Sunday, 21 October 2018

பெண்களின் உடல் மணக்கட்டும்..

பெண்கள் வியர்வை நாற்றத்தால் மிகுந்த அவஸ்தைகளை அனுபவிக் கிறார்கள். மற்றவர்கள் தன்னை பார்த்து முகம்சுளித்துவிடுவார்களோ என்று நினைத்து கவலைப்படவும் செய்வார்கள். அது அவர்களுக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடக்கூடும். நமது உடலில் இரண்டு வகை வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அதில் ‘ஏக்ரைன்’ எனப்படும் சாதாரண வியர்வை சுரப்பிகள், உடலில் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்றன. ‘அப்போகிரைன்’ எனப்படும் இன்னொரு வகை வியர்வை சுரப்பி கள் அக்குள், பிறப்பு உறுப்பு சருமப்பகுதி, மார்பு காம்பைச் சுற்றியுள்ள கறுப்பு பகுதி போன்ற இடங்களில் காணப்படுகின்றன. வயதுக்கு வந்த பின்பே இந்த சுரப்பிகள் பெரிதாகி செயல்படத் தொடங்குகின்றன. எல்லாவகை வியர்வை சுரப்பிகளுமே லேசான எண்ணெய்த்தன்மை கொண்ட திரவத்தை சுரக்கின்றன. அது மணமற்றது. இயற்கையானது. அது நமது உடல் இயக்கத்தின் வெளிப்பாடுதான். ஆனால் அந்த திரவத்தில் நமது சருமத்தில் இருக்கும் சில வகை பாக்டீரியாக்கள் சேர்ந்து செயல்படும்போது, அது ரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகிறது. அத்துடன் சேபாஷியஸ் சுரப்பி சுரக்கும் திரவமும் சேர்ந்து நாற்றமடிக்கும் நிலைக்கு செல்கிறது. இந்த வாடையை நீக்கி, உடலை மணக்கச் செய்வது எப்படி? வியர்வைத் துளிகள் அப்போகிரைன் சுரப்பிகளில் இருந்து வெளிப்பட்டு சில மணி நேரம் கடந்த பின்பே பாக்டீரியாக்களோடு சேர்ந்து ரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகும். அந்த வேதிவினை மாற்றம் ஏற்படுவதற்கு முன்னால் கழுவித் துடைத்து சுத்தம் செய்துவிட்டால் வாடை வீசாது. அந்த பகுதிகளை சுத்தம் செய்ய வீரியம் குறைந்த சோப்பை பயன்படுத்த வேண்டும். வியர்வை நாற்றத்தைப் போக்க டியோடரண்டுகளை பயன் படுத்துகிறார்கள். அவற்றில் இருவகைகள் உள்ளன. மருத்து வரின் ஆலோசனை பெறாமலே கடைகளில் வாங்கக்கூடியவை, அதில் முதல் வகை. இது அழகு சாதனப் பொருட்கள் பட்டியலில் இடம்பெறக்கூடியது. அது பாக்டீரியாக்களின் செயல்பாட்டை தற்காலிகமாக தடுத்து, நாற்றத்தை போக்கும். உடலில் மணத்தை வீசச்செய்யும் நறுமணப் பொருட்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டாவது வகையாக குறிப்பிடப்படுபவை, ஆன்டி பெர்ஸ்பிரண்ட் எனப்படுகிறது. இதில் மருந்துப்பொருட்கள் அடங்கி யிருக்கின்றன. அவை வியர்வை சுரப்பிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, வியர்வை அதிகமாக வெளியேறுவதை தடுக்கிறது. தற்போது பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்பவர் களாக இருக்கிறார்கள். வெயிலில் அலைவது, பயணம் செய்வது போன்றவைகளை அவர்களால் தவிர்க்க முடிவதில்லை. அதனால் வியர்வை பிரச்சினையை தவிர்க்க டியோடரண்டுகளை பயன்படுத்துகிறார்கள். ஸ்பிரே, ரோல் ஆன், ஸ்டிக், ஜெல், லிக்யூட், பவுடர் போன்ற பல வகைகளில் அவை கிடைக்கின்றன. ஸ்டிக், பவுடர் போன்றவைகளை பயன்படுத்தினால் ஈரத்தன்மை ஏற்படாது. அவை ‘டிரை டியோடரண்ட்’ என்று அழைக்கப்படுகின்றன. இதன் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. உடலில் பூசும் விதத்தில் ‘கிரீம் டியோடரண்டு’கள் உள்ளன. கை விரலால் எடுத்து இதனை பயன்படுத்தவேண்டும். ரோல் ஆன் பயன்படுத்தும்போது முனைப்பகுதியில் பந்து போன்று காணப்படுவது சுழன்று, உள்ளே இருக்கும் திரவம் சருமத்தில் பரவும். ஸ்பிரே டியோடரண்டை சருமத்தில் மிக நெருக்கமாக பயன்படுத்தக்கூடாது. சருமத்தில் நெருக்கமாகவைத்து ஸ்பிரே செய்தால் சருமத்தின் இயல்புத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டு கொப்பளங்கள் போன்று தோன்றக்கூடும்.
டியோடரண்டுகள் பயன்படுத்துகிறவர்கள் கவனிக்க..

