Sunday, 7 October 2018

ஆவாரம்பூ டீ !

நம்முடைய ஆயுளை அதிகரிக்கச் செய்கின்ற ஆயிரமாயிரம் மருத்துவ குணங்கள் இந்த ஆவாரம்பூவில் உண்டு. அத்தகைய அரிய மருத்துவ குணம் மிக்க மூலிகை பற்றி இங்கே வரிவாகப் பார்க்கலாம். ஆவாரம்பூவானது கடுமையான வறட்சியாக காலத்திலும் இடத்திலும் கூட செழித்து வளரக் கூடிய ஒரு மருத்துவ தாவரமாகும். இந்த செடியினுடைய இலை, பூ, காய், பட்டை, வேர் என ஐந்து முக்கிய பாகங்களுமே மருந்தாகப் பயன்படும். வளரும் இடம் ஆவாரம்பூவானது கடுமையான வறட்சியாக காலத்திலும் இடத்திலும் கூட செழித்து வளரக் கூடிய ஒரு மருத்துவ தாவரமாகும். இந்த செடியினுடைய இலை, பூ, காய், பட்டை, வேர் என ஐந்து முக்கிய பாகங்களுமே மருநு்தாகப் பயன்படும். ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்று ஒரு அற்புதமான பழமொழி கூட இந்த தாவரம் பற்றி இருக்கிறது. அந்த அளவுக்கு இந்த ஆவாரையில் உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் நிறைந்திருக்கிறது. அடங்கியவை ஆவாரம்பூவில் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, டென்ஸ்போயிட்கள், டானின்கள், ஃபிளவனாயிடுகள், சபோனின், கிளைக்கோசைடு, ஸ்டீராய்டு போன்ற வேதிப் பொருள்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கல் மலச்சிக்கலை நாம் மிகச் சாதாரணமாக விட்டுவிடுகிறோம். ஆனால் இந்த மலச்சிக்கல் தான் பல நோய்கள் உண்டாவதற்கு அடிப்படை காரணமாக அமைகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு முறை உடலில் இருந்து மலம் வெளியேறினாலே போதும் நம்முடைய உடலில் நோய்கள் அண்டாது. மலச்சிக்கல் பிரச்சினை இருக்கிறவர்கள் தினமும் இரண்டு வேளை ஆவாரம்பூ டீ போட்டு குடித்தால், இந்த பிரச்சினையே அடியோடு காணாமல் போய்விடும். சருமத் தொற்று நம்முடைய சருமத்திலும் பூஞ்சைத் தொற்றுக்கள் உண்டாகும். இதுபோல் உண்டாகிற சரும பூஞ்சைத் தொற்றை சரிசெய்ய வேண்மென்றால், ஆவாரம்பூவை அரைத்து சருமத்தில் தடவலாம். அல்லது தேநீராக்கி உள் மருந்தாகவும் குடிக்கலாம். சிறுநீர் தொற்று ஆவாரம்பூ டீ செய்து குடித்தால் சிறுநீர் பாதையில் உண்டாகும் தொற்று நோய்கள குணமடையும். உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இரத்தம் பெருகும். உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். சிறுநீர் கடுப்பு குணமடையும். காய்ச்சல் அதிகப்படியான மருத்துவு குணங்கள் கொண்ட ஆவாரம்பூ தேநீரை தினமும் தொடர்ந்து பருகி வந்தால், காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் குணமடையும். தீராத காய்ச்சலும் தீர்ந்து போகும். நீரிழிவு நோய் பெரும்பாலானோர் உணவுக் கட்டுப்பாடு இன்றி, இன்சுலின் சுரப்பு சரியாக இல்லாமல், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுகிறார்கள். அப்படி சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்களுக்கு ஆவாரம் செடியினுடைய பட்டையானது சிறந்த தீர்வாக இருக்கும். ஆவாரம் பட்டையை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வர, சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேகவெட்டு, சிறுநீரில் ரத்தம் கசிதல் ஆகிய பிரச்சினைகளையும் தீர்க்கும். இதற்கு காய்ச்சும்போது, பட்டையைப் போட்டு, நன்கு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். மேனி பளபளப்பு ஆரோக்கியம் மட்டுமல்ல. அழகு விஷயத்திலும் மிகச்சிறந்த பலன்களைத் தரும் ஆவாரம்பூ. ஆவாரம்பூவை உலர வைத்து பொடி செய்து, குளிக்கும்போது மேனிக்குப் பயன்படுத்தலாம். இதனால் உடலில் ரத்தம் சுத்தமடையும். அதோடு மேனியும் தங்கமாக மின்ன ஆரம்பிக்கும். வயிற்றுப்புண் காய வைத்து பொடி செய்த ஆவாரம்பூ பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகி வந்தால், உடல்சூடு, பித்தம், நீர்க்கடுப்பு, அதிக உதிரப் போக்கு ஏற்படுதல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, குடல்புண், வயிற்றுப்புண் என வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை அத்தனையும் தீரும்

