Saturday, 16 December 2017

பாகற்காயும் சர்க்கரை நோயும்

பாகற்காயும் சர்க்கரை நோயும் | கசப்புச் சுவை கொண்டது என்றாலும் பல இனிப்பான ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கக்கூடியது, பாகற்காய். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாக பாகற்காய் பரிந்துரைக்கப்படுகிறது. பாகற்காயில் உள்ள சரண்டின், மொமார்டின் வேதிப்பொருட்கள்தான் சர்க்கரை நோய்க்கு எதிரான கவசமாகத் திகழ்கின்றனவாம். பாகற்காய் ரத்தச் சர்க்கரை அளவை மட்டும் குறைக்கக் கூடியதல்ல. ரத்த கொழுப்பு வகைகளைக் குறைப்பதிலும், செல் அழிவைக் கட்டுப்படுத்தும் ஆன்டி ஆக்சிடென்டையும் கொண்டிருப்பதுதான் இந்தக் காயின் சிறப்பு. வெந்தயம், கறிவேப்பிலை போன்றவையும் இப்படிப்பட்ட சிறப்புத்தன்மையைக் கொண்டிருக்கின்றன. பாகற்காய் சாப்பிடுவதால் நாம் உட்கொள்ளும் பிற நவீன மருந்துகளின் செயல்பாட்டில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் இரண்டின் தன்மையும் ஒன்றோடு மற்றொன்று மாறுபடாதிருக்கக் குறைந்தபட்சம் 45 நிமிட இடைவெளி இருந்தால் நல்லது. அதேநேரம் பல சித்த மருந்துகளுக்குப் பத்தியமாகப் பாகற்காய் நீக்கப்பட அறிவுறுத்தப்படுவதும் உண்டு. எனவே, சித்த மருந்து எடுத்துக்கொள்ளும் காலத்தில் நமது மருத்துவரின் ஆலோசனைக்குப் பின் பாகற்காய் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கலாம். அதிக மாவுச்சத்துப் பொருட்களைச் சாப்பிடுவது, உடலுழைப்பு குறைவு, அதிக உடல் எடை அல்லது அதிக மன உளைச்சல் ஆகியவை மட்டுமே நீரிழிவு நோய்க்கான முழுமையான காரணம் இல்லை. வேறு பல காரணங்களும் இருக்கின்றன. எது எப்படியிருந்தாலும், இன்று சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது, தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது உண்மை. பாரம்பரியச் சித்த மருத்துவப் புரிதல்படி பார்த்தால், மேக நோயில் ஒரு வகையாகவே நீரிழிவு பார்க்கப்படுகிறது. இதைப் பல வகைகளில் சீர்ப்படுத்த வேண்டும். இல்லையென்றால், பல பின்விளைவு நோய்களைத் தரும் என்று அன்றே எடுத்துக்கூறியிருக்கிறார்கள். எனவே, நீங்கள் எந்தத் துறை சார்ந்த மருந்துகளை உட்கொண்டுவந்தாலும், உணவில் கவனம், சரியான உடற் பயிற்சி, உள்ளத்தையும் உடலையும் ஒருங்கே சீரமைக்கும் யோகாசனப் பயிற்சி ஆகிய அனைத்தும் சேர்ந்திருந்தால் மட்டுமே படிப்படியாக சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். எனவே, சர்க்கரை நோய்க்குக் கடிவாளம் போட பாகற்காய் போன்ற உணவுப்பொருட்களும் உதவும் என்றாலும், முழுக்க முழுக்க அதை மட்டுமே முழுக்க முழுக்க நம்பியிருக்கக் கூடாது.

Sunday, 12 November 2017

வாரத்துக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்?