ரசாயனப் பொருட்களின் கலவைதான் டியோடரண்டுகளாக உருவாகின்றன. எல்லோருடைய சருமத்திற்கும், எல்லா விதமான ரசாயனங்களும் ஒத்துக்கொள்ளாது. ஒத்துக்கொள்ளாததை பயன்படுத்தினால் அலர்ஜி ஏற்படும். சருமத்தில் அலர்ஜி ஏற்பட்டால் அதை பயன்படுத்தாதீர்கள்.

டியோடரண்ட் பயன்படுத்தும் ஆண்கள், முகசவரம் செய்த உடன் இதனை பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் சொறி, திட்டாக தடித்தல் போன்றவை ஏற்படும். இந்த தொந்தரவை தவிர்க்க ஒரு மணி நேர இடைவெளியாவது அவசியம்.

திரவம் மற்றும் ஸ்பிரே வடிவில் இருக்கும் டியோடரண்ட்டை நன்றாக குலுக்கிவிட்டு பயன்படுத்துங்கள்.

சில வகை டியோடரண்டுகள் வியர்வையோடு செயல்பட்டு அணியும் உடைகளில் மஞ்சள் நிறத்தை உருவாக்கிவிடும். அதை கவனத்தில்கொண்டு பயன்படுத்துங்கள். ஒரே இடத்தில் அதிக அளவு டியோடரண்டு பயன்படுத்த வேண்டாம்.

எந்த டியோடரண்டை பயன்படுத்தி வியர்வை வாடையை போக்கலாம் என்று திட்டமிடுவதற்கு பதில், உடலை சுத்தமாக வைத்திருப்பதில் அதிக அக்கறை செலுத்துங்கள். தினமும் குளித்து, உடலை சுத்தமாக வைத்திருக்க முயற்சிப்பது, டியோடரண்டு பயன்பாட்டை குறைக்கும். உடலையும் மணக்கச் செய்யும்.

