Monday, 16 March 2020

கோவிட்-19 வைரஸ் அச்சத்தில் இருந்து விடுபட சில வழிகாட்டுதல்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் முதன் முதலில் மக்களை பாதிக்கத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் 114 நாடுகளில் பரவி மக்களைப் பாதித்துள்ளது. கோவிட் -19 வைரஸ் பரவுவதை தடுக்க பதற்றம் அடையாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உலக சுகாதார மையம் உள்ளிட்ட சர்வதேச நிறு வனங்கள் அறிவுறுத்தி இருக்கின்றன.

கோவிட்-19 வைரஸ் அச்சத்தில் இருந்து விடுபட சில வழிகாட்டுதல்கள்:

 கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்று நோய் என்பதால் அது ஒரு நபரிடம் இருந்து மற்றவர்களுக்கு நேரடியாகவும் மறைமுக மாகவும் பரவக்கூடும்.

 மூக்கு, தொண்டை, சுவாசக் குழாய் மற் றும் நுரையீரலை பாதிக்கும் தொற்று இது.

 இந்த காய்ச்சல் 60 வயதுக்கு மேற் பட்டோர் மற்றும் உடல் ஆரோக்கியம் குன்றியவர்களையே தீவிரமாகப் பாதிக் கிறது. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக் கும் மிதமான தாக்கத்தையே ஏற்படுத்தக் கூடியது.

 கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டாலும் கவலை வேண்டாம். 80 சதவீதத்தினருக்கு மிதமான பாதிப்பு மட்டுமே இருக்கும். உரிய மருத்துவ சிகிச்சை மூலம் இரண்டு வாரங்களில் நீங்கள் குணமடைந்து விடலாம்.

 கோவிட் -19 காய்ச்சல் உள்ளவர் தும்மி னாலோ, இருமினாலோ பரவும் நீர்த்துளி மற்றொருவரின் கண், நாசி, வாய் பகுதியில் பட்டால் காய்ச்சல் தொற்றும்.

 காய்ச்சல் உள்ளவர்கள் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் தொடும்போது பரவும்.

 உணவு வழியாக இந்த வைரஸ் பரவாது.

 கோழி, முட்டை ஆகியவற்றை சாப்பிடுவ தால் பரவாது.

 சாதாரண வைரஸ் காய்ச்சலையும் கோவிட் - 19 காய்ச்சலையும் இடை யில் வேறுபடுத்துவது எப்படி என்ற குழப்பம் நிலவுகிறது. காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் ஆகியவை இருந்தாலோ, சீனா, ஈரான், இத்தாலி, கொரியா உள் ளிட்ட கோவிட் - 19 வைரஸ் பரவி இருக் கும் நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் சென் றிருந்தாலோ, கோவிட்-19 காய்ச்சல் உள்ள வர்களுடன் இருந்தாலோ, கோவிட்-19 வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் மருத்துவ மனைக்கோ அல்லது மையத்துக்கோ சென்றிருந்தாலோ உங்களுக்கு வந்திருப் பது கோவிட்-19 பாதிப்பாக இருக்கலாம்.

 மிதமாக தாக்கும்பட்சத்தில் 2 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை கோவிட்-19 வைரஸ் தாக்கம் நீடிக்கும். ஒருவேளை காய்ச்சல், சளி, தொண்டைக்கட்டு இருக்குமானால் பதற்றமடைய வேண்டாம். நாளொன்றுக்கு 2-3 முறை ஆவிபிடியுங்கள், சுத்தமான நீரை அடிக்கடி பருகுங்கள், அவ்வப்போது கைகளைச் சுத்தமாகக் கழுவுங்கள், காய்ச்சல் தீவிரமடைவதாகத் தெரிந்தால் மருத்துவரை அணுகுங்கள். மருத்துவரின் வழிகாட்டுதலின்படி முறையாக மருந்தை உட்கொள்ளுங்கள்.

