- எள்ளின் மகத்துவம் | பாஸ்கரன், சித்த மருத்துவர், வேலூர்
- “இளைத்தவனுக்கு எள்ளும், கொழுத்தவனுக்கு கொள்ளும் என்பது மருத்துவ பழமொழி.” தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளில் எள்ளின் மூலம் பெறப்படும் நல்லெண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது.
- எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டுள்ளது.
- எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது. கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது.
- வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. எள்ளில் 20 சதவீதம் புரதமும், 50 சதவீதம் எண்ணெயும், 16 சதவீதம் மாவு பொருட்களும் உள்ளன.
- ஆராய்ச்சி ஒன்றில் எள்ளு விதை மற்றும் நல்லெண்ணெய் சர்க்கரை நோயை தடுப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
- தினசரி ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் குடல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்து குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது.
- எள்ளின் விதையை வெல்லப்பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம் அல்லது எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலநோயினை குணமாக்கும்.
- எள்ளு விதைகளில் அதிகமாக இருக்கும் மக்னீசியம் ரத்த அழுத்த நோயை குறைக்க உதவும் சத்துகள் நிறையவே இருக்கின்றன.
- தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு, புண்களை போக்க எள்ளு விதையை அரைத்து பூசி வர படிப்படியாக குணமாகும்.
- எள்ளின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வரும் சாரை எடுத்து முகம் கழுவினால் முகம் பொலிவோடும், கண்கள் ஒளி பெறவும், கண் நரம்புகள் பலப்படுத்தி நலமாக்கும். மாமிச உணவு சாப்பிடாதவர்கள் எள்ளுருண்டை சாப்பிடுவது நல்ல பலத்தை தரும்.
- எள்ளுருண்டையில் துத்தநாக சத்தும், இரும்பு சத்தும் இருக்கிறது. வயதானவர்கள் எள்ளுருண்டையை சிறந்த உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
- இதனால் எலும்புகள் பலமடையும், ஆரோக்கியத்தை தரும். இதனால் உடல் சோர்வு குறைந்து சக்தியை தரும் எள்ளை சேர்த்து சூடான சாதத்தோடு உண்டுவர உடல் பலம் அதிகரிக்கும்.
- எள்ளின் நல்லெண்ணெயை இரு கண்களிலும் விட்டு, தலையில் தடவி சுடுநீரில் மூன்று நாட்கள் தலை முழுகிவர சிவந்த கண், கண் வலி, கண்ணில் நீர் வடிதல், கண் கூச்சம், மென்மை குத்தல் ஆகியவை தீரும்.எள் எங்கும் பயிராகக்கூடிய செடியாகும்.
- 2 முதல் 3 அடி உயரம் வளரக்கூடியது. இது ஜாவா போன்ற கடல் சார்ந்த தீவுகளில் உள்ள காடுகளில் இயற்கையாக விளையும் தாவரமாகும். எள்ளில் ஒன்பது வகைகள் உண்டு.
- கார எள், சிகப்பு எள், வெள்ளை எள், காட்டு எள், மயில் எள், பேய் எள், காட்டு மயில் எள், மலை எள், சிற்று எள் என்பதாகும். எள்ளில் இருந்து நெய், எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெய் எல்லா எண்ணெய்களைவிட மிக சிறப்பான மருத்துவ குணம் கொண்டது.
- எள்ளை செக்கிலிட்டு ஆட்டி எண்ணெய் எடுத்த பின் எஞ்சிய சக்கையினை பிண்ணாக்கு என்பார்கள். இதில் ஏராளமான சத்துகள் நிறைந்திருப்பது பலருக்கும் தெரியாது.
- கீரைகளுடன் எள் பிண்ணாக்கு சிறிதளவு சேர்த்து உண்பது நல்ல சுவையைத் தரும்.
- இது மனிதர்களுக்கு ஆரோக்கிய பலம் கூட்டும். மாடு, ஆடு போன்ற விலங்குகளுக்கு அதிகப்படியான உணவாக எள் பிண்ணாக்கு பயன்படுத்தப்படுகிறது.
