Sunday, 27 October 2019

பாதவெடிப்பு


  • முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள எல்லோரும் பெரிய அளவில் மெனக்கெடுகிறோம். 
  • அதேநேரம், நம் உடலை முழுமையாகத் தாங்கும் பாதத்தை கண்டுகொள்வதே இல்லை. 
  • தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள். 
  • நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும். 
  • அதனால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். நம் காலில் உள்ள தோல் மிகவும் தடிமனாக இருக்கும். அதற்குக் கீழே ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும். 
  • உடல் எடை அதிகமாக இருந்தால், அந்த அடுக்கு இடம்மாறி தோலில் வெடிப்பு உண்டாகும்.
  • வெது வெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தை கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். 
  • அதோடு காலையிலும் இரவிலும் பாதத்தை தண்ணீரில் நன்றாகக் கழுவி சுத்தம்செய்து தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் வெடிப்பு ஏற்படாது. 
  • பெட்ரோலியம் ஜெல்லி, ஆலிவ் எண்ணெய், கற்றாழை கிரீம் போன்றவற்றைவும் தடவலாம். பாதவெடிப்புகள் லேசாக இருந்தால் இந்த வைத்தியம் போதுமானது.அதேநேரம், ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டு, புண்கள் அதிகமாகி, கடுமையான வலியுடன் வெடிப்புகள் இருக்கும். அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 
  • குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 
  • பாத வெடிப்புகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், கால் முழுவதும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. 
  • வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள், திறந்தநிலையில் இல்லாமல் மூடிய செருப்புகளையே அணிய வேண்டும்.உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 
  • நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
  • மற்றவர்களைக் காட்டிலும், சர்க்கரை நோயாளிகள் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். 
  • பாதவெடிப்பால் உண்டாகும் வலியை உணர முடியாததால் பாதிப்புகள் அதிகமாக வாய்ப்பிருக்கிறது.
  • பாத வெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல, அனைவருமே பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது. 
  • பாதவெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்லாது அனைவரும் மிக மெல்லிய தோல்களையுடைய செருப்புகளையே அணிய வேண்டும். 
  • மிகவும் இறுக்கமான ‘ஷூ’ அணிவதைத் தவிர்த்து விடுவது நல்லது.

Thursday, 24 October 2019

மாரடைப்பைவிட இதய செயலிழப்பு அதிகமான பேரை கொல்கிறது

  • உலகளாவிய ஆய்வில் தகவல் இதய செயலிழப்பு ( அநேக நேரங்களில் மாரடைப்பு என்று குழப்பிக்கொள்ளப்படுகிறது. 
  • இதய செயலிழப்பு என் பதற்கு, இதயம் ஏற்கனவே செயலிழந்துவிட்டது என்பது பொருளல்ல. 
  • இதயம் அதன் செயல்பாட்டை நிறுத்தப்போகி றது என்றே பொருள்கொள்ள வேண்டும். 
  • இதய செயலிழப்பு மற்றும் மாரடைப்பு ஆகியவை முற்றிலும் மாறுபட்ட கார ணங்கள் மற்றும் சிகிச்சைகளைக்கொண்டிருக்கின்ற இருவே றுபட்ட இதயநாள நோய்களாகும். 
  • தற்போது, இந்தியா இதய நாள நோய்களின் பெரும் சுமையால் சிக்கி தவித்து வருகிறது, இதயநாள நோய்கள் அனைத்திலும், இதய செயலிழப்பு என்பதே அதிக உயிரிழப்பு விகிதம் மற்றும் திரும்பத் திரும்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற வேண்டிய அவசியத்திற்கான முதன்மை காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது
  • இந்தியாவில், இது 8-10 மில்லியன் நபர்களை பாதிக்கிறது என்று அறியப்பட்டுள்ளது. 
  • 55சதவீதம் இதய செய லிழப்பு நோயாளிகள், நோய் கண்டறியப்பட்டதற்குப் பிறகு குறைந்தபட்சம் ஒரு முறையாவது மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவர்களாக இருக்கின்றனர். 
  • திருவனந்தபுரம் இதய செயலிழப்பு பதிவக அறிக்கையின்படி 31 சதவீதம் நோயாளிகள் அவர்களுக்கு நோய் கண்டறியப்பட் டதிலிருந்து ஓராண்டுக்குள் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர்
  • மற்றொரு பக்கத்தில், ஓராண்டுக்கு ஏறக்குறைய 2 மில்லியன் மாரடைப்பு நேர்வுகளை இந்தியா சந்தித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில், மற்றும் இதன் காரணமாக, இதயம் வீக்கம் டைந்து பெரிதாகிறது. 
  • இதய செயலிழப்பு அறிகுறிகளுள் மூச் சுத்திணறல் அல்லது அதிவேக இதயத்துடிப்பு, கணுக்கால்கள், கால்கள் மற்றும் அடிவயிற்றில் வீக்கம், உயரமாக வைக்கப்ப டுகின்ற தலையணைகள் இல்லாமல் தூங்குவதில் சிரமம், தொடர்ந்து நிலையாக களைப்பாக உணர்வது ஆகியவை உள்ளடங்கும்.

