உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு தீர்வு காண நீண்ட காலம் மாத்திரை உட்கொள்வது சரியான வழிமுறை அல்ல. தொடர்ந்து மாத்திரைகள் உட்கொள்ளும்போது வேறு விதமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதேவேளையில் ரத்த அழுத்தத்தை சீராக்காவிட்டால் இதய நோய்கள் எற்படவும் வழிவகுத்துவிடும். ஆரோக்கியமான உணவு வகைகளுடன் ஜூஸ் பருகுவதன் மூலம் ரத்த அழுத்தத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரலாம். மாதுளை பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் ரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவி புரியும். மேலும் பல்வேறு நோய் தொற்றுவில் இருந்தும் உடலை பாதுகாக்கும்.
ரத்த சோகை இருப்பவர்களுக்கும் இது ஏற்றது. ஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்வதிலும் மாதுளை முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்பிணி பெண்கள் மாதுளை ஜூஸ் பருகுவதன் மூலம் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். அதேவேளையில் நீரிழிவு நோயாளிகள் மாதுளை ஜூஸ் பருக கூடாது. ரத்த அழுத்த பாதிப்புக்கு ஆளானவர்கள் ஆரஞ்சு ஜூஸ் பருகுவது நல்லது. அதனை தொடர்ந்து பருகுவதன் மூலம் வளர்சிதை மாற்றமும் மேம்படும். ஆரஞ்சு ஜூஸ் தொடர்ந்து பருகி வந்தால் கண்புரை மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் ஆரஞ்சு ஜூஸில் இருக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் நாள்பட்ட நோய்களை குணப்படுத்தும் தன்மையும் கொண்டவை.
No comments:
Post a Comment