- தமிழ் வைத்தியத்தில் நல்லெண்ணெய் பெரும்பங்கு வகித்து வருகிறது.நல்லெண்ணெய் கபால சூடு, காது வலி, சிரங்கு, புண் போன்றவற்றை தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
- தென்னிந்தியாவில் நல்லெண்ணெய் மூலம் பலகாரங்கள் செய்வது இன்றும் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
- அதே போல எள்ளு அவியல் செய்து உண்பதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
- எள்ளின் இலைகள் குடல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
- எள் இலையை அரைத்து அதனை உண்பதால் குடல் நோய்களுக்கு தீர்வு காணலாம்.
- இதன் இலைகளை கசாயம் வைத்து குடிக்கின்றனர்.
- எள் இலைகளுடன் வெண்ணெய் வைத்து அரைத்து உண்பதால் ரத்த மூலநோய் குணமாகும்.
- சுடுநீரில் சிறிதளவு எள்ளிலை போட்டு குளியல் செய்ய உடல் வலிகளை போக்கும் சக்தி எள் குளியலில் ஆரோக்கியம் காணமுடியும்.
- பொதுவாக எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சிய சத்தும், மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, ஈ, இரும்பு சத்தும் உள்ளது என ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.
- பனை வெல்லம், கருஞ்சீரகம், எள்ளுடன் சேர்த்து சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிடாய் கால பிரச்சினைகளைத் தீர்க்கும்.
Saturday, 18 January 2020
எள்ளின் மகத்துவம்
Thursday, 7 November 2019
ரத்தசோகையை போக்கும் கேழ்வரகு
- நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறை அஞ்ச றைப்பெட்டியில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உணவினை மருந்தாக பயன்படுத்துவது குறித்து பார்த்து வரு கிறோம். அந்தவகையில் பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை பிரச்னையை சரி செய்யும் கேழ்வரகு குறித்து பார்க்கலாம்.
- கோதுமைக்கு இணையான சத்துக் கள் கொண்ட கோதுமையில் இரும்பு, கால்சியம், வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. வளரும் குழந்தைகள், பூப்பெய்த பெண்கள் மற்றும் வயதான பெண்கள் கேழ்வரகினை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது.
- பசியை அடக்கி, சோர்வை நீக்கி உடலுக்கு வலு சேர்ப்பதால் பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகளுக்கும் கேழ்வரகை கூழாக்கி வழங்கி வருகின்றனர். கேழ்வரகை ஊறவைத்து, அரைத்து, வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் தாய்பாலுக்கு இணையான சத்துக் களை கொடுக்கிறது.
- வயலுக்கு சென்று வந்த நம் முன்னோர்களும் கேழ்வரகு கூழ் குடித்து காலை முதல் மாலை வரை உற்சாகமாக பணி செய்து வந்ததும் உண்டு
- இந்த தானியத்தை பயன்படுத்தி பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்ப டுதல் நோய்க்கான தேநீர் செய்வது குறித்து பார்க்கலாம்.
- தேவையான பொருட்கள்: கேழ்வரகு கதிர், பனங்கற் கண்டு . செய்முறை: கேழ்வரகு கதிரில் உள்ள இலை, தண்டு, வேர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். பாத்தி ரத்தில் நீர் விட்டு, கேழ்வரகு கதிர், பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இந்த தேநீரை தினமும் எடுத்து வந்தால் பெண்க ளின் மாதவிடாய் காலங்களுக்கு இடையே ஏற்படும் ரத்த கசிவு நீங்கும்.
- வெள்ளைப்படுதல் நோயினால் உடல் உருக்கப்படுவது தவிர்க்கப்படும். குழந்தைகளுக்கு பலம் தரும் கேழ்வ ரகு பால் கஞ்சி தயாரிக்கலாம். தேவை யான பொருட்கள்: கேழ்வரகு (முளைக் கட்டியது), நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி, காய்ச்சிய பால். செய்முறை: முளைகட்டிய கேழ்வ ரகை அரைத்து பால் எடுக்கவும்.