இதய நோய்க்கான காரணங்கள்

மூச்சுத்திணறல், சோர்வு மற்றும் பலவீனம், வேகமான இதயத்துடிப்பு அல்லது அசாதாரணமான இதயத்துடிப்பு, திடீர் எடை அதிகரிப்பு, பசி உணர்வு இழப்பு, அடிவயிறு வீக்கம், கவனம் செலுத்துவதில் கடினம், மார்பு வலி, கால் மற்றும் கால் மணிக்கட்டு வீக்கம் இவை எல்லாம் இருந்தால் மாரடைப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான இதய செயல்பாட்டை ஊக்குவிக்கும். இதயத்தில் சிறு சிறு இதர பாதிப்புகள் ஏற்பட்டால், அதனை அலட்சியம் செய்யாமல் உடனடியாக அதற்கு தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். அப்படி செய்யாமல் விடும்போது, இதய செயல் இழப்பை தூண்டலாம்.

ரத்த அழுத்த நிலையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். உடலில் கொழுப்பின் அளவைக் குறைத்து கொள்ளுங்கள். மருந்துகளை சார்ந்து இருப்பதை ஓரளவிற்கு தவிர்க்க பழகுங்கள். ஒருவேளை, மாரடைப்பு தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். உங்கள் தினசரி உணவில், கொழுப்பு அளவை குறைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறே, சர்க்கரை மற்றும் உப்பின் அளவையும் குறைத்துக் கொள்ளுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் இணைத்துக் கொள்ளுங்கள்.

இதய நோய் ஏற்பட ஒரு மிக முக்கிய காரணம், புகை பிடிப்பது. நிகோட்டின் உட்கொள்ளல், ரத்தக் குழாய்களை சுருக்கி, இதயம் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. கார்பன் மோனோ ஆக்சைடு, ரத்தத்தில் பிராணவாயு அளவைக் குறைக்கிறது, இதனால், ரத்தக் குழாய்களில் சேதம் ஏற்படுகிறது.

இன்றைய நாட்களில் பலரும் கணினி முன் அமர்ந்து வேலை செய்ய தொடங்கி விட்டனர். அதனால் ஒரு நாள் முழுக்கவே உட்கார்ந்தபடியே முடிந்து விடுகிறது. வழக்கமான உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் இருப்பதில்லை. ஆனால் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே இருப்பதால் இதய நோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. ஆகவே முடிந்த அளவுக்கு உட்கார்ந்திருக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ளவும். மதிய உணவிற்கு பின் சற்று நேரம் உங்கள் அறையிலேயே நடக்கலாம்.

உடற்பயிற்சி செய்வதற்கு உங்கள் நேரத்தில் சிறிதை ஒதுக்கி உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால், உடனடியாக எடை குறைப்பை மேற்கொள்ளுங்கள். உடல் பருமன், இதய நோய் ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.

கல்விச்சோலை - kalvisolai health tips

Sunday, 13 October 2019

இயற்கை தந்த சருமம்

தோல் அழற்சி நோயால் பாதிப்புக்குள்ளான தனது குழந்தைக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் குணமாகாததால் கலங்கிபோய் இருக்கிறார் ரூபம் சிங். அது ஆறு மாத குழந்தை என்பதால் டாக்டர்களுக்கும் சிகிச்சை அளிப்பது சவாலாக இருந்திருக்கிறது. ஒருகட்டத்திற்கு மேல் நோயை குணப்படுத்த முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். உடுத்திய ஆடை முதல் உபயோகித்த கிரீம் வரை அனைத்தும் சருமத்தில் உராய்ந்து குழந்தைக்கு வேதனையை கொடுத்திருக்கிறது.