 ஒருவருக்கு கடும் காய்ச்சல் இருப்பதா லேயே அவருக்கு கோவிட்-19 வைரஸ் தாக்கிவிட்டதாக முடிவுசெய்துவிடுவது தவறு. காய்ச்சல் வந்தவர்க்கெல்லாம் கோவிட்-19 வைரஸ் சோதனை அவசியமில்லை. அதை மருத்துவர்தான் தீர்மானிக்க வேண்டும்.

 வைரஸ் பாதித்தாலும் அதிலிருந்து முழுவதுமாக குணமடைய முடியும். சிறப்பு சிகிச்சை ஏதுமின்றி இதிலிருந்து 80 சதவீதத்தினர் குணமடைந்துவிட்டார்கள் என்பது நிரூபணமாகி உள்ளது.

 கோவிட்-19 வைரஸ் வராமல் தடுக் கும் நோய் தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக் கப்படவில்லை. இருப்பினும் நோய் தொற்று ஏற்பட்டவர்களில் 80 சதவீதத்தினர் பூரணமாகக் குணமடைந்து இருக்கிறார்கள்.

 பூண்டு சாப்பிடுவதால் கோவிட்-19 வைரஸை தடுக்க முடியும் என்பது பொய்.

 வெயில் காலத்தில் கோவிட்-19 வைரஸ் பரவாது என்பதற்கு அறிவியல் நிரூபணம் ஏதுமில்லை. இருப்பினும் வெப்பம் அதிகரித்தால் கோவிட்-19 வைரஸ் பரவும் வேகம் குறையலாம் என்று கூறப்படுகிறது.

 கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவரின் சளி, எச்சில் ஆகியன காகிதம், மரம், அட்டை, கண்ணாடி, பிளாஸ்டிக் பொருட்கள், இரும்பு ஆகிய பொருட்களின் மீது படிந்தால் 8-10 மணி நேரம் வரை கோவிட்-19 வைரஸ் வீரியம் குறையாமல் உயிருடன் இருக்கும். அப்பொருட்களைத் தொடுபவர்களுக்கு காய்ச்சல் தொற்றிக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

 மூன்று அடுக்கு கொண்ட முகக் கவசத்தை கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் உடையவர்கள் அணிவது நல்லது.

உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?
 சோப்பு போட்டு நீரில் கைகளை நன்றாகக் கழுவுதல்.

 சோப்பு, தண்ணீர் கிடைக்காதபோது சானிடைஸர் பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்தி கொள்ளுதல்.

 அழுக்கான கைகளால் கண், வாய், மூக்கு ஆகிய உறுப்புகளை தொடுவதை தவிர்த்தல் .

 இருமல், தும்மல் இருப்பவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் தொலைவில் தள்ளி இருப்பது நல்லது.

 கை குலுக்குவதற்கு பதில் கைகூப்பி வணக்கம் சொல்லுதல்.

உங்களுக்குப் பிரியமானவர்களை பாதுகாப்பது எப்படி?
 இருமல், தும்மல் வரும் போது கட்டாயம் கைக்குட்டையை பயன்படுத்துதல்.

 கூட்ட நெரிசலான இடங்களுக்கு செல்வதையும் வெளியூர் பயணங்களையும் தவிர்த்தல்.

 நோய் தொற்று இருக்குமானால் கட்டாயம் முகக் கவசம் அணிதல்.

கல்விச்சோலை - kalvisolai health tips

Thursday, 6 February 2020

10 இந்தியரில் ஒருவருக்கு புற்றுநோய் அபாயம் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

இந்தியாவில் 2018-ம் ஆண்டில் புதிதாக 11.6 லட்சம் பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், 10 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சர்வதேச புற்றுநோய் தடுப்பு தினம் (பிப்.4) உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதை யொட்டி, ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் புற்றுநோய் தொடர்பாக வருடாந்திர ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறி யிருப்பதாவது :

இந்தியாவை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் 22.6 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதில் 2018-ல் மட்டும் 11.6 லட்சம் பேருக்கு புற்று நோய் ஏற்பட்டுள்ளது. நோயின் தீவிரம் அதிகமானதால் 7.84 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா வில் 10-ல் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படுகிறது. அதேபோல், 15 நபர் களில் ஒருவர் நோய் தாக்கம் அதிகமாகி, இறப்பை தழுவுகிறார்.