- அதனை வானலியில் ஊற்றி, நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விடவும். நன்கு வெந்து கூழ் போல் வந்ததும், அதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். அரிசியை விட அதிக சத்துக்களை கொண்டுள்ள
- கேழ்வரகை குழந்தைகளுக்கு கொடுப்பதால் நீண்ட நேரம் பசி அடங்கும். கெட்ட கொழுப்பு களை வெளித்தள்ளி, நல்ல கொழுப்பு களை உடலில் சேர்க்கிறது. உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு உருண்டை தயாரிக்கலாம்.
- தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு, நாட்டு சர்க்கரை, வெள்ளரி விதை, நெய், உப்பு, வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய். செய்முறை: கேழ்வரகு மாவுடன் உப்பு சேர்த்து அடை போல் தட்டி வெயிலில் காயவைத்து தயார் செய்து கொள்ளவும். இந்த அடையை நீர் விடா மல் பொடித்து கொள்ளவும்.
- அதனுடன் வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய் சேர்த்து பொடிக்கவும். இந்த கலவையுடன் சர்க்கரை, நெய் சேர்த்து உருண்டையாக செய்து கொள்ளவும். இந்த உருண்டையை பூப்பெய்திய பெண்களுக்கு செய்து கொடுத்து வருவதால் உடல் பலம் பெறும். இரும்பு சத்து நிறைந்த கேழ்வரகு ரத்த சோகை மட்டுமல்லாது பற்கள், தலைமுடி ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது.
Sunday, 27 October 2019
பாதவெடிப்பு

- முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள எல்லோரும் பெரிய அளவில் மெனக்கெடுகிறோம்.
- அதேநேரம், நம் உடலை முழுமையாகத் தாங்கும் பாதத்தை கண்டுகொள்வதே இல்லை.
- தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள்.
- நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும்.
- அதனால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். நம் காலில் உள்ள தோல் மிகவும் தடிமனாக இருக்கும். அதற்குக் கீழே ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும்.
- உடல் எடை அதிகமாக இருந்தால், அந்த அடுக்கு இடம்மாறி தோலில் வெடிப்பு உண்டாகும்.
- வெது வெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தை கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
- அதோடு காலையிலும் இரவிலும் பாதத்தை தண்ணீரில் நன்றாகக் கழுவி சுத்தம்செய்து தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் வெடிப்பு ஏற்படாது.
- பெட்ரோலியம் ஜெல்லி, ஆலிவ் எண்ணெய், கற்றாழை கிரீம் போன்றவற்றைவும் தடவலாம். பாதவெடிப்புகள் லேசாக இருந்தால் இந்த வைத்தியம் போதுமானது.அதேநேரம், ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டு, புண்கள் அதிகமாகி, கடுமையான வலியுடன் வெடிப்புகள் இருக்கும். அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- பாத வெடிப்புகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், கால் முழுவதும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
- வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள், திறந்தநிலையில் இல்லாமல் மூடிய செருப்புகளையே அணிய வேண்டும்.உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- மற்றவர்களைக் காட்டிலும், சர்க்கரை நோயாளிகள் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.
- பாதவெடிப்பால் உண்டாகும் வலியை உணர முடியாததால் பாதிப்புகள் அதிகமாக வாய்ப்பிருக்கிறது.
- பாத வெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல, அனைவருமே பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.
- பாதவெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்லாது அனைவரும் மிக மெல்லிய தோல்களையுடைய செருப்புகளையே அணிய வேண்டும்.
- மிகவும் இறுக்கமான ‘ஷூ’ அணிவதைத் தவிர்த்து விடுவது நல்லது.