கல்விச்சோலை - kalvisolai health tips

Sunday, 14 October 2018

கருப்பட்டி வெல்லத்தின் சிறப்புகள்

கருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கை சப்பு கொட்டவே செய்வர். கருப்பட்டியின் சுவை அப்படி. இனிப்பு சுவைக்கு இன்று சர்க்கரை பயன்படுத்தி வருகிறோம். முன்பெல்லாம் கருப்பட்டி தான் இனிப்புக்கென பயன்படுத்தி வந்துள்ளனர். சீனி என்ற வெள்ளை சர்க்கரை கண்டறிந்து பலபகுதிகள் பயன்படுத்திய போதும் கிராமப்புறங்களில் பெரும்பாலும் கருப்பட்டி காபிதான் குடிப்பார்கள். மேலுக்கு சுகமில்லாதபோது கொஞ்சம் கருப்பட்டியை தட்டி போட்டு காபி தூள் கொஞ்சம் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் மேல் வலி எல்லாம் குறைஞ்சு சுறுசுறுப்பாகிவிடுவர். அந்தளவிற்கு கிராமத்து பகுதிகளில் கருப்பட்டி உபயோகம் பெரும்பாலும் காபி போடத்தான் பயன்பட்டது. அதுபோல் சில பகுதிகளில் இனிப்பு பலகாரங்கள் செய்ய கருப்பட்டி மட்டுமே பயன்படுத்துபவர்களும் உள்ளனர். நாம் தமிழ்நாட்டு மக்களோடு ஒன்றிணைந்த கருப்பட்டி பயன்பாடு சர்க்கரை வந்த பிறகு பெரும்பாலும் குறைந்து விட்டது. தற்போது மீண்டும் மக்களிடம் கருப்பட்டி பயன்பாடு அதிகரித்து உள்ளதன் காரணமாக அது குறித்த விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. கருப்பட்டி எனும் பனை வெல்லம் பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீரை காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்பது கிடைக்கின்றது. இதனை பனை வெல்லம், பனாட்டு, பனை அட்டு என்று சொல்வார்கள். தென் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும் பனை மரங்கள் மூலம் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி போன்ற 6 மாதம் மட்டுமே பதனீர் கிடைக்கும். பங்குனி, சித்திரை மாதங்கள் பதநீர் இறக்குவது அதிகமாக இருக்கும். அந்த சமயங்களில் கருப்பட்டி அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. வட்ட வடிவிலான இரும்பு பாத்திரமே கருப்பட்டி காய்ச்ச பயன்படுத்தப்படுகிறது. இதற்கு தாச்சு என்று பெயர். இதில் சுமார் 15 லிட்டர் பதநீரை ஊற்றி இரண்டு மணி நேரம் கிளறி பதம் வந்ததும் எடுத்து அச்சுகளில் வார்த்து எடுத்தால் அதிகபட்சம் 3 கிலோ அளவிற்கே கருப்பட்டி கிடைக்கும். இதன் காரணமாக கருப்பட்டி உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட அளவிற்கே மேற்கொள்ளப்படும். ஆனால் ஆண்டு முழுவதும் சில்லு கருப்பட்டியின் தேவையுள்ள காரணத்தால் அதில் ஏராளமான கலப்படங்கள் செய்து விற்பனைச் செய்யப்படுகின்றன. எனவே, கருப்பட்டி வாங்கும்போது நல்ல தரமான கருப்பட்டி தானா என்பதை கண்டறிந்து வாங்குதல் வேண்டும். தரமான கருப்பட்டி கண்டறியும் முறைகள் நல்ல தரமான கருப்பட்டி என்பது சீக்கிரமாக கரையாது. தண்ணீரில் ஒரு துண்டு கருப்பட்டியை போட்டால் அது முழுதாக கரைய ஒன்றரை மணி நேரம் ஆகும். போலியான கருப்பட்டி என்பது சீக்கிரமே கரைந்து விடும். கருப்பட்டியை நாவில் வைத்து சுவைக்கும்போது கரிப்பு தன்மையுடன் கூடிய இனிப்பு சுவையாக இருக்கும். அதுபோல் கருப்பட்டியில் உட்புறப் பகுதி என்பது கறுப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலானதாக இருக்கும். இதுவே பளபளப்பாக காட்சி தந்தால் அது போலி கருப்பட்டி என்பதாகும். அதுபோல் விவரமறிந்தவர்கள் கருப்பட்டியின் அடிப்பாகத்தை நுகர்ந்து சோதித்து பார்த்து வாங்குவது நலம். ஏனென்றால் உற்பத்தி குறைவு, பனை மரம் இன்மை போன்றவைகளால் சற்று விலை கூடுதலாக தான் கருப்பட்டி கிடைக்கும். கருப்பட்டியில் மருத்துவ குணங்கள் கருப்பட்டியை காபி, டீ போன்றவைகளில் கலந்து தினசரி அருந்தி வரலாம். சர்க்கரை நோயாளிகள் கூட கருப்பட்டி காபியை குடிக்கலாம். ஏனெனில் உடல் செயல்பாட்டிற்கு ஏற்ற கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால் அதிக கலோகரிகள் இன்றி உடல் ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. அதிக இரும்புச்சத்து நிறைந்துள்ளது என்பது ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது. கல்லீரலில் சேரும் நச்சுகளை வெளியேற்றி கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுப்பதன் மூலம் இடுப்பு எலும்பு வலு பெறுவதுடன், கருப்பைக்கு வலுவைத் தருகிறது. கருப்பட்டியை உணவு உட்கொண்ட பின் சிறிய துண்டு எடுத்து சாப்பிட்டால் செரிமான சக்தியை தூண்டி எளிதில் உணவு செரிமானம் அடைய செய்கிறது. குடலின் இயக்கம் சீராகி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாதவாறு செயல்படுகிறது. கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்க செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து அதன் மூலம் இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. அதுபோல் பொட்டாசியம் சத்து மூலம் நரம்பு மண்டலமும் ஆரோக்கியம் பெறுகிறது. கருப்பட்டியுடன் சீரகம் கலந்து பொடித்து உண்ணும்போது நல்ல பசி ஏற்படுகிறது. குழந்தைகள் உணவு சாப்பிடாடல் அடம் பிடிக்கும்போது சீரக கருப்பட்டி உருண்டையை செய்து கொடுத்து விடுங்கள் பிறகு குழந்தைகள் நன்றாக சாப்பிட ஆரம்பித்து விடும். காலசூழலில் கருப்பட்டி பயன்பாடு குறைந்து விட்ட போதிலும் தற்போது மீண்டும் கருப்பட்டி பலகாரங்கள் பல கடைகளில் கிடைக்க ஆரம்பித்துள்ளன.

