- தினமும் மூன்று தடவைக்கு மேல் பல் துலக்குவது ஒழுங்கற்ற இதய துடிப்பு, இதய செயலிழப்பு போன்ற அபாயங்களை குறைக்க வழிவகை செய்யும் என்பது ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
- தென்கொரியாவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 286 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் 40 முதல் 79 வயதுக்கு உட்பட்டவர்கள்.
- அவர்களின் உயரம், எடை, தாக்கிய நோய்கள், வாழ்க்கை முறை, வாய்வழி சுகாதாரம் உள்ளிட்ட தகவல்களை பரிசோதனை மூலம் சேகரித்திருக்கிறார்கள்.
- தினமும் அவர்கள் பல் துலக்குவதையும் கவனத்தில் கொண்டிருக்கிறார்கள். பற்களை எந்த அளவுக்கு தூய்மையாக பராமரிக்கிறார்கள், வாய் சுகாதாரம் பற்றி எந்த அளவுக்கு விழிப்புணர்வு கொண்டிருக்கிறார்கள் என்பது போன்ற விஷயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன.
- 10 ஆண்டுகள் அவர்களை பரிசோதனை செய்து வந்ததில் முறையாக பல் துலக்காதவர்களில் 4,911 பேர் ஒழுங்கற்ற இதய துடிப்பு பிரச்சினைக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது.
- அதுபோல் 7,971 பேர் இதய செயலிழப்பு பாதிப்பையும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.
- அதேவேளையில் பல் துலக்கும் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியவர்களுக்கு பாதிப்பு ஏற்படாததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
- தினமும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை பல் துலக்குபவர்களுக்கு ஒழுங்கற்ற இதய துடிப்பு ஏற்படுவதற்கான அபாயம் 10 சதவீதம் குறைவாக இருக்கிறது.
- அதுபோல் இதயம் செயலிழப்புக்கான அபாயமும் 12 சதவீதம் குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
- இதுகுறித்து ஆய்வை மேற்கொண்ட தென்கொரியாவில் உள்ள ஈவா பெண்கள் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானி டே-ஜின் சாங், ‘‘நாங்கள் ஒரு பெரிய குழுவை நீண்ட காலமாக ஆய்வுக்கு உட்படுத்தி இருந்தோம். எங்களது முயற்சிக்கு தக்க பலன் கிடைத்துள்ளது’’ என்கிறார்.
Tuesday, 21 January 2020
மூன்று முறை பல் துலக்குங்கள்..
Saturday, 18 January 2020
எள்ளின் மகத்துவம்
- எள்ளின் மகத்துவம் | பாஸ்கரன், சித்த மருத்துவர், வேலூர்
- “இளைத்தவனுக்கு எள்ளும், கொழுத்தவனுக்கு கொள்ளும் என்பது மருத்துவ பழமொழி.” தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளில் எள்ளின் மூலம் பெறப்படும் நல்லெண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது.
- எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டுள்ளது.
- எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது. கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது.
- வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. எள்ளில் 20 சதவீதம் புரதமும், 50 சதவீதம் எண்ணெயும், 16 சதவீதம் மாவு பொருட்களும் உள்ளன.
- ஆராய்ச்சி ஒன்றில் எள்ளு விதை மற்றும் நல்லெண்ணெய் சர்க்கரை நோயை தடுப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
- தினசரி ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் குடல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்து குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது.
- எள்ளின் விதையை வெல்லப்பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம் அல்லது எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலநோயினை குணமாக்கும்.
- எள்ளு விதைகளில் அதிகமாக இருக்கும் மக்னீசியம் ரத்த அழுத்த நோயை குறைக்க உதவும் சத்துகள் நிறையவே இருக்கின்றன.
- தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு, புண்களை போக்க எள்ளு விதையை அரைத்து பூசி வர படிப்படியாக குணமாகும்.