Thursday, 24 October 2019
மாரடைப்பைவிட இதய செயலிழப்பு அதிகமான பேரை கொல்கிறது
- உலகளாவிய ஆய்வில் தகவல் இதய செயலிழப்பு ( அநேக நேரங்களில் மாரடைப்பு என்று குழப்பிக்கொள்ளப்படுகிறது.
- இதய செயலிழப்பு என் பதற்கு, இதயம் ஏற்கனவே செயலிழந்துவிட்டது என்பது பொருளல்ல.
- இதயம் அதன் செயல்பாட்டை நிறுத்தப்போகி றது என்றே பொருள்கொள்ள வேண்டும்.
- இதய செயலிழப்பு மற்றும் மாரடைப்பு ஆகியவை முற்றிலும் மாறுபட்ட கார ணங்கள் மற்றும் சிகிச்சைகளைக்கொண்டிருக்கின்ற இருவே றுபட்ட இதயநாள நோய்களாகும்.
- தற்போது, இந்தியா இதய நாள நோய்களின் பெரும் சுமையால் சிக்கி தவித்து வருகிறது, இதயநாள நோய்கள் அனைத்திலும், இதய செயலிழப்பு என்பதே அதிக உயிரிழப்பு விகிதம் மற்றும் திரும்பத் திரும்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற வேண்டிய அவசியத்திற்கான முதன்மை காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது
- இந்தியாவில், இது 8-10 மில்லியன் நபர்களை பாதிக்கிறது என்று அறியப்பட்டுள்ளது.
- 55சதவீதம் இதய செய லிழப்பு நோயாளிகள், நோய் கண்டறியப்பட்டதற்குப் பிறகு குறைந்தபட்சம் ஒரு முறையாவது மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவர்களாக இருக்கின்றனர்.
- திருவனந்தபுரம் இதய செயலிழப்பு பதிவக அறிக்கையின்படி 31 சதவீதம் நோயாளிகள் அவர்களுக்கு நோய் கண்டறியப்பட் டதிலிருந்து ஓராண்டுக்குள் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர்
- மற்றொரு பக்கத்தில், ஓராண்டுக்கு ஏறக்குறைய 2 மில்லியன் மாரடைப்பு நேர்வுகளை இந்தியா சந்தித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில், மற்றும் இதன் காரணமாக, இதயம் வீக்கம் டைந்து பெரிதாகிறது.
- இதய செயலிழப்பு அறிகுறிகளுள் மூச் சுத்திணறல் அல்லது அதிவேக இதயத்துடிப்பு, கணுக்கால்கள், கால்கள் மற்றும் அடிவயிற்றில் வீக்கம், உயரமாக வைக்கப்ப டுகின்ற தலையணைகள் இல்லாமல் தூங்குவதில் சிரமம், தொடர்ந்து நிலையாக களைப்பாக உணர்வது ஆகியவை உள்ளடங்கும்.
இதய நோய்க்கான காரணங்கள்
மூச்சுத்திணறல், சோர்வு மற்றும் பலவீனம், வேகமான இதயத்துடிப்பு அல்லது அசாதாரணமான இதயத்துடிப்பு, திடீர் எடை அதிகரிப்பு, பசி உணர்வு இழப்பு, அடிவயிறு வீக்கம், கவனம் செலுத்துவதில் கடினம், மார்பு வலி, கால் மற்றும் கால் மணிக்கட்டு வீக்கம் இவை எல்லாம் இருந்தால் மாரடைப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான இதய செயல்பாட்டை ஊக்குவிக்கும். இதயத்தில் சிறு சிறு இதர பாதிப்புகள் ஏற்பட்டால், அதனை அலட்சியம் செய்யாமல் உடனடியாக அதற்கு தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். அப்படி செய்யாமல் விடும்போது, இதய செயல் இழப்பை தூண்டலாம்.