கல்விச்சோலை - kalvisolai health tips

கருப்பு சாக்லேட்

கருப்பு சாக்லேட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதம் மூன்று சாக்லேட்டுகளை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பின் அளவு 13 சதவீதம் குறைவாக இருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ‘‘அதிலுள்ள கோகோவில் உள்ளடங்கி இருக்கும் இயற்கை மூலப்பொருட்கள் ரத்த குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது’’ என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். "சாக்லேட்டில் உள்ள பிளவோனாய்டுகள் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், ரத்த குழாய்களின் வீக்கத்தை கட்டுப் படுத்தவும் உதவுகிறது’’ என்கிறார், பிரபல ஆராய்ச்சியாளர் சயாகிரிட் கிரிட்டினவாங்க். ‘‘கருப்பு நிற சாக்லேட் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அதிலிருக்கும் கோகோ உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை விளைவிக்கிறது. அதில் சர்க்கரையின் அளவும் சீராக இருக்கிறது. சாப்பிடும் சாக்லேட்டில் குறைந்தபட்சம் 75 சதவீதம் கோகோ உள்ளடங்கி இருக்க வேண்டும். அத்தகைய சாக்லேட்டுகளை சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது’’ என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது. ரத்த ஓட்டம் சீராக நடை பெறுவதற்கும், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கும் கருப்பு சாக்லேட் சாப்பிடலாம். 100 கிராம் கருப்பு சாக்லேட்டில் 75 முதல் 85 சதவீதம் வரை மெக்னீசியம், தாமிரம், இரும்பு, மாங்கனீஷ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சீலியம், தாதுக்கள் உள்ளிட்ட கோகோ மூலப்பொருட்கள் இருக்கின்றன. அதேவேளையில் இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் டாக்டர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு சாப்பிட வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai health tips

Tuesday, 2 October 2018

வெந்தயம் எப்படி உடல் எடையைக் குறைக்கிறது?

உடல் எடையை வெகுவாக குறைக்க வெந்தயத்தை எப்படியெல்லாம் சாப்பிடணும் தெரியுமா ?நம் வீட்டுச் சமையலறையில் ஏராளமான மருத்துவ குணம் நிறைந்த மற்றும் மிகுந்த கசப்பைக் கொண்ட ஓர் பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் நம் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது தெரியுமா?நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறீர்களா? என்ன செய்தாலும் உங்கள் உடல் எடை மட்டும் குறையமாட்டீங்குதா? அப்படியெனில் வெந்தயத்தைக் கொண்டு உடல் எடையைக் குறைக்க முயற்சித்துப் பாருங்கள்.சரி, இப்போது உடல் எடை குறைய வெந்தயத்தைப் எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்பது குறித்து காண்போம்.

வெந்தயம் எப்படி உடல் எடையைக் குறைக்கிறது?
வெந்தயத்தில் உள்ள காலக்டோமானன், மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரைகளை உடைத்தெறிந்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் தேவையற்ற கொழுப்புக்களைக் கரையச் செய்யும்.
வெந்தயம் வயிற்றை நிரப்பி, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும்.
வெந்தயத்தில் உள்ள ஆரோக்கியமான கார்போஹைட்ரேட், உடல் பருமனடைவதைத் தடுக்கும்.
வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலைத் தடுத்து, உடலின் மெட்டபாலிச அளவை ஊக்குவிக்கும். இதன் காரணமாக அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைக்கப்படும்.

