Showing posts with label ரத்தசோகை. Show all posts
Showing posts with label ரத்தசோகை. Show all posts

Thursday, 7 November 2019

ரத்தசோகையை போக்கும் கேழ்வரகு

  • நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறை அஞ்ச றைப்பெட்டியில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உணவினை மருந்தாக பயன்படுத்துவது குறித்து பார்த்து வரு கிறோம். அந்தவகையில் பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை பிரச்னையை சரி செய்யும் கேழ்வரகு குறித்து பார்க்கலாம். 
  • கோதுமைக்கு இணையான சத்துக் கள் கொண்ட கோதுமையில் இரும்பு, கால்சியம், வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. வளரும் குழந்தைகள், பூப்பெய்த பெண்கள் மற்றும் வயதான பெண்கள் கேழ்வரகினை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது. 
  • பசியை அடக்கி, சோர்வை நீக்கி உடலுக்கு வலு சேர்ப்பதால் பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகளுக்கும் கேழ்வரகை கூழாக்கி வழங்கி வருகின்றனர். கேழ்வரகை ஊறவைத்து, அரைத்து, வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் தாய்பாலுக்கு இணையான சத்துக் களை கொடுக்கிறது. 
  • வயலுக்கு சென்று வந்த நம் முன்னோர்களும் கேழ்வரகு கூழ் குடித்து காலை முதல் மாலை வரை உற்சாகமாக பணி செய்து வந்ததும் உண்டு 
  • இந்த தானியத்தை பயன்படுத்தி பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்ப டுதல் நோய்க்கான தேநீர் செய்வது குறித்து பார்க்கலாம். 
  • தேவையான பொருட்கள்: கேழ்வரகு கதிர், பனங்கற் கண்டு . செய்முறை: கேழ்வரகு கதிரில் உள்ள இலை, தண்டு, வேர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். பாத்தி ரத்தில் நீர் விட்டு, கேழ்வரகு கதிர், பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இந்த தேநீரை தினமும் எடுத்து வந்தால் பெண்க ளின் மாதவிடாய் காலங்களுக்கு இடையே ஏற்படும் ரத்த கசிவு நீங்கும். 
  • வெள்ளைப்படுதல் நோயினால் உடல் உருக்கப்படுவது தவிர்க்கப்படும். குழந்தைகளுக்கு பலம் தரும் கேழ்வ ரகு பால் கஞ்சி தயாரிக்கலாம். தேவை யான பொருட்கள்: கேழ்வரகு (முளைக் கட்டியது), நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி, காய்ச்சிய பால். செய்முறை: முளைகட்டிய கேழ்வ ரகை அரைத்து பால் எடுக்கவும். 
  • அதனை வானலியில் ஊற்றி, நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விடவும். நன்கு வெந்து கூழ் போல் வந்ததும், அதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். அரிசியை விட அதிக சத்துக்களை கொண்டுள்ள 
  • கேழ்வரகை குழந்தைகளுக்கு கொடுப்பதால் நீண்ட நேரம் பசி அடங்கும். கெட்ட கொழுப்பு களை வெளித்தள்ளி, நல்ல கொழுப்பு களை உடலில் சேர்க்கிறது. உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு உருண்டை தயாரிக்கலாம். 
  • தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு, நாட்டு சர்க்கரை, வெள்ளரி விதை, நெய், உப்பு, வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய். செய்முறை: கேழ்வரகு மாவுடன் உப்பு சேர்த்து அடை போல் தட்டி வெயிலில் காயவைத்து தயார் செய்து கொள்ளவும். இந்த அடையை நீர் விடா மல் பொடித்து கொள்ளவும். 
  • அதனுடன் வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய் சேர்த்து பொடிக்கவும். இந்த கலவையுடன் சர்க்கரை, நெய் சேர்த்து உருண்டையாக செய்து கொள்ளவும். இந்த உருண்டையை பூப்பெய்திய பெண்களுக்கு செய்து கொடுத்து வருவதால் உடல் பலம் பெறும். இரும்பு சத்து நிறைந்த கேழ்வரகு ரத்த சோகை மட்டுமல்லாது பற்கள், தலைமுடி ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது. 
சித்த மருத்துவர் சக்தி சுப்ரமணியன்