- எள்ளின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வரும் சாரை எடுத்து முகம் கழுவினால் முகம் பொலிவோடும், கண்கள் ஒளி பெறவும், கண் நரம்புகள் பலப்படுத்தி நலமாக்கும். மாமிச உணவு சாப்பிடாதவர்கள் எள்ளுருண்டை சாப்பிடுவது நல்ல பலத்தை தரும்.
- எள்ளுருண்டையில் துத்தநாக சத்தும், இரும்பு சத்தும் இருக்கிறது. வயதானவர்கள் எள்ளுருண்டையை சிறந்த உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
- இதனால் எலும்புகள் பலமடையும், ஆரோக்கியத்தை தரும். இதனால் உடல் சோர்வு குறைந்து சக்தியை தரும் எள்ளை சேர்த்து சூடான சாதத்தோடு உண்டுவர உடல் பலம் அதிகரிக்கும்.
- எள்ளின் நல்லெண்ணெயை இரு கண்களிலும் விட்டு, தலையில் தடவி சுடுநீரில் மூன்று நாட்கள் தலை முழுகிவர சிவந்த கண், கண் வலி, கண்ணில் நீர் வடிதல், கண் கூச்சம், மென்மை குத்தல் ஆகியவை தீரும்.எள் எங்கும் பயிராகக்கூடிய செடியாகும்.
- 2 முதல் 3 அடி உயரம் வளரக்கூடியது. இது ஜாவா போன்ற கடல் சார்ந்த தீவுகளில் உள்ள காடுகளில் இயற்கையாக விளையும் தாவரமாகும். எள்ளில் ஒன்பது வகைகள் உண்டு.
- கார எள், சிகப்பு எள், வெள்ளை எள், காட்டு எள், மயில் எள், பேய் எள், காட்டு மயில் எள், மலை எள், சிற்று எள் என்பதாகும். எள்ளில் இருந்து நெய், எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெய் எல்லா எண்ணெய்களைவிட மிக சிறப்பான மருத்துவ குணம் கொண்டது.
- எள்ளை செக்கிலிட்டு ஆட்டி எண்ணெய் எடுத்த பின் எஞ்சிய சக்கையினை பிண்ணாக்கு என்பார்கள். இதில் ஏராளமான சத்துகள் நிறைந்திருப்பது பலருக்கும் தெரியாது.
- கீரைகளுடன் எள் பிண்ணாக்கு சிறிதளவு சேர்த்து உண்பது நல்ல சுவையைத் தரும்.
- இது மனிதர்களுக்கு ஆரோக்கிய பலம் கூட்டும். மாடு, ஆடு போன்ற விலங்குகளுக்கு அதிகப்படியான உணவாக எள் பிண்ணாக்கு பயன்படுத்தப்படுகிறது.
- தமிழ் வைத்தியத்தில் நல்லெண்ணெய் பெரும்பங்கு வகித்து வருகிறது.நல்லெண்ணெய் கபால சூடு, காது வலி, சிரங்கு, புண் போன்றவற்றை தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
- தென்னிந்தியாவில் நல்லெண்ணெய் மூலம் பலகாரங்கள் செய்வது இன்றும் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
- அதே போல எள்ளு அவியல் செய்து உண்பதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
- எள்ளின் இலைகள் குடல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
- எள் இலையை அரைத்து அதனை உண்பதால் குடல் நோய்களுக்கு தீர்வு காணலாம்.
- இதன் இலைகளை கசாயம் வைத்து குடிக்கின்றனர்.
- எள் இலைகளுடன் வெண்ணெய் வைத்து அரைத்து உண்பதால் ரத்த மூலநோய் குணமாகும்.
- சுடுநீரில் சிறிதளவு எள்ளிலை போட்டு குளியல் செய்ய உடல் வலிகளை போக்கும் சக்தி எள் குளியலில் ஆரோக்கியம் காணமுடியும்.
- பொதுவாக எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சிய சத்தும், மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, ஈ, இரும்பு சத்தும் உள்ளது என ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.
- பனை வெல்லம், கருஞ்சீரகம், எள்ளுடன் சேர்த்து சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிடாய் கால பிரச்சினைகளைத் தீர்க்கும்.
Subscribe to:
Posts (Atom)