வாரத்துக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்? | சில உணவுப்பொருட்களை நாம் விரும்பியும், தயங்கியும் அணுகுவோம். அப்படிப்பட்ட ஒன்றுதான் முட்டை. வாரத்துக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்? இதற்கு, 'மூன்று' என்பதுதான் உணவியல் நிபுணர்களின் பதில். முட்டையில் நம் உடலுக்குத் தேவையான பல சத்துகள் நிறைந்துள்ளன. முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, டி, ஈ., கே, பி12, பாலேட், லூட்டின், சீசாந்தின் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. சிலர் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடு வதைத் தவிர்ப்பார்கள். மருத்துவர்களின் அறிவுரையின்றி அவ்வாறு மஞ்சள் கருவை சாப்பிடுவதைத் தவிர்ப்பதால் நாம் சத்துகளை இழக்கத்தான் செய்கிறோம். மேலும், முட்டையில் மற்ற உணவுப்பொருட்களில் இல்லாத 'சோலின்' என்ற வைட்டமின் பி சத்தும் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. முட்டையில் உள்ள சீசாந்தின், கண் நோய்கள் வராமல் தடுக்கிறது. செலினியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல நுண்ணூட்டச் சத்துகளும் முட்டையில் உள்ளன. முட்டை மருத்துவரீதியில் அல்புமினுக்குப் பெயர் பெற்றது. ரத்தத்தில் அல்புமின் குறைவாக இருப்பவர்கள் முட்டையின் வெள்ளைக் கருவைச் சாப்பிடலாம். முக்கியமாக, 'டயாலிசிஸ்' செய்து கொண்டிருப்பவர்களுக்கும், கல்லீரல் தொடர்பான நோய்கள் உள்ளவர்களுக்கும் அல்புமின் குறைவாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அவர்கள், முட்டையை அவித்து அதன் வெள்ளைக்கருவை உட்கொள்ளலாம். ஒரு முட்டையில் 212 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. இது நமது ஒருநாளின் தேவைக்குப் போதுமானதாகும். வளரும் குழந்தைகளுக்குத் தினமும் ஒரு முட்டையை வேகவைத்துக் கொடுத்தால் அவர்களின் சீரான வளர்ச்சிக்கு உதவும். சாதாரணமாக ஒருவர், வாரத்துக்கு 3 முட்டைகள் சாப்பிடலாம். கர்ப்பிணிகளும், தாய்மார்களும் தினம் ஒரு வேகவைத்த முட்டையை உண்ணலாம்.

Thursday, 19 October 2017

தொப்புளில் எண்ணை போடுங்கள்!

தொப்புளில் எண்ணை போடுங்கள்! நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது. அறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது. நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்! அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும். காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும். நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது. நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா? நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும். தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது. கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும். முழங்கால் வலி: தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும். மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும். ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்? நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் . ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

Sunday, 25 June 2017

சர்க்கரை நோய் காரணமாக நாடு முழுவதும் 6 கோடியே 90 லட்சம் பேர் பாதிப்பு அப்போலோ மருத்துவமனை தகவல்

சர்க்கரை நோய் காரணமாக நாடு முழுவதும் 6 கோடியே 90 லட்சம் பேர் பாதிப்பு அப்போலோ மருத்துவமனை தகவல் | நாடுமுழுவதும் சர்க்கரை நோயால் 6 கோடியே 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அப்போலோ மருத்துவமனையின் செயல் துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி தெரி வித்தார். அப்போலோ மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோய் குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நேற்று தொடங்கியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த சர்க்கரை நோய் நிபுணர்கள் கருத்தரங்கில் பங்கேற்றுள்ளனர். இந்த சர்வதேச கருத்தரங்கு குறித்து அப்போலோ மருத்துவமனையின் செயல் துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சர்க்கரை நோயால் 6 கோடியே 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 கோடி பேர் சர்க்கரை நோய் வருவதற்கான ஆரம்ப நிலையில் உள்ளனர். சர்க்கரை நோய் மற்றும் அது சார்ந்த பிரச்சினைகளால் 13 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சர்க்கரை நோய் இதயம், சிறுநீரகம், கண்கள் உள்ளிட்ட உறுப்புகளை தாக்குகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட இருப்பதை 70 சதவீதம் பேருக்கு முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியும். சர்க்கரை நோய் சிகிச்சையில் நவீன தொழில்நுட்பம், பிற உறுப்புகள் பாதிக்கப்படுவதை தடுத்தல், விரைவில் நோய் கண்டறிதல் உள்ளிட்ட சர்க்கரை நோய் குறித்த பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோயின் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்காக நாடுமுழுவதும் 55 அப்போலோ சர்க்கரை நோய் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 2.5 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 6 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்த 1.5 லட்சம் பேருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்

Tuesday, 6 June 2017

கடுக்காய் என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி


கடுக்காய் என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி | நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். Aska Svn ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது? அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம். கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்… "காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே.- காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்