இந்தியாவில் பெரும்பாலும் 6 வகையான புற்றுநோயால்தான் மக்கள் அதிகமாக பாதிப்படை கிறார்கள். அதில், மார்பக புற்று நோய் 1,62,500 பேருக்கும், வாய் புற்றுநோய் 1,20,000 பேருக்கும், கர்ப்பப்பை புற்றுநோய் 97,000 பேருக்கும், நுரையீரல் புற்றுநோய் 68,000 பேருக்கும், வயிறு புற்று நோய் 57,000 பேருக்கும், குடல் புற்று நோய் 57,000 பேருக்கும் உள்ளது.

இதில் புதிய நோயாளிகள் எண் ணிக்கை 49 சதவீதமாக உள்ளது. அதாவது புதிதாக 5 லட்சத்து 70 ஆயிரம் ஆண்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அதில் 45 சதவீதம் வாய், நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய் புற்றுநோயாக உள்ளன.

இந்தியாவில் புதிதாக 5 லட்சத்து 87 ஆயிரம் பெண்களுக்கு புற்று நோய் ஏற்பட்டுள்ளது. அதில் 60 சதவீதம் மார்பகம், கர்ப்பப்பை, வாய், குடல் புற்றுநோயாக உள்ளன.இந்தியர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களுக்கு புகையிலை முக்கிய காரணியாக உள்ளது.

மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் உடல் பருமனுடன் தொடர்புடையது. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்ற உடல் செயல்பாடு குறைவதாலும், ஒரே இடத்தில் இருந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறை அதிகமானதும் தான் இதற்கு முக்கிய காரணமாகும்.

நாடு முழுவதும் மார்பக புற்று நோயின் பாதிப்பு அதிகரித்து வரு கிறது. கடந்த ஆண்டுகளை விட 2.8 சதவீதம் மார்பக புற்றுநோய் அதிகரித்துள்ளது. கிராமப்புறங் களை விட நகர்ப்புறங்களில் இது அதிகமாக ஏற்படுகிறது. அதேபோல் இந்தியாவில் கர்ப்பப்பை, வாய் புற்றுநோயின் பாதிப்பு குறைந்து வந்தாலும், உலகளாவிய அளவில் 5-ல் ஒரு பங்கை இந்தியா கொண் டுள்ளது.

உலக அளவில் பொருளாதாரத் தில் பின் தங்கிய ஏழை நாடுகள் தொற்று நோய், புற்றுநோய் ஆகிய வற்றை எதிர்த்துப் போராடுவதிலும், தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவ திலும் தங்களின் குறைவான வளங்களையே நம்பியுள்ளது.

உலகளவில் 5 பேரில் ஒருவர் தனது வாழ்நாளில் புற்றுநோயை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை வரும். இதனால், ஏழ்மையான நாடுகளில் புற்றுநோய் காரணமாக ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, 21 January 2020

மூன்று முறை பல் துலக்குங்கள்..


