப்பழத்தில் அமில எதிர்ப்புச் சக்தி அதிகம். அதனால், தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கும். உடல் பருமன் உள்ளவர்கள், மெலிந்த தேகம் உள்ளவர்கள் என அனைவருமே வாழைப்பழத்தைச் சாப்பிட்டு அதன் பலன்களை அடையலாம். புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட, வாழைப்பழத்தைச் சாப்பிடலாம். வாழைப்பழத்தில் உள்ள பி 6, பி 12 போன்றவை புகைபிடிக்கத் தூண்டும் நிகோட்டினை சிறிது சிறிதாகக் குறைக்க உதவும். இதன் மூலம் புகைப் பழக்கத்தில் இருந்து விடுபட முடியும்.பப்பாளிப்பழம்: ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழங்களில் ஒன்று, பப்பாளி. இதில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து நிறைந்துள்ளதால், பல் தொடர்பான குறைபாட்டைத் தீர்க்கவும், சிறுநீர்ப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்கவும் உதவுகிறது. மேலும், இது நரம்புகள் வலுப்பெறவும், ஆண்மை பலம் கிட்டவும், ரத்த விருத்தி பெறவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும் துணைபுரிகிறது. பெண்களை அவதிப்படுத்தும் மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்ய நல்லதொரு மருந்தாகிறது. மேலும் இதில் உள்ள கரோட்டின் சத்து, புற்றுநோய்க்கு எதிரியாகும். நுரையீரல், உணவுக்குழாய், இரைப்பை மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்கள் வராமல் தடுக்கக்கூடியது. பழுக்காத பப்பாளிப்பழத்தை தினமும் 250 கிராம் அளவு உணவுக்கு முன்னர் சாப்பிட்டு வந்தால், சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். மேலும் செரிமானக் கோளாறு, வயிற்றுக்கடுப்பு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கும் நல்ல மருந்தாகும்.கொய்யாப்பழம்: கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், வளரும் சிறார்களின் எலும்புகளுக்கு பலமும் உறுதியும் தரும். மலச்சிக்கல் கோளாறு இருப்பவர்கள் நார்ச்சத்து நிறைந்த கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொய்யாவுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்தும் சாப்பிடலாம். சொறி, சிரங்கு மற்றும் ரத்தசோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடுவது நலம் பயக்கும். வைட்டமின் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் நிறைந்த கொய்யா தோல் வறட்சியைப் போக்கும், முதுமைத் தோற்றத்தைக் குறைத்து இளமையை மிளிரச் செய்யும்.
அன்னாசிப்பழம்: அன்னாசிப்பழத்தில் வைட்டமின் பி உயிர்ச்சத்து உள்ளது. இது உடலுக்குப் பலம் தருவதுடன், ரத்தத்தை விருத்தி செய்யக்கூடியது. வெள்ளைப்படுதல் பிரச்சினை உள்ள பெண்கள் தொடர்ந்து அன்னாசிப்பழம் சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும். அன்னாசியில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ், தாது உப்புகள் போன்ற முக்கிய சத்துகள் அடங்கியுள்ளன. தாது உப்புகள் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்துக்கு மிகவும் முக்கியமாகும். கொழுப்புச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிக மாகவும் உள்ள அன்னாசி இதய நோய் வராமல் தடுக்கக்கூடியது. தொப்பையைக் கரைக்கமுடியாமல் கஷ்டப்படுபவர்களுக்கு அன்னாசி ஒரு நல்ல மருந்து. அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, நான்கு டேபிள்ஸ்பூன் பொடியாக்கிய ஓமம் சேர்த்து நீர் ஊற்றிக் காய்ச்ச வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் எழுந்து வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாட்கள் பருகிவந்தால், தொப்பை குறையும். மிளகு ரசத்துடன் அன்னாசிப்பழம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.மாதுளம்பழம்: இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று ரகங்கள் உள்ள மாதுளம்பழம், இதயம், மூளை போன்றவற்றுக்கு சக்தி தரக்கூடியது. புளிப்பு மாதுளை வயிற்றுக்கடுப்பைப் போக்கும். ரத்தபேதிக்கு நல்ல மருந்தான மாதுளை, தடைபட்ட சிறுநீரை வெளியேற்றவும் செய்யும். குடல்புண்ணை ஆற்றும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தியை நிறுத்த மாதுளம்பழத்தின் சாறை அருந்தலாம். மேலும் இது, கர்ப்பகால ரத்தசோகையைப் போக்கும். உடல்சோர்வைப் போக்க மாதுளம்பழத்தின் சாறுடன் கல்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். மாதுளை கடுமையான இதய வலியைப் போக்கக்கூடியது.
அன்னாசிப்பழம்: அன்னாசிப்பழத்தில் வைட்டமின் பி உயிர்ச்சத்து உள்ளது. இது உடலுக்குப் பலம் தருவதுடன், ரத்தத்தை விருத்தி செய்யக்கூடியது. வெள்ளைப்படுதல் பிரச்சினை உள்ள பெண்கள் தொடர்ந்து அன்னாசிப்பழம் சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும். அன்னாசியில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ், தாது உப்புகள் போன்ற முக்கிய சத்துகள் அடங்கியுள்ளன. தாது உப்புகள் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்துக்கு மிகவும் முக்கியமாகும். கொழுப்புச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிக மாகவும் உள்ள அன்னாசி இதய நோய் வராமல் தடுக்கக்கூடியது. தொப்பையைக் கரைக்கமுடியாமல் கஷ்டப்படுபவர்களுக்கு அன்னாசி ஒரு நல்ல மருந்து. அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, நான்கு டேபிள்ஸ்பூன் பொடியாக்கிய ஓமம் சேர்த்து நீர் ஊற்றிக் காய்ச்ச வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் எழுந்து வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாட்கள் பருகிவந்தால், தொப்பை குறையும். மிளகு ரசத்துடன் அன்னாசிப்பழம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.மாதுளம்பழம்: இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று ரகங்கள் உள்ள மாதுளம்பழம், இதயம், மூளை போன்றவற்றுக்கு சக்தி தரக்கூடியது. புளிப்பு மாதுளை வயிற்றுக்கடுப்பைப் போக்கும். ரத்தபேதிக்கு நல்ல மருந்தான மாதுளை, தடைபட்ட சிறுநீரை வெளியேற்றவும் செய்யும். குடல்புண்ணை ஆற்றும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தியை நிறுத்த மாதுளம்பழத்தின் சாறை அருந்தலாம். மேலும் இது, கர்ப்பகால ரத்தசோகையைப் போக்கும். உடல்சோர்வைப் போக்க மாதுளம்பழத்தின் சாறுடன் கல்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். மாதுளை கடுமையான இதய வலியைப் போக்கக்கூடியது.
Subscribe to:
Posts (Atom)
