கல்விச்சோலை - kalvisolai health tips

Tuesday, 9 October 2018

வயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்!!!

வயிற்று உபாதைகள் நம்மை பாடாய்படுத்தும் ஒரு பிரச்சினை ஆகும். வயிற்றுவலி, மலச்சிக்கல், வீக்கம், வயிற்றுப்போக்கு என வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகள் ஏராளம். இதற்கு பலகாரணங்கள் உள்ளது. காலநிலை மாற்றம், உணவுகள் என வயிற்றில் சூட்டை கிளப்பும் காரணங்கள் பல உள்ளது.இந்த வயிற்று சூடானது உணவுகள் செரிப்பதில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த வயிற்றின் வெப்பநிலை அதிகரிக்க குறிபிட்ட காரணம் என்று எதுவும் இல்லை. பொதுவாக காரமான உணவுகள், அதிகமாக சாப்பிடுவது, தாமதமாக சாப்பிடுவது, அதிக ஆல்கஹால் குடிப்பது, அதிக மாத்திரைகள் சாப்பிடுவது போன்றவை இதன் கரணங்கள் ஆகும். இதை குணமாக்கும் எளிய வழிகள் என்னவென்பதை பார்க்கலாம். வயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள் தயிர்; பெரும்பாலான பால் பொருட்கள் ஜீரணிப்பது கடினமானது. ஆனால் தயிர் சற்று எதிர்மறையான குணங்களை கொண்டது. இதில் உள்ள பல பண்புகள் உங்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கி வயிற்றின் சூட்டை குறைத்து செரிமானத்தை அதிகரிக்கிறது. இல்லையெனில் மோர் குடியுங்கள் அதுவும் நல்ல பலனைத்தரும். வயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள் குளிர்ந்த பால்குளிர்ந்தபால் வயிறு வெப்பநிலையை குறைப்பதோடு வயிற்றின் அமிலத்தன்மையை குறைக்கிறது.இதில் உள்ள சில பண்புகள் வெப்பத்தால் வயிற்றில் ஏற்படக்கூடிய அசௌகரியத்தை குறைக்கிறது. தினமும் குளிர்ந்த பாலை பச்சையாக குடிப்பது உங்களுக்கு சூட்டால் ஏற்படும் பிரச்சினையை குறைக்கிறது. வயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள் சாதம் வயிறு சூட்டின் அறிகுறிகளாக அசௌகரியத்தை தவிர வேறு எதுவும் உணரமுடியாது. இதற்கு சிறந்த மருந்து சாதமாகும். இது வயிற்று சூட்டை குறைத்து உடலில் நீரின் அளவைஅதிகரிக்கிறது. சாதத்தில் எந்தவித மசாலா பொருட்களையும் சேர்க்காதீர்கள். இதனை தயிருடன் சேர்த்தும் சாப்பிடலாம். மிளகுக்கீரை மற்றும் செவ்வந்திப்பூ போன்ற மூலிகைகள் வயிற்றுசூட்டை தணிக்க உதவும். இதற்கு காரணம் இவற்றின் குளிர்ச்சி பண்புகள்தான். மிளகுக்கீரை மற்றும் செவ்வந்திப்பூவை வைத்து தேநீர் தயாரித்து குடிப்பது உங்கள் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை குறைக்கும். நீர் உணவுகள் சிட்ரிக் அமிலம் இல்லாத உணவுகள் மற்றும் பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். ஆப்பிள், வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற பழங்களில் சிட்ரஸ் அமிலத்தின் அளவு குறைவாக இருப்பதுடன் நீர்சத்துக்களும் அதிகம் உள்ளது. இவை வயிற்றின் வெப்பநிலையை குறைப்பதுடன் செரிமானத்தையும் சீராக்குகிறது.அதிக தண்ணீர் பல்வேறு விதமான உணவு பழக்கங்களால் ஏற்படும் வயிற்றுசூட்டை தணிக்க அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் நமது உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற உதவுவதுடன் செரிமான மண்டலத்தையும் சீராக்குகிறது.தேங்காய் நீர் தேங்காய் நீர் அல்லது இளநீர் உடல் சூட்டை தணித்து வெப்பநிலையை சமநிலைப்படுத்த உதவுகிறது. இதற்கு காரணம் இதில் உள்ள அல்கலைன் ஆகும். இது மற்ற உணவுகளால் உருவாக்கப்பட்ட சூட்டை குறைக்கிறது .

