Monday 16 March 2020

கோவிட்-19 வைரஸ் அச்சத்தில் இருந்து விடுபட சில வழிகாட்டுதல்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் முதன் முதலில் மக்களை பாதிக்கத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் 114 நாடுகளில் பரவி மக்களைப் பாதித்துள்ளது. கோவிட் -19 வைரஸ் பரவுவதை தடுக்க பதற்றம் அடையாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உலக சுகாதார மையம் உள்ளிட்ட சர்வதேச நிறு வனங்கள் அறிவுறுத்தி இருக்கின்றன.

கோவிட்-19 வைரஸ் அச்சத்தில் இருந்து விடுபட சில வழிகாட்டுதல்கள்:

 கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்று நோய் என்பதால் அது ஒரு நபரிடம் இருந்து மற்றவர்களுக்கு நேரடியாகவும் மறைமுக மாகவும் பரவக்கூடும்.

 மூக்கு, தொண்டை, சுவாசக் குழாய் மற் றும் நுரையீரலை பாதிக்கும் தொற்று இது.

 இந்த காய்ச்சல் 60 வயதுக்கு மேற் பட்டோர் மற்றும் உடல் ஆரோக்கியம் குன்றியவர்களையே தீவிரமாகப் பாதிக் கிறது. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக் கும் மிதமான தாக்கத்தையே ஏற்படுத்தக் கூடியது.

 கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டாலும் கவலை வேண்டாம். 80 சதவீதத்தினருக்கு மிதமான பாதிப்பு மட்டுமே இருக்கும். உரிய மருத்துவ சிகிச்சை மூலம் இரண்டு வாரங்களில் நீங்கள் குணமடைந்து விடலாம்.

 கோவிட் -19 காய்ச்சல் உள்ளவர் தும்மி னாலோ, இருமினாலோ பரவும் நீர்த்துளி மற்றொருவரின் கண், நாசி, வாய் பகுதியில் பட்டால் காய்ச்சல் தொற்றும்.

 காய்ச்சல் உள்ளவர்கள் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் தொடும்போது பரவும்.

 உணவு வழியாக இந்த வைரஸ் பரவாது.

 கோழி, முட்டை ஆகியவற்றை சாப்பிடுவ தால் பரவாது.

 சாதாரண வைரஸ் காய்ச்சலையும் கோவிட் - 19 காய்ச்சலையும் இடை யில் வேறுபடுத்துவது எப்படி என்ற குழப்பம் நிலவுகிறது. காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் ஆகியவை இருந்தாலோ, சீனா, ஈரான், இத்தாலி, கொரியா உள் ளிட்ட கோவிட் - 19 வைரஸ் பரவி இருக் கும் நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் சென் றிருந்தாலோ, கோவிட்-19 காய்ச்சல் உள்ள வர்களுடன் இருந்தாலோ, கோவிட்-19 வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் மருத்துவ மனைக்கோ அல்லது மையத்துக்கோ சென்றிருந்தாலோ உங்களுக்கு வந்திருப் பது கோவிட்-19 பாதிப்பாக இருக்கலாம்.

 மிதமாக தாக்கும்பட்சத்தில் 2 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை கோவிட்-19 வைரஸ் தாக்கம் நீடிக்கும். ஒருவேளை காய்ச்சல், சளி, தொண்டைக்கட்டு இருக்குமானால் பதற்றமடைய வேண்டாம். நாளொன்றுக்கு 2-3 முறை ஆவிபிடியுங்கள், சுத்தமான நீரை அடிக்கடி பருகுங்கள், அவ்வப்போது கைகளைச் சுத்தமாகக் கழுவுங்கள், காய்ச்சல் தீவிரமடைவதாகத் தெரிந்தால் மருத்துவரை அணுகுங்கள். மருத்துவரின் வழிகாட்டுதலின்படி முறையாக மருந்தை உட்கொள்ளுங்கள்.

 ஒருவருக்கு கடும் காய்ச்சல் இருப்பதா லேயே அவருக்கு கோவிட்-19 வைரஸ் தாக்கிவிட்டதாக முடிவுசெய்துவிடுவது தவறு. காய்ச்சல் வந்தவர்க்கெல்லாம் கோவிட்-19 வைரஸ் சோதனை அவசியமில்லை. அதை மருத்துவர்தான் தீர்மானிக்க வேண்டும்.

 வைரஸ் பாதித்தாலும் அதிலிருந்து முழுவதுமாக குணமடைய முடியும். சிறப்பு சிகிச்சை ஏதுமின்றி இதிலிருந்து 80 சதவீதத்தினர் குணமடைந்துவிட்டார்கள் என்பது நிரூபணமாகி உள்ளது.

 கோவிட்-19 வைரஸ் வராமல் தடுக் கும் நோய் தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக் கப்படவில்லை. இருப்பினும் நோய் தொற்று ஏற்பட்டவர்களில் 80 சதவீதத்தினர் பூரணமாகக் குணமடைந்து இருக்கிறார்கள்.

 பூண்டு சாப்பிடுவதால் கோவிட்-19 வைரஸை தடுக்க முடியும் என்பது பொய்.

 வெயில் காலத்தில் கோவிட்-19 வைரஸ் பரவாது என்பதற்கு அறிவியல் நிரூபணம் ஏதுமில்லை. இருப்பினும் வெப்பம் அதிகரித்தால் கோவிட்-19 வைரஸ் பரவும் வேகம் குறையலாம் என்று கூறப்படுகிறது.

 கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவரின் சளி, எச்சில் ஆகியன காகிதம், மரம், அட்டை, கண்ணாடி, பிளாஸ்டிக் பொருட்கள், இரும்பு ஆகிய பொருட்களின் மீது படிந்தால் 8-10 மணி நேரம் வரை கோவிட்-19 வைரஸ் வீரியம் குறையாமல் உயிருடன் இருக்கும். அப்பொருட்களைத் தொடுபவர்களுக்கு காய்ச்சல் தொற்றிக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

 மூன்று அடுக்கு கொண்ட முகக் கவசத்தை கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் உடையவர்கள் அணிவது நல்லது.

உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?
 சோப்பு போட்டு நீரில் கைகளை நன்றாகக் கழுவுதல்.

 சோப்பு, தண்ணீர் கிடைக்காதபோது சானிடைஸர் பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்தி கொள்ளுதல்.

 அழுக்கான கைகளால் கண், வாய், மூக்கு ஆகிய உறுப்புகளை தொடுவதை தவிர்த்தல் .

 இருமல், தும்மல் இருப்பவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் தொலைவில் தள்ளி இருப்பது நல்லது.

 கை குலுக்குவதற்கு பதில் கைகூப்பி வணக்கம் சொல்லுதல்.

உங்களுக்குப் பிரியமானவர்களை பாதுகாப்பது எப்படி?
 இருமல், தும்மல் வரும் போது கட்டாயம் கைக்குட்டையை பயன்படுத்துதல்.

 கூட்ட நெரிசலான இடங்களுக்கு செல்வதையும் வெளியூர் பயணங்களையும் தவிர்த்தல்.

 நோய் தொற்று இருக்குமானால் கட்டாயம் முகக் கவசம் அணிதல்.

கல்விச்சோலை - kalvisolai health tips

1 comment:

eilisigleheart said...

Casino Tycoon - Mapyro
Find Casino Tycoon, Casino 대전광역 출장안마 and Table Games near you 안성 출장안마 in Gary, IN at Mapyro. A variety 정읍 출장안마 of games with a casino floor and even 상주 출장안마 a sportsbook at the 광양 출장샵 casino.