அதை பார்த்து பதறிப்போன ரூபா குழந்தைக்கு பொருத்தமான சரும பராமரிப்பு பொருட்களை தேடத்தொடங்கி இருக்கிறார். எந்த பொருளும் குழந்தையின் சருமத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இறுதியில் தனது தாத்தா - பாட்டி பின்பற்றிய இயற்கை வைத்தியத்தை நாடி இருக்கிறார். அதன்படி ரசாயன கலப்பில்லாமல் சரும பராமரிப்பு பொருட்களை தயாரித்து குழந்தைக்கு உபயோகப்படுத்தி இருக்கிறார். அது நல்ல பலனை கொடுத்திருக்கிறது.

‘‘தோல் நோய் பாதிப்புக்குள்ளானதால் எனது மகள் மிகுந்த வலியை அனுபவித்தாள். பச்சிளம் குழந்தையாக இருந்ததால் அவளால் அழுகையை மட்டுமே வெளிப்படுத்த முடிந்தது. ஒரு தாயாக அவளின் வலியை குறைப்பதற்கு என்னால் முடிந்த அத்தனை விஷயங்களையும் முயற்சி செய்து பார்த்துவிட்டேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது போல் நவீன மருத்துவமும் இல்லை.

தோல் மருத்துவர்களை அணுகியபோது மருந்துகளை மட்டுமே வழங்க முடியும் என்றார்கள். குழந்தையின் நிலையை பார்த்த மருத்துவர் மருந்துகளுக்கு பதிலாக இயற்கை வைத்தியத்தை நாட சொன்னார். வெர்ஜின் தேங்காய் எண்ணெய், பருத்தி உடை உள்ளிட்டவற்றை பயன்படுத்தினோம். ஓரிரு மாதங்களிலேயே நல்ல மாற்றம் ஏற்பட்டது. அதை பார்த்து அக்கம் பக்கத்தினரும் ஆச்சரியப்பட்டார்கள்’’ என்கிறார், ரூபம் சிங்.

ரூபம் சிங் ஐதராபாத்தை சேர்ந்தவர். மகளின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் இவரை இயற்கை சரும பராமரிப்பு பொருட்கள் மீது நாட்டம் கொள்ள வைத்திருக்கிறது. தனது சகோதரி அனுபமுடன் சேர்ந்து சரும பராமரிப்பு பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறார்.

‘‘சருமத்திற்கு நன்மை தரும் இயற்கை பொருட்களை தேடிச்சென்று சேகரிக்கிறோம். அவை சருமத்தின் நலம் காக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். இயற்கை மூலப்பொருளாகவே இருந்தாலும் அதனால் சருமத்திற்கு பலன் இல்லை என்றால் அவற்றை பயன்படுத்துவதில்லை. பெட்ரோலியம் சார்ந்த மூலப்பொருட்களை கொண்டு தயாராகும் பொருட்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிப்பவை. அதிலும் குழந்தையின் மென்மையான சருமத்திற்கு பாதிப்பை அதிகப்படுத்திவிடும். ஒவ்வாமை பிரச்சினையையும் உண்டாகும்’’ என்கிறார்.

கல்விச்சோலை - kalvisolai health tips

Sunday, 22 September 2019

கர்ப்ப காலத்தில் பயணம் நல்லதா?

அதுவரை பிடித்ததாக இருந்த உணவு வகைகள் கருவுற்ற பிறகு திடீரெனப் பிடிக்காமல் போகலாம். அதன் வாசனையேகூடக் குமட்டலையும் வாந்தியையும் வரவழைக்கலாம். அதனால், எந்த உணவு பிடிக்கிறதோ அதைச் சாப்பிடலாம். சிலருக்குச் சாம்பல் போன்றவற்றின்மேல்கூட ஆசை ஏற்படலாம்.

உணவின் ருசியில் வரக்கூடிய திடீர் மாற்றமே வாந்தி, தலைசுற்றலுக்கும் காரணம். வாந்தி வரும் என்று பயந்துகொண்டு சாப்பிடாமல் இருப்பது தவறு. சிறு சிறு இடைவெளிகளில் சாப்பிடுவதன் மூலமும் அதிகப்படியான திரவ உணவைப் பருகுவதன் மூலமும் இதைக் கையாள முடியும். மிதமான வாந்தி வருபவர்கள், வைட்டமின் B-6 மாதிரியான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

கடுமையான வாந்தியால் பாதிக்கப்படும் சிலருக்கு, தண்ணீர் குடித்தால்கூட வாந்தி வரும். அப்படியென்றால் கண்டிப்பாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைவது ஆபத்தானது. எது சாதாரணமான வாந்தி, எது மிதமானது, எது சிக்கலானது என்பதை அவரவர்தான் தீர்மானிக்க இயலும். அவர்களாலேயே சமாளித்துவிடக் கூடியது என்றால் பிரச்சினை இல்லை. இரண்டு, மூன்று முறை வந்தால்கூடச் சமாளிக்கலாம். ஒரேயடி யாகச் சமாளிக்க முடியாதபோது மருத்துவரிடம் போக வேண்டும்.