கல்விச்சோலை - kalvisolai health tips

Sunday, 7 October 2018

ஆவாரம்பூ டீ !

நம்முடைய ஆயுளை அதிகரிக்கச் செய்கின்ற ஆயிரமாயிரம் மருத்துவ குணங்கள் இந்த ஆவாரம்பூவில் உண்டு. அத்தகைய அரிய மருத்துவ குணம் மிக்க மூலிகை பற்றி இங்கே வரிவாகப் பார்க்கலாம். ஆவாரம்பூவானது கடுமையான வறட்சியாக காலத்திலும் இடத்திலும் கூட செழித்து வளரக் கூடிய ஒரு மருத்துவ தாவரமாகும். இந்த செடியினுடைய இலை, பூ, காய், பட்டை, வேர் என ஐந்து முக்கிய பாகங்களுமே மருந்தாகப் பயன்படும். வளரும் இடம் ஆவாரம்பூவானது கடுமையான வறட்சியாக காலத்திலும் இடத்திலும் கூட செழித்து வளரக் கூடிய ஒரு மருத்துவ தாவரமாகும். இந்த செடியினுடைய இலை, பூ, காய், பட்டை, வேர் என ஐந்து முக்கிய பாகங்களுமே மருநு்தாகப் பயன்படும். ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்று ஒரு அற்புதமான பழமொழி கூட இந்த தாவரம் பற்றி இருக்கிறது. அந்த அளவுக்கு இந்த ஆவாரையில் உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் நிறைந்திருக்கிறது. அடங்கியவை ஆவாரம்பூவில் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, டென்ஸ்போயிட்கள், டானின்கள், ஃபிளவனாயிடுகள், சபோனின், கிளைக்கோசைடு, ஸ்டீராய்டு போன்ற வேதிப் பொருள்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கல் மலச்சிக்கலை நாம் மிகச் சாதாரணமாக விட்டுவிடுகிறோம். ஆனால் இந்த மலச்சிக்கல் தான் பல நோய்கள் உண்டாவதற்கு அடிப்படை காரணமாக அமைகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு முறை உடலில் இருந்து மலம் வெளியேறினாலே போதும் நம்முடைய உடலில் நோய்கள் அண்டாது. மலச்சிக்கல் பிரச்சினை இருக்கிறவர்கள் தினமும் இரண்டு வேளை ஆவாரம்பூ டீ போட்டு குடித்தால், இந்த பிரச்சினையே அடியோடு காணாமல் போய்விடும். சருமத் தொற்று நம்முடைய சருமத்திலும் பூஞ்சைத் தொற்றுக்கள் உண்டாகும். இதுபோல் உண்டாகிற சரும பூஞ்சைத் தொற்றை சரிசெய்ய வேண்மென்றால், ஆவாரம்பூவை அரைத்து சருமத்தில் தடவலாம். அல்லது தேநீராக்கி உள் மருந்தாகவும் குடிக்கலாம். சிறுநீர் தொற்று ஆவாரம்பூ டீ செய்து குடித்தால் சிறுநீர் பாதையில் உண்டாகும் தொற்று நோய்கள குணமடையும். உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இரத்தம் பெருகும். உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். சிறுநீர் கடுப்பு குணமடையும். காய்ச்சல் அதிகப்படியான மருத்துவு குணங்கள் கொண்ட ஆவாரம்பூ தேநீரை தினமும் தொடர்ந்து பருகி வந்தால், காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் குணமடையும். தீராத காய்ச்சலும் தீர்ந்து போகும். நீரிழிவு நோய் பெரும்பாலானோர் உணவுக் கட்டுப்பாடு இன்றி, இன்சுலின் சுரப்பு சரியாக இல்லாமல், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுகிறார்கள். அப்படி சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்களுக்கு ஆவாரம் செடியினுடைய பட்டையானது சிறந்த தீர்வாக