வெதுவெதுப்பான வெந்தய நீர்
வெந்தயத்தை பொடி செய்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மேலும் வெந்தயப் பொடியை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம் நன்மை கிட்டும்.

முளைக்கட்டிய வெந்தயம்
வெந்தயத்தை முளைக்கட்ட வைத்தால், அதில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமான அளவில் நிறைந்திருக்கும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வெந்தயத்தை முளைக்கட்டச் செய்வது எப்படி?
முதலில் வெந்தயத்தை நீரில் நன்கு கழுவி, ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 12 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.பின் அந்நீரை வடிகட்டிவிட்டு, ஒரு ஈரமான மஸ்லின் துணியில் வெந்தயத்தைப் போட்டு கட்டி, அறைவெப்பநிலையில் வைக்க வேண்டும்.பிறகு 12 மணிநேரம் கழித்து, வெந்தயத்தைக் கழுவி விட்டு, மீண்டும் துணியில் கட்டி வைக்க வேண்டும். இப்படி 2-3 நாட்கள் செய்து வர, வெந்தயம் முளைக்கட்டியிருப்பதைக் காணலாம்.

நீரில் ஊற வைத்த வெந்தயம்
ஒரு கையளவு வெந்தயத்தை இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டிவிட்டு, வெந்தயத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால், நாள் முழுவதும் வயிறு நிறைந்து, பசியுணர்வு கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதன் காரணமாக கண்ட உணவுகளின் மீது நாட்டமும் குறையும்.

வெந்தயம் மற்றும் தேன்
ஒரு டம்ளர் நீரில் வெந்தயப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, அதில் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, காலையில் எழுந்ததும் குடித்தாலும், உடல் எடை குறையும்.

வெந்தய டீ
வெந்தயத்தைக் கொண்டு டீ தயாரித்துக் குடித்தால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்குவதுடன், உடல் எடையையும் குறைக்க உதவும். குறிப்பாக இது செரிமானத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். அதிலும் வெந்தய டீயுடன் பட்டைத் தூள் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம்

கல்விச்சோலை - kalvisolai health tips

Friday, 28 September 2018

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

காற்றில் உள்ள மாசுக்கள் காரணமாக (pollution) சருமத் துளைகளில் சேரும் மாசுக்கள், சருமத்தை பொலிவிழக்கச் செய்யும். இத்தகைய மாசுக்களை அகற்றி, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சி பெறும் வகையில் சுத்தம்செய்யவும், சருமத்துளைகளில் வெளிப்படும் எண்ணெய்த்தன்மை காரணமாக முகம்பொலிவிழப்பதை தடுக்கவும், முகப்பரு ஏற்படும் தாக்கத்தை கட்டுக்குள் வைக்கவும், மூக்கின்மேல் சொரசொரப்பாக தோன்றும் கரும்புள்ளிகள் (blackheads) மற்றும் வெள்ளை புள்ளிகளும் (whiteheads) நீங்கி முகம் பளிச்சிடவும், முகத்திற்கு தேவையான இரத்த ஓட்டம் சீராவதால் முதுமை தோற்றத்தை தள்ளி வைக்கவும், மேலும் மூக்கடைப்பு, ஜலதோஷம் போன்று சுவாசத்திற்கு சிரமம் தரக்கூடிய சில பிரச்சனைகளில் உடனடி தீர்வு தரக்கூடியது என ஆவி பிடிப்பதற்கு பல நல்ல பலன்கள் உண்டு. ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீரை கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்கு கொதித்தவுடன், மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன் அளவுபோட்டு, உடனே கனத்த துண்டு, கொண்டு ஆவி முகத்தில் படும்படி, கண்களைமூடி, ஆவி பிடிக்கவும். மஞ்சள் சிறந்த கிருமிநாசினி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மஞ்சள் நமது சுவாசப்பாதையை சரிசெய்வதுடன், சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள மாசுக்கள், மற்றும் பருக்களை உருவாக்கும் கிருமிகள் விரைவில் வெளியேற உதவுகிறது. மஞ்சள் மற்றும் கையளவு துளசியைப் போட்டும் ஆவி பிடிக்கலாம். எலுமிச்சை இலை அல்லது அரை மூடி எலுமிச்சை சாறு கலந்தும் ஆவி பிடிக்கலாம். வேப்பிலை கையளவு போட்டும் ஆவி பிடிக்கலாம். கடைசியில் ஐஸ் கட்டியை டவலில் சுற்றி முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஒற்றி, சருமத் துவாரங்கள் விரிவடையாமல் இருக்க ஒத்தடம் வைக்கலாம். அல்லது குளிர்ந்த நீரினால் முகத்தை அலசலாம்.