ரத்த அழுத்த நிலையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். உடலில் கொழுப்பின் அளவைக் குறைத்து கொள்ளுங்கள். மருந்துகளை சார்ந்து இருப்பதை ஓரளவிற்கு தவிர்க்க பழகுங்கள். ஒருவேளை, மாரடைப்பு தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். உங்கள் தினசரி உணவில், கொழுப்பு அளவை குறைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறே, சர்க்கரை மற்றும் உப்பின் அளவையும் குறைத்துக் கொள்ளுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் இணைத்துக் கொள்ளுங்கள்.
இதய நோய் ஏற்பட ஒரு மிக முக்கிய காரணம், புகை பிடிப்பது. நிகோட்டின் உட்கொள்ளல், ரத்தக் குழாய்களை சுருக்கி, இதயம் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. கார்பன் மோனோ ஆக்சைடு, ரத்தத்தில் பிராணவாயு அளவைக் குறைக்கிறது, இதனால், ரத்தக் குழாய்களில் சேதம் ஏற்படுகிறது.
இன்றைய நாட்களில் பலரும் கணினி முன் அமர்ந்து வேலை செய்ய தொடங்கி விட்டனர். அதனால் ஒரு நாள் முழுக்கவே உட்கார்ந்தபடியே முடிந்து விடுகிறது. வழக்கமான உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் இருப்பதில்லை. ஆனால் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே இருப்பதால் இதய நோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. ஆகவே முடிந்த அளவுக்கு உட்கார்ந்திருக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ளவும். மதிய உணவிற்கு பின் சற்று நேரம் உங்கள் அறையிலேயே நடக்கலாம்.
உடற்பயிற்சி செய்வதற்கு உங்கள் நேரத்தில் சிறிதை ஒதுக்கி உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால், உடனடியாக எடை குறைப்பை மேற்கொள்ளுங்கள். உடல் பருமன், இதய நோய் ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான இதய செயல்பாட்டை ஊக்குவிக்கும். இதயத்தில் சிறு சிறு இதர பாதிப்புகள் ஏற்பட்டால், அதனை அலட்சியம் செய்யாமல் உடனடியாக அதற்கு தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். அப்படி செய்யாமல் விடும்போது, இதய செயல் இழப்பை தூண்டலாம்.
ரத்த அழுத்த நிலையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். உடலில் கொழுப்பின் அளவைக் குறைத்து கொள்ளுங்கள். மருந்துகளை சார்ந்து இருப்பதை ஓரளவிற்கு தவிர்க்க பழகுங்கள். ஒருவேளை, மாரடைப்பு தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். உங்கள் தினசரி உணவில், கொழுப்பு அளவை குறைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறே, சர்க்கரை மற்றும் உப்பின் அளவையும் குறைத்துக் கொள்ளுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் இணைத்துக் கொள்ளுங்கள்.
இதய நோய் ஏற்பட ஒரு மிக முக்கிய காரணம், புகை பிடிப்பது. நிகோட்டின் உட்கொள்ளல், ரத்தக் குழாய்களை சுருக்கி, இதயம் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. கார்பன் மோனோ ஆக்சைடு, ரத்தத்தில் பிராணவாயு அளவைக் குறைக்கிறது, இதனால், ரத்தக் குழாய்களில் சேதம் ஏற்படுகிறது.
இன்றைய நாட்களில் பலரும் கணினி முன் அமர்ந்து வேலை செய்ய தொடங்கி விட்டனர். அதனால் ஒரு நாள் முழுக்கவே உட்கார்ந்தபடியே முடிந்து விடுகிறது. வழக்கமான உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் இருப்பதில்லை. ஆனால் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே இருப்பதால் இதய நோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. ஆகவே முடிந்த அளவுக்கு உட்கார்ந்திருக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ளவும். மதிய உணவிற்கு பின் சற்று நேரம் உங்கள் அறையிலேயே நடக்கலாம்.
உடற்பயிற்சி செய்வதற்கு உங்கள் நேரத்தில் சிறிதை ஒதுக்கி உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால், உடனடியாக எடை குறைப்பை மேற்கொள்ளுங்கள். உடல் பருமன், இதய நோய் ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.
Subscribe to:
Posts (Atom)