இருக்கும். ஆவாரம் பட்டையை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வர, சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேகவெட்டு, சிறுநீரில் ரத்தம் கசிதல் ஆகிய பிரச்சினைகளையும் தீர்க்கும். இதற்கு காய்ச்சும்போது, பட்டையைப் போட்டு, நன்கு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். மேனி பளபளப்பு ஆரோக்கியம் மட்டுமல்ல. அழகு விஷயத்திலும் மிகச்சிறந்த பலன்களைத் தரும் ஆவாரம்பூ. ஆவாரம்பூவை உலர வைத்து பொடி செய்து, குளிக்கும்போது மேனிக்குப் பயன்படுத்தலாம். இதனால் உடலில் ரத்தம் சுத்தமடையும். அதோடு மேனியும் தங்கமாக மின்ன ஆரம்பிக்கும். வயிற்றுப்புண் காய வைத்து பொடி செய்த ஆவாரம்பூ பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகி வந்தால், உடல்சூடு, பித்தம், நீர்க்கடுப்பு, அதிக உதிரப் போக்கு ஏற்படுதல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, குடல்புண், வயிற்றுப்புண் என வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை அத்தனையும் தீரும்

கல்விச்சோலை - kalvisolai health tips

கருப்பு சாக்லேட்

கருப்பு சாக்லேட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதம் மூன்று சாக்லேட்டுகளை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பின் அளவு 13 சதவீதம் குறைவாக இருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ‘‘அதிலுள்ள கோகோவில் உள்ளடங்கி இருக்கும் இயற்கை மூலப்பொருட்கள் ரத்த குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது’’ என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். "சாக்லேட்டில் உள்ள பிளவோனாய்டுகள் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், ரத்த குழாய்களின் வீக்கத்தை கட்டுப் படுத்தவும் உதவுகிறது’’ என்கிறார், பிரபல ஆராய்ச்சியாளர் சயாகிரிட் கிரிட்டினவாங்க். ‘‘கருப்பு நிற சாக்லேட் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அதிலிருக்கும் கோகோ உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை விளைவிக்கிறது. அதில் சர்க்கரையின் அளவும் சீராக இருக்கிறது. சாப்பிடும் சாக்லேட்டில் குறைந்தபட்சம் 75 சதவீதம் கோகோ உள்ளடங்கி இருக்க வேண்டும். அத்தகைய சாக்லேட்டுகளை சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது’’ என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது. ரத்த ஓட்டம் சீராக நடை பெறுவதற்கும், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கும் கருப்பு சாக்லேட் சாப்பிடலாம். 100 கிராம் கருப்பு சாக்லேட்டில் 75 முதல் 85 சதவீதம் வரை மெக்னீசியம், தாமிரம், இரும்பு, மாங்கனீஷ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சீலியம், தாதுக்கள் உள்ளிட்ட கோகோ மூலப்பொருட்கள் இருக்கின்றன. அதேவேளையில் இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் டாக்டர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு சாப்பிட வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai health tips

Tuesday, 2 October 2018

வெந்தயம் எப்படி உடல் எடையைக் குறைக்கிறது?