கல்விச்சோலை - kalvisolai health tips

Sunday, 2 September 2018

உறவுக்குப் பின்னால் சில உபாதைகள்

உறவுக்குப் பின்னால் சில உபாதைகள் (தீர்வுகளை தெரிந்துகொள்வோம்) கணவன்- மனைவி இடையேயான தாம்பத்ய உறவு இன்பமானதாக இருக்கலாம். ஆனால் சிலருக்கு உறவுக்குப் பின்பு சின்னச் சின்ன உடல் உபாதைகளும், சிலருக்கு தீவிரமான பாதிப்புகளும் ஏற்படலாம். உறவு கொண்ட பின்பு, பொதுவாக ஏற்படும் சில உடல் உபாதைகளைப் பற்றி அறிந்து கொள்வது ஆண்-பெண் இருபாலருக்கும் நல்லது. அடிக்கடி ஏற்படும் வலி பொதுவாக தாம்பத்ய உறவு முடிந்ததும் கணவனும்- மனைவியும் கட்டித் தழுவிக் கொள்வார்கள் அல்லது பேசிக் கொண்டிருப்பார்கள். பின்பு ஆண்கள் சீக்கிரமாக தூங்கிவிடுவார்கள். உடல் அசதி இருவருக்குமே இருந்தாலும், பெண்களுக்கு அதிகமாக வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆரம்ப கால உறவின்போது ஏற்படும் வலி என்பது வேறு. வழக்கமான உறவுக்குப் பின்பு வலி ஏற்படுவது கவனிக்க வேண்டியதாகும். வித்தியாசமான உறவு செயல்பாடுகளால் வலி உண்டாகலாம். தீவிர ஆர்வத்தால், வினோத புணர்வு இன்பத்தால் பிறப்பு உறுப்பில் தோல் கிழிவது, புண்ணாவது, நகங்கள் படுவது போன்ற காரணங்களால் இருபாலருக்குமே காயம் ஏற்படவும் வலி உண்டாகும் வாய்ப்பும் உண்டு. உடல் ஆரோக்கிய குறைபாடு காரணமாகவும் வலி உண்டாகலாம். மாறுபட்ட முயற்சி மற்றும் முரட்டுத்தனமான புணர்ச்சியாலும் தசைப்பிடிப்பு ஏற்பட்டு வலி உண்டாகலாம். சாதாரண வலி என்றால் அதனை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆரோக்கிய குறைபாடு மற்றும் தொடர் வலி இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில் ஒவ்வொரு முறை உடலுறவுக்குப் பின்பும் வலி ஏற்படுவது, கட்டி, புண்கள் வளர்வதற்கான அறிகுறியாகவும், வேறு நோய்களுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். வலி ஏற்படாமல் இருக்க நிதானமான தாம்பத்ய செயல்பாடுகள் அவசியம். நீண்ட நேர எரிச்சல் வலியைப் போலவே பலருக்கும் உடலுறவுக்குப் பின்பு எரிச்சல் உணர்வு உண்டாகலாம். நகக் கீறல், பற்குறி, அசுர வேகம் உள்ளிட்ட காரணங்களால் தோலில் ஏற்படும் கிழிசலாலும், அதிக அழுத்தம் காரணமாக ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட்டும் எரிச்சல் ஏற் படலாம். உறவுக்குப்பின்பு சுமார் ஒரு மணி நேரத்திற்குள் எரிச்சல் நின்றுபோனால் அது சாதாரணமானது. எப்போதும் தொடர்ந்து எரிச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். நிதானமான உறவு செயல்பாடு வலியையும், எரிச்சலையும் தவிர்க்கும். வாய் மற்றும் பிறப்பு உறுப்புகளை சுத்தம் செய்வதும் அவசியமாகும். இருவருமே அந்தரங்க சுத்தத்தை மேற்கொண்டால் எரிச்சலை பெருமளவு தவிர்க்கலாம். ரத்தக்கசிவு முதல் உறவின்போது