 • தினமும் மூன்று தடவைக்கு மேல் பல் துலக்குவது ஒழுங்கற்ற இதய துடிப்பு, இதய செயலிழப்பு போன்ற அபாயங்களை குறைக்க வழிவகை செய்யும் என்பது ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
 • தென்கொரியாவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 286 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் 40 முதல் 79 வயதுக்கு உட்பட்டவர்கள். 
 • அவர்களின் உயரம், எடை, தாக்கிய நோய்கள், வாழ்க்கை முறை, வாய்வழி சுகாதாரம் உள்ளிட்ட தகவல்களை பரிசோதனை மூலம் சேகரித்திருக்கிறார்கள். 
 • தினமும் அவர்கள் பல் துலக்குவதையும் கவனத்தில் கொண்டிருக்கிறார்கள். பற்களை எந்த அளவுக்கு தூய்மையாக பராமரிக்கிறார்கள், வாய் சுகாதாரம் பற்றி எந்த அளவுக்கு விழிப்புணர்வு கொண்டிருக்கிறார்கள் என்பது போன்ற விஷயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன.
 • 10 ஆண்டுகள் அவர்களை பரிசோதனை செய்து வந்ததில் முறையாக பல் துலக்காதவர்களில் 4,911 பேர் ஒழுங்கற்ற இதய துடிப்பு பிரச்சினைக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது. 
 • அதுபோல் 7,971 பேர் இதய செயலிழப்பு பாதிப்பையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். 
 • அதேவேளையில் பல் துலக்கும் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியவர்களுக்கு பாதிப்பு ஏற்படாததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
 • தினமும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை பல் துலக்குபவர்களுக்கு ஒழுங்கற்ற இதய துடிப்பு ஏற்படுவதற்கான அபாயம் 10 சதவீதம் குறைவாக இருக்கிறது. 
 • அதுபோல் இதயம் செயலிழப்புக்கான அபாயமும் 12 சதவீதம் குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 
 • இதுகுறித்து ஆய்வை மேற்கொண்ட தென்கொரியாவில் உள்ள ஈவா பெண்கள் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானி டே-ஜின் சாங், ‘‘நாங்கள் ஒரு பெரிய குழுவை நீண்ட காலமாக ஆய்வுக்கு உட்படுத்தி இருந்தோம். எங்களது முயற்சிக்கு தக்க பலன் கிடைத்துள்ளது’’ என்கிறார்.