உடல் எடையை வெகுவாக குறைக்க வெந்தயத்தை எப்படியெல்லாம் சாப்பிடணும் தெரியுமா ?நம் வீட்டுச் சமையலறையில் ஏராளமான மருத்துவ குணம் நிறைந்த மற்றும் மிகுந்த கசப்பைக் கொண்ட ஓர் பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் நம் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது தெரியுமா?நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறீர்களா? என்ன செய்தாலும் உங்கள் உடல் எடை மட்டும் குறையமாட்டீங்குதா? அப்படியெனில் வெந்தயத்தைக் கொண்டு உடல் எடையைக் குறைக்க முயற்சித்துப் பாருங்கள்.சரி, இப்போது உடல் எடை குறைய வெந்தயத்தைப் எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்பது குறித்து காண்போம்.

வெந்தயம் எப்படி உடல் எடையைக் குறைக்கிறது?
வெந்தயத்தில் உள்ள காலக்டோமானன், மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரைகளை உடைத்தெறிந்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் தேவையற்ற கொழுப்புக்களைக் கரையச் செய்யும்.
வெந்தயம் வயிற்றை நிரப்பி, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும்.
வெந்தயத்தில் உள்ள ஆரோக்கியமான கார்போஹைட்ரேட், உடல் பருமனடைவதைத் தடுக்கும்.
வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலைத் தடுத்து, உடலின் மெட்டபாலிச அளவை ஊக்குவிக்கும். இதன் காரணமாக அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைக்கப்படும்.

வெதுவெதுப்பான வெந்தய நீர்
வெந்தயத்தை பொடி செய்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மேலும் வெந்தயப் பொடியை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம் நன்மை கிட்டும்.

முளைக்கட்டிய வெந்தயம்
வெந்தயத்தை முளைக்கட்ட வைத்தால், அதில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமான அளவில் நிறைந்திருக்கும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வெந்தயத்தை முளைக்கட்டச் செய்வது எப்படி?
முதலில் வெந்தயத்தை நீரில் நன்கு கழுவி, ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 12 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.பின் அந்நீரை வடிகட்டிவிட்டு, ஒரு ஈரமான மஸ்லின் துணியில் வெந்தயத்தைப் போட்டு கட்டி, அறைவெப்பநிலையில் வைக்க வேண்டும்.பிறகு 12 மணிநேரம் கழித்து, வெந்தயத்தைக் கழுவி விட்டு, மீண்டும் துணியில் கட்டி வைக்க வேண்டும். இப்படி 2-3 நாட்கள் செய்து வர, வெந்தயம் முளைக்கட்டியிருப்பதைக் காணலாம்.

நீரில் ஊற வைத்த வெந்தயம்
ஒரு கையளவு வெந்தயத்தை இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டிவிட்டு, வெந்தயத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால், நாள் முழுவதும் வயிறு நிறைந்து, பசியுணர்வு கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதன் காரணமாக கண்ட உணவுகளின் மீது நாட்டமும் குறையும்.

வெந்தயம் மற்றும் தேன்
ஒரு டம்ளர் நீரில் வெந்தயப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, அதில் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, காலையில் எழுந்ததும் குடித்தாலும், உடல் எடை குறையும்.

வெந்தய டீ
வெந்தயத்தைக் கொண்டு டீ தயாரித்துக் குடித்தால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்குவதுடன், உடல் எடையையும் குறைக்க உதவும். குறிப்பாக இது செரிமானத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். அதிலும் வெந்தய டீயுடன் பட்டைத் தூள் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம்

கல்விச்சோலை - kalvisolai health tips