மட்டுமே கன்னித்திரை கிழிவதால் லேசான ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பு உண்டு. தற்போது பெண்களின் விளையாட்டு, உடல் இயக்கம், வாழ்வியல் முறைகளால் அத்தகைய ரத்தக் கசிவு நிலை அனேகமாக ஏற்படுவதில்லை. மாதவிலக்கு முடிந்த அடுத்த நாட்களில் உறவு வைத்துக் கொண்டால், சில பெண்களுக்கு எஞ்சிய ரத்தத்துளிகள்கூட கசிந்துவரக்கூடும். மற்ற நேரங்களில் சாதாரண உறவு நிலையில் ரத்தம் கசிந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும். முரட்டுத்தனம் மற்றும் அவசரத்தால் ஏற்பட்ட ரத்தக்கசிவு என்றால் மருந்துகளை உபயோகித்து சரி செய்துவிடலாம். உறவுக்குப் பின்பு தொடர்ந்து ரத்தம் கசிவது, ஒவ்வொரு உறவின்போதும் இதே பிரச்சினை ஏற்படுவது, பிறப்பு உறுப்பின் உட்பகுதியில் புண் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இதற்கு அவசியம் மருத்துவரின் ஆலோசனையை நாடுங்கள். நமைச்சலும் அரிப்பும் உறவுக்குப் பின்பு பிறப்பு உறுப்புகளில் நமைச்சல், அரிப்பு ஏற்பட்டால் அந்தரங்க சுத்தமின்மை காரணமாக இருக்கலாம். உறவுக்கு முன்னும் பின்னும் உறுப்புகளை சுத்தமாக கழுவுவது நல்லது. ஆணுறை உபயோகிப்பது, வழுவழுப்பு தன்மைக்காக ஏதேனும் கிரீம்களை உபயோகிப்பது, உதட்டுச் சாய ரசாயனங்களின் விளைவு உள்ளிட்ட காரணங்களாலும் அரிப்பு ஏற்படலாம். உறுப்புகளை கடந்து உடலிலும் அரிப்பு ஏற்பட்டால் மருத்துவ உதவியை பெறுவது அவசியம். உடலுறவால் சிலருக்கு சிறுநீர்ப்பை நோய்த் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டு. குடல் பகுதியில் இருந்து பாக்டீரியா நுண்கிருமிகள் பிறப்பு உறுப்புகளின் வழியே நுழைவது சிறுநீர்ப்பை நோய்த் தொற்றை உருவாக்கும். உடலுறவுக்கு முன்பு அல்லது உடலுறவு முடித்த உடன் சிறுநீர் கழிப்பதை தவிர்த்தால் சிறுநீர்ப்பை நோய்த் தொற்றை தவிர்க்கலாம். அவசர உபாதைகள் தாம்பத்ய உறவு கொண்டதும் சிலருக்கு சிறுநீர் கழிக்கும் அல்லது மலம் கழிக்கும் அவசரம் ஏற்படுவதுபோல தோன்றலாம். இது முழு விருப்பம் இல்லாமல், பலவித மனநெருக்கடிக்கு இடையில் உடலுறவு கொள்வதால் ஏற்படுவதாகும். ஆண்களில் சிலருக்கு உறவுக்குப் பின்பு, திரவம் கசிவதுபோல இருக்கலாம். அது எஞ்சிய திரவமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. பெண்கள் கருவுற்ற நிலையில் உறவு கொண்டாலோ அல்லது கருத்தடை சாதனங்களை பயன்படுத்திக் கொண்டு உறவு கொண்டாலோ உட்சென்ற விந்துத்திரவம் சிறிது நேரத்தில் வெளித்தள்ளப்படக்கூடும். இது இயற்கையானதுதான். அந்தரங்க சுத்தமும், நிதானமான செயல்பாடுகளும் இருந்தால் பெரும்பாலும் உடலுறவுக்குப் பின்னால் அவஸ்தைகள் எதுவும் ஏற்படுவதில்லை என்பதை ஆண்களும், பெண்களும் கவனத்தில்கொள்வது மிக அவசியம்.

கல்விச்சோலை - kalvisolai health tips