Saturday, 18 January 2020

எள்ளின் மகத்துவம்

 • எள்ளின் மகத்துவம் | பாஸ்கரன், சித்த மருத்துவர், வேலூர் 
 • “இளைத்தவனுக்கு எள்ளும், கொழுத்தவனுக்கு கொள்ளும் என்பது மருத்துவ பழமொழி.” தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளில் எள்ளின் மூலம் பெறப்படும் நல்லெண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. 
 • எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. 
 • எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது. கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது. 
 • வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. எள்ளில் 20 சதவீதம் புரதமும், 50 சதவீதம் எண்ணெயும், 16 சதவீதம் மாவு பொருட்களும் உள்ளன. 
 • ஆராய்ச்சி ஒன்றில் எள்ளு விதை மற்றும் நல்லெண்ணெய் சர்க்கரை நோயை தடுப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 
 • தினசரி ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் குடல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்து குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது. 
 • எள்ளின் விதையை வெல்லப்பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம் அல்லது எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலநோயினை குணமாக்கும்.
 • எள்ளு விதைகளில் அதிகமாக இருக்கும் மக்னீசியம் ரத்த அழுத்த நோயை குறைக்க உதவும் சத்துகள் நிறையவே இருக்கின்றன. 
 • தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு, புண்களை போக்க எள்ளு விதையை அரைத்து பூசி வர படிப்படியாக குணமாகும். 
 • எள்ளின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வரும் சாரை எடுத்து முகம் கழுவினால் முகம் பொலிவோடும், கண்கள் ஒளி பெறவும், கண் நரம்புகள் பலப்படுத்தி நலமாக்கும். மாமிச உணவு சாப்பிடாதவர்கள் எள்ளுருண்டை சாப்பிடுவது நல்ல பலத்தை தரும். 
 • எள்ளுருண்டையில் துத்தநாக சத்தும், இரும்பு சத்தும் இருக்கிறது. வயதானவர்கள் எள்ளுருண்டையை சிறந்த உணவாக எடுத்துக்கொள்ளலாம். 
 • இதனால் எலும்புகள் பலமடையும், ஆரோக்கியத்தை தரும். இதனால் உடல் சோர்வு குறைந்து சக்தியை தரும் எள்ளை சேர்த்து சூடான சாதத்தோடு உண்டுவர உடல் பலம் அதிகரிக்கும். 
 • எள்ளின் நல்லெண்ணெயை இரு கண்களிலும் விட்டு, தலையில் தடவி சுடுநீரில் மூன்று நாட்கள் தலை முழுகிவர சிவந்த கண், கண் வலி, கண்ணில் நீர் வடிதல், கண் கூச்சம், மென்மை குத்தல் ஆகியவை தீரும்.எள் எங்கும் பயிராகக்கூடிய செடியாகும். 
 • 2 முதல் 3 அடி உயரம் வளரக்கூடியது. இது ஜாவா போன்ற கடல் சார்ந்த தீவுகளில் உள்ள காடுகளில் இயற்கையாக விளையும் தாவரமாகும். எள்ளில் ஒன்பது வகைகள் உண்டு. 
 • கார எள், சிகப்பு எள், வெள்ளை எள், காட்டு எள், மயில் எள், பேய் எள், காட்டு மயில் எள், மலை எள், சிற்று எள் என்பதாகும். எள்ளில் இருந்து நெய், எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெய் எல்லா எண்ணெய்களைவிட மிக சிறப்பான மருத்துவ குணம் கொண்டது. 
 • எள்ளை செக்கிலிட்டு ஆட்டி எண்ணெய் எடுத்த பின் எஞ்சிய சக்கையினை பிண்ணாக்கு என்பார்கள். இதில் ஏராளமான சத்துகள் நிறைந்திருப்பது பலருக்கும் தெரியாது. 
 • கீரைகளுடன் எள் பிண்ணாக்கு சிறிதளவு சேர்த்து உண்பது நல்ல சுவையைத் தரும். 
 • இது மனிதர்களுக்கு ஆரோக்கிய பலம் கூட்டும். மாடு, ஆடு போன்ற விலங்குகளுக்கு அதிகப்படியான உணவாக எள் பிண்ணாக்கு பயன்படுத்தப்படுகிறது. 
 • தமிழ் வைத்தியத்தில் நல்லெண்ணெய் பெரும்பங்கு வகித்து வருகிறது.நல்லெண்ணெய் கபால சூடு, காது வலி, சிரங்கு, புண் போன்றவற்றை தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. 
 • தென்னிந்தியாவில் நல்லெண்ணெய் மூலம் பலகாரங்கள் செய்வது இன்றும் வழக்கத்தில் கொண்டுள்ளனர். 
 • அதே போல எள்ளு அவியல் செய்து உண்பதும் வழக்கத்தில் இருந்து வருகிறது. 
 • எள்ளின் இலைகள் குடல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. 
 • எள் இலையை அரைத்து அதனை உண்பதால் குடல் நோய்களுக்கு தீர்வு காணலாம். 
 • இதன் இலைகளை கசாயம் வைத்து குடிக்கின்றனர். 
 • எள் இலைகளுடன் வெண்ணெய் வைத்து அரைத்து உண்பதால் ரத்த மூலநோய் குணமாகும். 
 • சுடுநீரில் சிறிதளவு எள்ளிலை போட்டு குளியல் செய்ய உடல் வலிகளை போக்கும் சக்தி எள் குளியலில் ஆரோக்கியம் காணமுடியும். 
 • பொதுவாக எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சிய சத்தும், மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, ஈ, இரும்பு சத்தும் உள்ளது என ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. 
 • பனை வெல்லம், கருஞ்சீரகம், எள்ளுடன் சேர்த்து சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிடாய் கால பிரச்சினைகளைத் தீர்க்கும்.