முதல் மூன்று மாதங்களில் சிலருக்குத் தலைசுற்றல் இருக்கலாம். இதில் பயப்பட ஏதுமில்லை. ஓய்வெடுத்தாலே போதும். சிலருக்கு அதிகப்படி யான களைப்பு இருக்கலாம். எப்போதும் தூக்கம் வருவது போல் இருக்கலாம். காலை யில் எழுந்துவந்து சிறிது நேரம் நடமாடிவிட்ட பிறகு திரும்பவும் தூங்கத் தோன்றலாம். உடலின் உள்ளே நடக்கக்கூடிய மாற்றங்களால் வெளியே தெரியக்கூடிய அறிகுறிகள் இவை. இத னால்தான் நிறைய பெண்களுக்கு இந்த நேரத்தில் அம்மா உடன் இருக்க வேண்டும் எனத் தோன்றும்.

கர்ப்ப காலத்தில் அதிகப்படி யான காரம், உப்பு, எண்ணெய் நிறைந்த உணவைச் சாப்பிடு வதைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், வாந்தி எடுக்கும்போது இவற்றால் அதிகப்படியாக வரக்கூடிய நெஞ்சு எரிச்சலைத் தவிர்க்கலாம்.

ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடுவதைவிட, சிறு சிறு இடை வேளைகளில் பிரித்து உண்பது நல்லது. அன்னாசி, பப்பாளி போன்ற பழங்களைத் தவிர்ப்பது நல்லது. இவை கர்ப்பப்பையைச் சுருக்கி விரியச் செய்யும் தன்மையுடையவை. ஆரோக்கியமான கர்ப்பமுடையவர்களுக்கு இது பிரச்சினை இல்லை என்றாலும் சிலருக்குப் பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும். தேவையில்லாத சிக்கல். எனவே, தவிர்ப்பது நல்லது. மற்ற எல்லாப் பழங்களையும் சாப்பிடலாம்.

கர்ப்ப காலத்தில் அதிகப்படியான உப்பு சேர்க்கப்பட்ட வற்றல், ஊறுகாய் போன்றவற்றைத் தவிர்க்கலாம் அல்லது குறைவாகச் சாப்பிடலாம். பதப்படுத்தப்பட்ட உணவைவிட அவ்வப்போது சமைக்கப் பட்டவற்றைச் சாப்பிடுவது நல்லது. சாம்பல் சாப்பிடத் தோன்றும்போது ஒரு மாங்காய்த் துண்டையோ எலுமிச்சைத் துண்டையோ சுவைக்கலாம்.

முதல் மூன்று மாதங்களில் ஆரம்ப அறிகுறிகள், எதிர்பார்ப்புகள், பதற்றங்கள் குறைந்த பிறகு வருகிற இரண்டாம் மும்மாத காலத்தை நல்ல நேரம் என்றே சொல்லலாம். முதல் மூன்று மாதத்தில் வாந்திப் பிரச்சினை இருந்தவர்களில் 60 சதவீதத்தினருக்கு இந்தப் பிரச்சினை நின்றுவிடும். நன்றாகப் பசிக்க ஆரம்பித்து விடும். சாப்பிட்டால் வாந்தி வரும் என்ற பயம் போய், நன்றாகச் சாப்பிடத் தோன்றும். எதைப் பார்த்தாலும் சாப்பிடத் தோன்றும். இதில் எந்தப் பிரச்சி னையும் இல்லை. நன்றாகச் சாப்பிடலாம். ஏனென்றால், முதல் மூன்று மாதங்கள் கரு உருவாவதற்கானவை. இரண்டாவது மூன்று மாதங்கள், கரு வளர்வதற்கானவை. இந்த நேரத்தில் நன்கு சாப்பிட்டுத் தூங்கி தாய்மார்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஹார்மோன் மாற்றங்களெல்லாம் சீரான நிலைக்கு வந்துவிடும்.

சிலருக்குக் கர்ப்ப காலத்தில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை வரக்கூடும். மற்ற நேரத்தில் வரக்கூடிய நீரிழிவுக்கும் கர்ப்ப காலத்தில் வரக்கூடிய நீரிழிவுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஏனென்றால், நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளில் 99 சதவீத மாத்திரைகளை இந்த நேரத்தில் சாப்பிடக் கூடாது.

ஒன்று உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் இதைக் கட்டுப்படுத்த வேண்டும். அல்லது இன்சுலின் போட வேண்டும். கர்ப்பகால நீரிழிவு நோய் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. கர்ப்ப காலம் முடிந்த பிறகு இது தானாகச் சரியாகிவிடும். ஆனால், கர்ப்ப காலத்தில் நீரிழிவு வந்தவர் களுக்குப் பின்னாட்களில் மீண்டும் நீரிழிவு ஏற்படக்கூடும். ஏனென்றால் மன அழுத்தத்தை ஒட்டித்தான் இவர்களுக்கு நீரிழிவு வருகிறது. எனவே, பின்னாட்களிலும் அதே காரணத்தால் வர வாய்ப்பிருக்கிறது.

நீரிழிவு நோயை அலட்சியப் படுத்தக் கூடாது. அது குழந்தை யைப் பாதிக்கக்கூடும். தாயின் நீரிழிவுப் பிரச்சினை நேரடியாகக் குழந்தையைப் பாதிக்கும். குழந்தை எடை அதிகமாகப் பிறக்கலாம். தண்ணீர் அதிகரிக்கலாம். குறைப்பிரசவமாகலாம். ஆகவே, கர்ப்ப காலத்து நீரிழிவு நோயைக் கண்காணித்து அதைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். கர்ப்ப மல்லாத நாட்களில் நீரிழிவு நோயைச் சிலர் மாதக்கணக்கில்கூடப் பரிசோதிக்காமல் விடக்கூடும். ஆனால், கர்ப்ப காலத்தில் மருத்து வர் பரிந்துரைப்பதைச் செய்தே தீரவேண்டும். ஆகவேதான், இந்த நேரத்தில் மகப்பேறு மருத்துவர் தவிர பொதுநல மருத்துவரையும் சேர்த்தே பார்க்க வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம்

இதேபோல் கர்ப்ப காலத்தில் கர்ப்பத்தால் தூண்டப்பட்ட உயர் ரத்த அழுத்தம் சிலருக்கு வரக்கூடும். இது பெரும்பாலானோருக்கு முதல் பிரசவத்தின்போதுதான் வரும். முன்னதாகவே உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களும் இது பற்றிக் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், ரத்த ஓட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றங்கள் குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும். குறைப்பிரசவம், குழந்தைச் சரியான வளர்ச்சியில்லாமல் இருப்பது போன்றவை நிகழலாம். தாய்க்குப் பிரசவ காலத்துக்கு முன் உயர் ரத்த அழுத்தம் அதிகமானால் வலிப்பு வரக்கூடும். இதனால், உயர் ரத்த அழுத்தத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். இதற்காகப் பயப்பட வேண்டாம். கவனத்துடன் இருந்தால் போதும். சரியான நேரத்தில் மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறிவது, தக்க சிகிச்சை எடுத்துக்கொள்வது போன்றவற்றால் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணலாம்.

கர்ப்ப காலத்தில் வந்த உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகிய இரண்டுமே பிரசவமான ஆறு வாரத்துக்குள் சரியாகிவிடும். சிலருக்கு அப்போது ஆரம்பித்து, பிரச்சினை தொடர்ந்து நீடிக்கலாம். பரிசோதித்துப் பார்த்துவிடுவது நல்லது. கர்ப்ப காலத்தில் பயணங்களை ஒரேயடியாகத் தவிர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பாதுகாப்பாகப் பயணிக் கலாம். மோசமான வண்டிகள், சாலைகளில் பயணங்களைத் தவிர்க்கலாம். விமானப் பயணத்தையும் முடிந்தால் தவிர்க்கலாம்.

ஆரோக்கியமான கர்ப்பம் பயணத்தாலோ உடற்பயிற்சிகளாலோ கலையாது. கவனத்துடன் இருக்க வேண்டுமென்று மருத்துவர்கள் சொல்லியிருந்தால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

கல்விச்சோலை - kalvisolai health tips