Thursday, 7 November 2019

ரத்தசோகையை போக்கும் கேழ்வரகு

 • நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறை அஞ்ச றைப்பெட்டியில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உணவினை மருந்தாக பயன்படுத்துவது குறித்து பார்த்து வரு கிறோம். அந்தவகையில் பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை பிரச்னையை சரி செய்யும் கேழ்வரகு குறித்து பார்க்கலாம். 
 • கோதுமைக்கு இணையான சத்துக் கள் கொண்ட கோதுமையில் இரும்பு, கால்சியம், வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. வளரும் குழந்தைகள், பூப்பெய்த பெண்கள் மற்றும் வயதான பெண்கள் கேழ்வரகினை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது. 
 • பசியை அடக்கி, சோர்வை நீக்கி உடலுக்கு வலு சேர்ப்பதால் பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகளுக்கும் கேழ்வரகை கூழாக்கி வழங்கி வருகின்றனர். கேழ்வரகை ஊறவைத்து, அரைத்து, வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் தாய்பாலுக்கு இணையான சத்துக் களை கொடுக்கிறது. 
 • வயலுக்கு சென்று வந்த நம் முன்னோர்களும் கேழ்வரகு கூழ் குடித்து காலை முதல் மாலை வரை உற்சாகமாக பணி செய்து வந்ததும் உண்டு 
 • இந்த தானியத்தை பயன்படுத்தி பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்ப டுதல் நோய்க்கான தேநீர் செய்வது குறித்து பார்க்கலாம். 
 • தேவையான பொருட்கள்: கேழ்வரகு கதிர், பனங்கற் கண்டு . செய்முறை: கேழ்வரகு கதிரில் உள்ள இலை, தண்டு, வேர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். பாத்தி ரத்தில் நீர் விட்டு, கேழ்வரகு கதிர், பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இந்த தேநீரை தினமும் எடுத்து வந்தால் பெண்க ளின் மாதவிடாய் காலங்களுக்கு இடையே ஏற்படும் ரத்த கசிவு நீங்கும். 
 • வெள்ளைப்படுதல் நோயினால் உடல் உருக்கப்படுவது தவிர்க்கப்படும். குழந்தைகளுக்கு பலம் தரும் கேழ்வ ரகு பால் கஞ்சி தயாரிக்கலாம். தேவை யான பொருட்கள்: கேழ்வரகு (முளைக் கட்டியது), நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி, காய்ச்சிய பால். செய்முறை: முளைகட்டிய கேழ்வ ரகை அரைத்து பால் எடுக்கவும். 
 • அதனை வானலியில் ஊற்றி, நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விடவும். நன்கு வெந்து கூழ் போல் வந்ததும், அதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். அரிசியை விட அதிக சத்துக்களை கொண்டுள்ள 
 • கேழ்வரகை குழந்தைகளுக்கு கொடுப்பதால் நீண்ட நேரம் பசி அடங்கும். கெட்ட கொழுப்பு களை வெளித்தள்ளி, நல்ல கொழுப்பு களை உடலில் சேர்க்கிறது. உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு உருண்டை தயாரிக்கலாம். 
 • தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு, நாட்டு சர்க்கரை, வெள்ளரி விதை, நெய், உப்பு, வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய். செய்முறை: கேழ்வரகு மாவுடன் உப்பு சேர்த்து அடை போல் தட்டி வெயிலில் காயவைத்து தயார் செய்து கொள்ளவும். இந்த அடையை நீர் விடா மல் பொடித்து கொள்ளவும். 
 • அதனுடன் வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய் சேர்த்து பொடிக்கவும். இந்த கலவையுடன் சர்க்கரை, நெய் சேர்த்து உருண்டையாக செய்து கொள்ளவும். இந்த உருண்டையை பூப்பெய்திய பெண்களுக்கு செய்து கொடுத்து வருவதால் உடல் பலம் பெறும். இரும்பு சத்து நிறைந்த கேழ்வரகு ரத்த சோகை மட்டுமல்லாது பற்கள், தலைமுடி ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது. 
சித்த மருத்துவர் சக்தி சுப்ரமணியன்